Friday, September 28, 2012

செப்டம்பர் 30 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை



செப்டம்பர் 30 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 26ம் ஞாயிறு

Num 11:25-29
Ps 19:8, 10, 12-14
James 5:1-6
Mark 9:38-43, 45, 47-48



மாற்கு நற்செய்தி
அதிகாரம் 9 38-43, 45, 47-48

இயேசுவின் பெயரால் பேய் ஓட்டியவர்
(லூக் 9:49 - 50)
38 அப்பொழுது யோவான் இயேசுவிடம், ' போதகரே, ஒருவர் உமது பெயரால் பேய்கள் ஓட்டுவதைக் கண்டு, நாங்கள் அவரைத் தடுக்கப் பார்த்தோம். ஏனெனில் அவர் நம்மைச் சாராதவர் ' என்றார்.39 அதற்கு இயேசு கூறியது: ' தடுக்க வேண்டாம். ஏனெனில் என் பெயரால் வல்லசெயல் புரிபவர் அவ்வளவு எளிதாக என்னைக் குறித்து இகழ்ந்து பேச மாட்டார்.40 ஏனெனில் நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்.41 நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்கள் என்பதால் உங்களுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவர் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ' 

பாவத்தில் விழச்செய்தல்
(மத் 18:6 - 9; லூக் 17:1 - 2)
42 ' என்மீது நம்பிக்கைகொண்டுள்ள இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச் செய்வோருடைய கழுத்தில் ஓர் எந்திரக் கல்லைக் கட்டி, கடலில் தள்ளிவிடுவதே அவர்களுக்கு நல்லது.43 உங்கள் கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டி விடுங்கள். நீங்கள் இரு கையுடையவராய் அணையாத நெருப்புள்ள நரகத்துக்குள் தள்ளப்படுவதைவிட, கை ஊனமுற்றவராய் நிலைவாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது. 45 நீங்கள் இரு காலுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட கால் ஊனமுற்றவராய் வாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது. 47 நீங்கள் இரு கண்ணுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட ஒற்றைக் கண்ணராய் இறையாட்சிக்கு உட்படுவது உங்களுக்கு நல்லது.48 நரகத்திலோ அவர்களைத் தின்னும் புழு சாகாது; நெருப்பும் அவியாது.
(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியில், இயேசு "நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்."  மக்களோடு நாம் தொடர்பு கொள்ள வேண்டிய விசயங்களில், இறையரசில் இதே போல் பல ஆச்சரியங்கள் உள்ளன.
சில நேரங்களில், சிலர் நமக்கு எதிராக இருக்கிறார்கள் என நினைப்போம், ஆனால், உண்மையில், அப்படி அவர் இருந்திருக்க மாட்டார். எடுத்து காட்டாக, சிலர் உண்மையை பேசுவர், அது நமக்கு பிடிக்காமல் போகலாம், நமக்கு எதிரியாக நாம் நினைக்கலாம், ஆனால் அவர்கள் கடவுளின் பிரதிநிதியாக இருப்பர்.
இதற்கு மாறாக, சிலர் நம்மோடு இனைந்து இருப்பர், ஆனால், அவர்களின் உள்நோக்கத்திற்காக நம்மோடு இனைந்து இருப்பர். ; கடவுள் நம் வாழ்வில் கொண்டுள்ள நோக்கத்திற்காக நமக்கு உதவுவதில் அவர்களுக்கு விருப்பமில்லை.
மேலும் சில நேரங்களில், சிலர் கடவுளுக்காக சேவை செய்வார்கள், ஆனால் நாம் விருபியபடி, அவர்கள் செய்ய மாட்டார்கள். அதனால், கடவுள் விரும்பியபடி அவர்கள் இறைசேவையை செய்யவில்லை என நாமாக அனுமானித்து கொள்கிறோம்நீங்கள் யாரையாவாது உங்கள் தேவைகளுக்காக  வேண்டிகொள்ள சொல்லி , அவர்கள் அதற்கு எதிராக ஜெபித்து உள்ளார்களா ?
பல வருடங்களுக்கு முன், என்னுடைய கணவரின் கம்பெனியிலிருந்து பலரை வேலையை விட்டு நீக்கினார்கள், என்னுடைய நண்வர் ஒருவரிடம், என் கணவருக்கு வேறு வேலை கிடைக்கவேண்டும் என்று வேண்டிகொள்ள சொன்னேன். ஆனால் நண்பரோ, அந்த கம்பெணி இன்னும் வளர வேண்டும், என் கணவர் அங்கேயிருந்து நீக்க பட கூடாது என்று வேண்டிகொண்டார். அந்த ப்ரார்த்தனையை நான் விரும்பவில்லை. ஆனால், கடவுள் என்ன நினைத்தாரோ, அதனையே என் நண்பர் வேண்டிகொண்டார் என்று என்னால், இறுதியாக புரிந்து கொள்ள முடிந்தது.
சிலர் நமக்கு எதிராக இருக்கின்றனர் என்பதனை கண்டறிய, நாம் நம்மையே , நமது டென்சனிலிருந்து விடுபட்டு , அதனிடமிருந்க்டு விலகி, இயேசுவோடு அமைதியில் அமர்ந்து, நாம் கண்டறிய வேண்டும். நமது பயத்தையும், கோபத்தையும் கடவுளிடம் ஒப்படைத்து, அவர்களை மனதார மன்னித்தோமென்றால், கடவுளால், நமக்கு சரியான பதில் கிடைக்கும்.
சிலர் உண்மையாகவே, நமக்கு எதிராக இருந்தால், அமைதியாக ஜெபத்தில் ஆழ்ந்தால், பரிசுத்த ஆவியிடமிருந்து ஞாணத்தையும், ஆறுதலையும் கேட்டால், கடவுள் நம்மோடு இருக்கிறார் என்பதை நாம் அறிய முடியும், அது தான் நமக்கு முக்கியமானது. அவர் நமக்கு உற்சாகத்தையும், சக்தியையும் கொடுத்து, நமது ப்ரச்னைகளை கையாள நமக்கு உதவுகிறார்.
© 2012 by Terry A. Modica

