மார்ச் 20, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
தவக்காலத்தின் 2ம் ஞாயிறு
Genesis 12:1-4a
Ps 33:4-5, 18-20, 22
2 Timothy 1:8b-10
Matthew 17:1-9
மத்தேயு நற்செய்தி
அதிகாரம் 17
இயேசு தோற்றம் மாறுதல்
(மாற் 9:2 - 13; லூக் 9:28 - 36)
1 ஆறு நாள்களுக்குப் பின்பு இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் ஓர் உயர்ந்த மலைக்குத் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார்.2 அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அவருடைய ஆடைகள் ஒளிபோன்று வெண்மையாயின.3 இதோ! மோசேயும் எலியாவும் அவர்களுக்கு முன் தோன்றி இயேசுவோடு உரையாடிக்கொண்டிருந்தனர்.4 பேதுரு இயேசுவைப் பார்த்து, ' ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைக்கட்டுமா? இது உமக்கு விருப்பமா? ' என்றார்.5 அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது ஒளிமயமான மேகம் ஒன்று அவர்கள்மேல் நிழலிட்டது. அந்த மேகத்தினின்று, ' என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவர்பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள் ' என்று ஒரு குரல் ஒலித்தது.6 அதைக் கேட்டதும் சீடர்கள் மிகவும் அஞ்சி முகங்குப்புற விழுந்தார்கள்.7 இயேசு அவர்களிடம் வந்து அவர்களைத் தொட்டு, ' எழுந்திருங்கள், அஞ்சாதீர்கள் ' என்றார்.8 அவர்கள் நிமிர்ந்து பார்த்தபோது இயேசு ஒருவரைத்தவிர வேறு எவரையும் காணவில்லை.9 அவர்கள் மலையிலிருந்து இறங்கிவந்தபோது இயேசு, ' மானிட மகன் இறந்து உயிருடன் எழுப்பப்படும்வரை இக்காட்சியைப்பற்றி எவருக்கும் சொல்லக்கூடாது ' என அவர்களுக்குக் கட்டளையிட்டார்
(thanks www.arulvakku.com)
அந்த உயர்ந்த மலையில், இயேசுவின் முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது, உண்மையான இயேசுவின் ஒளி எல்லோருக்கும் தெரிந்தது. கடவுள் தந்தை " என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவர்பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள் " என்று சொன்னார்.
நாம் இயேசுவின் வார்த்தைகளை, ஒவ்வொரு முறை கேட்கும்போதும், நமது விசுவாசத்தை இன்னும் தெளிவும், ஞாணமும் தெரிய இயேசுவிடம் நம்மை அளிக்கும்போது , இந்த தோற்ற மாறுதல் நடக்கிறது. எனினும், இப்போது, நமது தோற்றமும் மாறுகின்றது.
இந்த தவக்காலத்தில், நாம் கிறிஸ்துவை போல இருக்கிறோமோ என்று பார்த்து, நமது பாவ வாழ்வை விட்டு, மனந்திரும்பொழுது, நம்மில் இருக்கும் இருளை இயேசுவின் ஒளியால் நிரப்ப அனுமதிக்கிறோம். அதனால், மற்றவர்கள் நம் மூலம் இயேசுவை பார்க்கிறார்கள். இயேசுவும், நம்மில் அவரது ஒளியை ஒளிரச்செய்கிறார்.
இயேசுவின் தோற்றம் மாற்றத்தினால், நாமும் நமது அடையாளத்தை காட்டுகிறது. நமது உண்மையான அடையாளம் என்ன? கடவுளின் உருவத்தினால் நாம் உருவாக்கபட்ட்டிருப்பதும், நம்மில் கடவுள் இருப்பதும் ஆகும்.
இயேசு இந்த மலையில் நடந்த தோற்றம் மாறுதல் அனுபவத்திற்கு பிறகு, சிலுவையின் வேதனைகளை ஏற்று கொள்ள தயாரானார். நாமும், கிறிஸ்துவின் ஒளியால், மாற்றபட்ட பிறகு, , நாமும்,மலையை விட்டு இறங்கி, இயேசுவை இவ்வுலகிற்கு காட்ட வேண்டும். எனினும், திமோத்தியின் வாசகத்தில் கூறியுள்ளது போல, நற்செய்தியை பகிர்ந்து கொள்ளும்பொழுது, நிச்சயம், கடினமாக இருக்கும். ஆனால், ஒவ்வொரு கல்வாரி சிலுவைக்கு பிறகு, ஒரு ஈஸ்டர் இருக்கும் என்பது நமக்கு ஆறுதலை தரும்.
முதலில், நாம் மலையில், நமது நேரத்தை செலவிட வேண்டும். நிறைய நேரம் அங்கே இருந்து, கடவுளின் ஆற்றல் நம்மில் வரும் வரை ஜெபம் செய்திடல் வேண்டும். பிறகு, நாம் தயாராகிவிட்டோம், உற்சாகபடுத்த படுவோம், நாம் மீட்கப்பட்டுவிட்டோம். அதன் மூலம், நமது பாதையில் ஏற்படும் கஷ்டங்களை நம்மால் தாங்கி கொள்ள முடியும்.
நன்றாக கேளுங்கள். கடவுள் உங்களை பற்றி என்ன சொல்கிறார் தெரியுமா? அந்த தபோர் மலையில் கடவுள் இயேசுவை பற்றி என்ன சொன்னாரோ, அதையே தான் உங்களை பற்றியும் சொல்கிறார். : "இவர் என் அன்பார்ந்த மகன், இவருக்கு செவி சாயுங்கள்" சிலர் உங்க்ளிடம் கேட்பர், சிலர் கேட்க மாட்டார்கள். ஆனால் நாம் எப்படி கடவுளின் ஒளியுடன் ஒளிர்கிறோம் என்பது, எத்தனை பேர் நம்மிடம் கேட்கிறார்கள் என்பது பொறுத்து அல்ல. நமது தோற்ற மாற்றம், இயேசு நம் மேல் அன்பு கொண்டு , நம்மை பரிசுத்த வாழ்விற்கு வாழ அழைப்பதல் ஏற்படுகிறது.
© 2011 by Terry A. Modica
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment