மார்ச் 6, 2011 ஞாயிறு நற்செய்தி
ஆண்டின் 9ம் ஞாயிறு
Deut 11:18, 26-28, 32
Ps 31:2-4, 17, 25
Rom 3:21-25, 28
Matt 7:21-27
மத்தேயு நற்செய்தி
அதிகாரம் 7
சொல்லும் செயலும்
(லூக் 13:25 - 27)
21 ' என்னை நோக்கி, ' ஆண்டவரே, ஆண்டவரே ' எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்.22 அந்நாளில் பலர் என்னை நோக்கி, ″ ஆண்டவரே, ஆண்டவரே, உம் பெயரால் நாங்கள் இறைவாக்கு உரைக்கவில்லையா? உம் பெயரால் பேய்களை ஓட்டவில்லையா? உம் பெயரால் வல்ல செயல்கள் பல செய்யவில்லையா? ″ என்பர்.23 அதற்கு நான் அவர்களிடம், ' உங்களை எனக்குத் தெரியவே தெரியாது. நெறிகேடாகச் செயல்படுவோரே, என்னைவிட்டு அகன்று போங்கள் ' என வெளிப்படையாக அறிவிப்பேன்.
இருவகை அடித்தளங்கள்
(லூக் 6:47 - 49)
24 ' ஆகவே, நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படுகிற எவரும் பாறை மீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார்.25 மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டின் மேல் மோதியும் அது விழவில்லை. ஏனெனில் பாறையின்மீது அதன் அடித்தளம் இடப்பட்டிருந்தது.26 நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படாத எவரும் மணல்மீது தம் வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பாவார்.27மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங் காற்று வீசியது; அவை அவ்வீட்டைத் தாக்க, அது விழுந்தது; இவ்வாறு பேரழிவு நேர்ந்தது.
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தியில், இயேசுவின் உண்மையான சீடராக எப்படி இருக்க வேண்டும் என்று விளக்குகிரார்: தந்தையின் திருவுளப்படி நடக்க வேண்டும். இயேசுவிடமிருந்து கற்று கொண்டததை உங்கள் தினசரி நடவடிக்கையாக கொள்ளுங்கள்.
இயேசு கிறிஸ்து நற்செய்தி மூலமாகவும், திருச்சபையின் போதனைகள் மூலமும் நம்மிடம் தொடர்ந்து பேசி வருகிறார். ஆனால் அந்த வார்த்தைகளை கேட்பது மட்டும் செய்கிறோம் என்பதோடு இருந்து விட கூடாது. நமது மீட்பு, எப்படி அந்த வார்த்தையை நாம் கடைபிடிக்கிறோம் என்பதில் தான் நமது மீட்பு இருக்கிறது. நாம் இயெசுவின் மேல் விசுவாசம் வைத்துள்ளோம் என்று சொல்லி கொண்டு, அவரின் போதனைகளை நாம் செய்யாமல் இருந்தால், நாம் வெறுமனே "கடவுளே, கடவுளே" என்று சொல்பவர்களாக மட்டும் தான் இருப்போம். நாம் கடவுளை பின் தொடர்ந்து மோட்சத்திற்கு செல்வதில்லை.
இயேசு குறிப்பிட்டு சொல்வதை போல, இறையரசோடு நமது தின வாழ்வில் ஒன்றித்து, இவ்வுலக வாழ்வில் இறையரசின் தூதுவராய் இருப்போம், மேலும், நாமும் நமக்கு வரும் சோதனைகளையும், கேளியையும், இம்சையையும் நம்மால் தாங்க்கொள்ள முடியும். நமது நடவடிக்கைகளினால், பெரிய ப்ரச்னை உண்டானால் கூட நம்மால் அதனை எதிர்கொள்ள முடியும். ஏனெனில், நாம் கிறிஸ்துவின் மரணத்திற்கும், மீட்பிற்கும் இடையிலான காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் கடவுளின் அருளாலும், அவரது ஆட்சியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், அவரது பலம், இவ்வுலக வாழ்வை வெற்றி கொள்ளும்.
இயேசுவின் போதனைகள் நமது வாழ்வை மாற்ற நாம் அனுமதிக்காமல் இருக்கும்பொழுது, நமக்கு சோதனைகள், ப்ரச்னைகள் வந்தால், அவைகள் நம்மை அழித்து விடும், நம் அமைதி குலைந்து விடும். நமது சந்தோசம் போய்விடும். கடவுள் நம்மை அன்பு செய்கிறார் என்பதையும் நாம் மறந்து விடுவோம். கிறிஸ்துவோடு நாம் ஒன்றித்து இந்த சோதனைகளை எதிர் கொண்டோமானால், நம்மால் இந்த சோதனைகளை எதிர்கொள்ள முடியும். இந்த ப்ரசனைகள் முடிய , கிறிஸ்துவின் ஆற்றலை நாம் அனுமதிக்க வில்லையென்றால், இந்த ப்ரச்னைகள் முடிய இன்னும் கால் தாமதம் ஆகும்.
கிறிஸ்துவின் போதனைகளை இவ்வுலகிற்கு எடுத்து செல்ல வில்லையென்றால், அநியாயங்களும், அநீதியும் மற்றவர்களை அழித்து விடும். அவர்களின் அழிவிற்கு நாம் உடந்தையாகிவிடுகிறோம். அக்கறையின்மை ஒரு பாவமாகும், இது மோட்சத்திற்கு செல்லும் வழியில்லை.
நமது இறப்பிற்கு பிறகு, மோட்சத்திற்கு செல்வதற்கு, நாம் கிறிஸ்துவோடு சேர்ந்து, அவரது சிலுவையோடு நம்மையும் இனைத்து,மற்றவர்கள் மேல் அக்கறை கொண்டு, சாத்தானிற்கு எதிராக இருந்தோமானால், நாம் கடவுளின் சாட்சியாக இருப்போம்.
நாம் கிறிஸ்துவோடு இருப்பதால், பல ப்ரச்னைகள் நம்மை வந்து சேரும், ஆனால் நாம் வீழ்ந்து விடமாட்டொம். ஆனால், இன்னும் நாம் உறுதியாகவும், பரிசுத்தமாகவும் ஆவோம்.
© 2011 by Terry A. Modica
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment