செப்டம்பர்
9, 2012, ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின்
23ம் ஞாயிறு
Is 35:4-7a
Ps 146:7-10 (with 1b)
James 2:1-5
Mark 7:31-37
Ps 146:7-10 (with 1b)
James 2:1-5
Mark 7:31-37
மாற்கு நற்செய்தி
அதிகாரம் 7
காதுகேளாதவர்
நலம் பெறுதல்
31 மீண்டும் இயேசு தீர் பகுதியை விட்டு, சீதோன் வழியாகச்
சென்று தெக்கப்பொலி பகுதி நடுவே வந்து, கலிலேயக் கடலை அடைந்தார்.32 காது
கேளாதவரும் திக்கிப்பேசுபவருமான ஒருவரைச் சிலர் அவரிடம் கொண்டு வந்து, அவர்மீது கைவைத்துக்
குணமாக்குமாறு அவரை வேண்டிக் கொண்டனர்.33 இயேசு அவரைக் கூட்டத்திலிருந்து
தனியே அழைத்துச் சென்று, தம் விரல்களை அவர் காதுகளில் இட்டு, உமிழ்நீரால் அவர் நாவைத்
தொட்டார்.34 பிறகு வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு,
அவரை நோக்கி ' எப்பத்தா
' அதாவது ' திறக்கப்படு ' என்றார்.35 உடனே அவருடைய காதுகள் திறக்கப்பட்டன;
நாவும் கட்டவிழ்ந்தது. அவர் தெளிவாகப் பேசினார்.36 இதை எவருக்கும்
சொல்ல வேண்டாமென்று அவர்களுக்கு அவர் கட்டளையிட்டார். அவரது கட்டளைக்கு நேர்மாறாக இன்னும்
மிகுதியாய் அவர்கள் அதை அறிவித்து வந்தார்கள்.37 அவர்கள் அளவு கடந்த
வியப்பில் ஆழ்ந்தவர்களாய், ' இவர் எத்துணை நன்றாக யாவற்றையும் செய்து வருகிறார்! காதுகேளாதோர்
கேட்கவும் பேச்சற்றோர் பேசவும் செய்கிறாரே! ' என்று பேசிக்கொண்டார்கள்.
(thanks to www.arulvakku.com)
இன்றைய
ஞாயிறின் நற்செய்தியில், கடவுள் மாற்று திறனாளிடம்
தமது அக்கறையை காட்டுகிறார். நாம் இயேசுவை போலவே
அவர்களிடம் அக்கறை காட்டுகிறோமோ?
நாமெல்லாருமே
ஒரு சில குறைகளோடு தான்
இருக்கிறோம். நம்மிடம் கண் இருக்கலாம் ஆனால்
பல நேரங்களில் குருடர்களாக தான் இருக்கிறோம். ஜேம்ஸ்
வாசகத்தில் இருந்து, நாம் எப்படி குருடர்களாக
இருக்கிறோம் என்பதை பார்க்கிறோம்!
எப்படி
ஒருவர் உடை அணிந்திருக்கிறார் என்று
பார்க்கிறோமோ ஒழிய, அவர் உள்ளத்தில்
ஊடுருவி பார்ப்பதில்லை, கடவுள் கொடுத்த அன்பளிப்புகளையும்,
திறமைகளையும், கடவுளின் மறு உருவமாக உள்ளதையும்
நாம் பார்க்க தவறி விடுகிறோம்.
நாமாக ஒரு தீர்மானத்திற்கு வந்துவிடுகிறோம்.
ஒருவருடைய ஆண்ம ஆற்றலை பார்க்காமல்,
அவருடைய/அவளுடைய உள்ளத்தின் உள்ளே
பார்க்காமல் , அவர்களுடைய சொத்தையோ, செல்வத்தையோ, பதவியையோ , படிப்பையோ பார்த்து அவர்களை மதித்தால், நாம்
தீர்ப்பளிப்பவராக இருக்கிறோம்.
கடவுளால்
மட்டும் தான் ஒவ்வொரு மனிதனிடமும்
உள்ள நல்ல விசயங்கள், குணங்கள்
தெரியும். அப்படி இருந்தும், கடவுளை
போல நாம் மற்றவர்களை மதிப்பீடு
செய்கிறோம். ஒருவரின் வார்த்தையிலிருந்து, அதற்கான நோக்கத்தையும், தேடுதலையும்,
கடவுள் ஒருவருக்குதான் அறிந்து கொள்ள முடியும்.
ஆனால் ஒருவர் சொல்லி முடித்த
உடனே நாம்
ஒரு முடிவுக்கு வந்து விடுகிறோம். உடனே
கனிப்பது, நம்மை இன்னும் உண்மையாகவே
குருடராக இருப்பதை காட்டுகிறது.
இயேசு இவ்வாறு நம்மிடத்தில் சொல்ல
விரும்புகிறார்:
"எப்பாதா!
உங்களுடைய கண்களும், காதுகளும், மணமும் நன்றாக திறந்து
உண்மைகளை அறிந்து கொள்ளுங்கள்!" அதன்
மூலம் நமக்கு குணமடைதல் கிடைக்கும். அதனால் நாம் கேட்பதையும்,
பார்ப்பதையும் அறிந்து , மெதுவாக அதற்கு பதில்
தர வேண்டும். நாம் பார்ப்பதையும், கேட்பதையும்
நம்ப முடியவில்லை. புதிதாக நாம் அறிந்து
கொள்ள , பொறுமையோடு, ஞானத்திற்காக ஜெபித்து , அறிந்து கொள்ள முற்பட
வேண்டும்.
இதற்காக
தான், மற்றும் பல காரணங்களுக்காகவும்,
இயேசு நமக்கு பரிசுத்த ஆவியை
கொடுத்தார். கடவுளின் ஆவி நமக்காக எல்லாவற்றையும்
அர்த்தத்தோடு நமக்கு சொல்ல அனுமதித்தால்,
கடவுள் போல் நாமும் எதிர்வினை
செய்வோம். கொஞ்சம் புரிதலோடு இல்லாமால்,
விசுவாசத்துடனும், கருணையுடனும் நமது செயல்கள் இருக்கும்.
© 2012 by Terry A. Modica
No comments:
Post a Comment