Friday, September 21, 2012

செப்டம்பர் 23, 2012, ஞாயிறு நற்செய்தி, மறையுரை



செப்டம்பர் 23, 2012, ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 25ம் ஞாயிறு
Wis 2:12, 17-20
Ps 54:3-6, 8
James 3:16–4:3
Mark 9:30-37

மாற்கு நற்செய்தி
Description: http://www.arulvakku.com/images/pointmsg.jpg

Description: http://www.arulvakku.com/images/dot.jpgஅதிகாரம் 9
இயேசு தம் சாவை இரண்டாம் முறை முன்னறிவித்தல்
(மத் 17:22 - 23; லூக் 9:43 - 45)
30 அவர்கள் அங்கிருந்து புறப்பட்டுக் கலிலேயா வழியாகச் சென்றார்கள். அது யாருக்கும் தெரியக்கூடாது என்று இயேசு விரும்பினார்.31 ஏனெனில், ' மானிடமகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்படவிருக்கிறார்; அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள். கொல்லப்பட்ட மூன்று நாள்களுக்குப் பின் அவர் உயிர்த்தெழுவார்என்று அவர் தம் சீடருக்குக் கற்பித்துக் கொண்டிருந்தார்.32 அவர் சொன்னது அவர்களுக்கு விளங்கவில்லை. அவரிடம் விளக்கம் கேட்கவும் அவர்கள் அஞ்சினார்கள்.

யார் மிகப் பெரியவர்?
(மத் 18:1- 5; லூக் 9:46 - 48)
33அவர்கள் கப்பர்நாகுமுக்கு வந்தார்கள். அவர்கள் வீட்டில் இருந்த பொழுது இயேசு, வழியில் நீங்கள் எதைப்பற்றி வாதாடிக் கொண்டிருந்தீர்கள்? என்று அவர்களிடம் கேட்டார்.34அவர்கள் பேசாதிருந்தார்கள். ஏனெனில் தங்களுள் பெரியவர் யார் என்பதைப்பற்றி வழியில் ஒருவரோடு ஒருவர் வாதாடிக் கொண்டு வந்தார்கள்.35 அப்பொழுது அவர் அமர்ந்து, பன்னிருவரையும் கூப்பிட்டு, அவர்களிடம்,  ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும் ' என்றார்.36 பிறகு அவர் ஒரு சிறு பிள்ளையை எடுத்து, அவர்கள் நடுவே நிறுத்தி, அதை அரவணைத்துக் கொண்டு,37 ' இத்தகைய சிறுபிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக் கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக் கொள்பவர் என்னைமட்டும் அல்ல, என்னை அனுப்பினவரையே ஏற்றுக் கொள்கிறார் ' என்றார்.
(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியில், நாம், பொறாமையால், நல்லவற்றை அழிப்பதையும், குறுக்கு புத்தியையும், தனக்கு தான் எல்லாம் என்று நினைப்பால், மற்றவர்களை காயபடுத்துவதையும், தற்பெருமையால், நம் வழியில் வருபவர்களை தாக்குவதையும் பார்க்கிறோம்.

முதல் வாசகம், இஸ்ர்யேலை வெளியாட்கள் அழித்ததை கூறுகிறது. நற்செய்தியில், இயேசுவின் இறைபணியை கெட்ட ஆவியால் தடுப்பவர்களை இயேசு கண்டு கொள்கிறார். ஜேம்ஸின் கடிதமோ, திருச்சபைக்குள் நடக்கும் ப்ரச்னைகளையும், கிறிஸ்தவர்களே கிறிஸ்தவர்களுக்கு எதிராக கலகம் செய்வதையும் எடுத்து காட்டுகிறார்.
பொறாமையும், சுய நலமும் தான் இன்று திருச்சபையில் நடக்கும் ஒவ்வொரு ஊழலுக்கும் காரணமாக இருக்கின்றன. பங்கில் உள்ள ஊழியர்களிடையே ஆன மோதலும், இறைசேவை செய்யும் நண்பர்களிடையே ஏற்படும் பிரிவும், தன்னார்வ ஊழியர்களை வெளியே தள்ளப்படுவதும், கிறிஸ்தவ குடும்பங்களில் ஏற்படும் பிரிவுகளும், கத்தோலிக்க விசுவாசத்தில் இருந்து கத்தோலிக்கர்கள் தள்ளபடுவதும், மிக கேவலமான நடைத்தை ஆகும், இது பொறாமையாலும், சுய நலத்தாலும் ஏற்படுகிறது.
ஒவ்வொரு பிரிவிற்கும் உள்ள முக்கியமான மூல காரணத்தை ஆராய்ந்தால், சுய நலத்தால் ஏற்படும் ஆசை ஆகும். நேர்மையாகவும், மிகவும் கூர்ந்து ஆராய்ந்து பார்த்தால், நமக்கு கடவுளின் மூலம் இதனை சுலபமாக தீர்த்திட வழி தெரியும். பிறரில், நீங்கள் ப்ரச்னை உண்டு என்று அறிந்த பின்பும், அதனால், நீங்கள் கவலை படவில்லை என்றால், உங்களுக்குள்ளும் சுய நலமான எண்ணங்கள் உள்ளது தானே?
இதற்கு இயேசு தீர்வு வழங்குகிறார்: "' ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் (சுய நலத்தினால் தோன்றும் ஆசைஅவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும் ' "
சுய நலத்தினால் வரும் ஆசைகள், பாவத்திற்குள்ளானவை, ஏனெனில், மற்றவர்களிடத்தில் இருந்து வரும் வெற்றியை பிடுங்கிகொள்வது போன்றதாகும். நமக்கு என்ன தேவையாக இருந்தாலும், அது நல்ல விசயமாக இருந்தால், கடவுளிடம் கேட்க வேண்டும், பரிசுத்த ஆவியோடு இனைந்து , நமது நோக்கத்தை அடையவேண்டும். ஆனால், அது நமக்காக மட்டும் இருந்து விட கூடாது.
நாம் என்ன ஜெபிக்க்றோம், கடவுளிடம் என்ன கேட்கிறோமோ, அது பங்கிற்கோ, சமூகத்திற்கோ, குடும்பம் முழுதிற்கோ நன்மை பயக்குமெனில், கடவுள் கண்டிப்பாக தருவார். மற்றவர்களுக்கு எப்படியெல்லாம் உதவ முடிய்மென்ற ஆசையில், அமைதியுடனும், துய ஆசையுடனும், இரக்கத்துடனும் நாம் வேண்டினால், கண்டிப்பாக கிடைக்கும் மேலும் பலன் பெறுமாறு கடவுள் தருகிறார்.
© 2012 by Terry A. Modica

Friday, September 14, 2012

செப்டம்பர் 16 2012 ஞாயிறு நற்செய்தி மறைரை



செப்டம்பர் 16 2012 ஞாயிறு நற்செய்தி மறைரை
ஆண்டின் 26ம் ஞாயிறு
Is 50:5-9a
Ps 116:1-6, 8-9
James 2:14-18
Mark 8:27-35

மாற்கு நற்செய்தி
அதிகாரம் 8

இயேசுவே மெசியா என்னும் அறிக்கை
இயேசுவைப் பற்றிய பேதுருவின் அறிக்கை

(மத் 16:13 - 20; லூக் 9:18 - 21)
27 இயேசு தம் சீடருடன் பிலிப்புச் செசரியாவைச் சார்ந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றார். வழியில் அவர் தம் சீடரை நோக்கி, ' நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்? ' என்று கேட்டார்.28 அதற்கு அவர்கள் அவரிடம், ' சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் இறைவாக்கினருள் ஒருவர் எனவும் சொல்கின்றனர் ' என்றார்கள்.29 ' ஆனால் நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்? ' என்று அவர் அவர்களைக் கேட்க, பேதுரு மறுமொழியாக, ' நீர் மெசியா ' என்று உரைத்தார்.30 தம்மைப்பற்றி எவரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார்.

3. இயேசுவே மானிடமகன்
பயணம் செய்யும் மானிடமகன்
இயேசு தம் சாவை முதன்முறை முன்னறிவித்தல்

(மத் 16:21 - 28; லூக் 9:22 - 27)
31 ' மானிடமகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்று நாள்களுக்குப்பின் உயிர்த்தெழவும் வேண்டும் ' என்று இயேசு அவர்களுக்குக் கற்பிக்கத் தொடங்கினார்.32 இதையெல்லாம் அவர் வெளிப்படையாகவே சொன்னார். பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கடிந்து கொண்டார். 33 ஆனால் இயேசு தம் சீடர்கள் பக்கம் திரும்பிப் பார்த்து பேதுருவிடம், ' என் கண் முன் நில்லாதே, சாத்தானே. ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய் ' என்று கடிந்துகொண்டார்.34 பின்பு அவர் மக்கள் கூட்டத்தையும் சீடரையும் தம்மிடம் வரவழைத்து, ' என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்.35 ஏனெனில் தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்து விடுவார்; என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக் கொள்வார்.
(thanks to www.arulvakku.com)

இன்றைய ஞாயிறின் இரண்டாவது வாசகம், கத்தோலிக்க விசுவாச மதக்கோட்ப்படுகளையும், அதன் செயல்களையும் நமக்கு தெளிவுற எடுத்து கூறுகிறது.

விசுவாசமில்லாத எந்த செயல்பாடுகளும், எவ்வளவு நல்ல செயலாக இருந்தாலும், நம்மை மோட்சத்திற்கு இட்டு செல்வதில்லை. கடவுளின் இதயத்தில் இடம் பிடிக்க நம்மில் சிலர், கோவிலில் பங்கு பணிகளை ஆற்றுகிறோம். எல்லா ஜெபங்களையும் மிக சரியாக சொல்கிறோம். இருந்தும், இந்த பழக்க வழக்கங்கள், நமது சிறு பிள்ளை முதற்கொண்டே நாம் செய்து வருகிறோம்: "நாம் சரியாக இருந்தால், அப்பாவும் , அம்மாவும், எனக்கு பரிசளிப்பார்கள் " என்ற எண்ணத்தோடும், 'பள்ளியில் ஒழுங்காக படித்தால், ஆசிரியர் நம்மை பாராட்டுவார்" என்ற எண்ணத்திலும் வளர்ந்து வந்திருக்கிறோம்.

ஆனால், ப்ரச்னை என்னவெனில், மோட்சத்திற்கு, நாம் இன்னும் முழுமையான தகுதியுடன் இருக்கவில்லை. அதனால் தான் இயேசு இவ்வுலகிற்கு வந்து, நமது பாவங்களை அவரது சிலுவையில் எடுத்து சென்றார்.
செயல்கள் செய்யாமல் நம்பிக்கையுடன் இருந்தால் நம்மால் மோட்சத்திற்கு செல்ல முடியாது. ஏனெனில்:
இயேசுவில் நாம் நம்பிக்கை கொண்டு, அவரின் அன்பில் நம் விசுவாசத்தை வளரவிட வேண்டும். அவர் நமக்காக இறந்தார், மேலும் நம் மோட்ச வாழ்விற்காக மீண்டும் உயிர் பெற்றார். இது தான் நமக்கு மோட்சத்தை திறக்கிறது. அந்த திறந்த கதவில் நாம் இயேசுவை பின் செல்ல வேண்டும். இதற்கு, வெறும், கிறிஸ்துவின் இறப்பிலும், உயிர்ப்பிலும், நம்பிக்கை கொண்டிருந்தால் மட்டும் போதாது, அவரது வாழ்வையும் , எப்படி அந்த வாழ்வை கிறிஸ்து வாழ்ந்தார் என்றும் நாம் பார்த்து அதன் படி வாழவேண்டும், கிறிஸ்துவை பின் செல்வதால், நமது வாழ்க்கை முறையை மாற்றவேண்டி வரும், ஒவ்வொரு நாளும், நமது வாழ்வை மாற்ற வேண்ட வரும். கிறிஸ்துவை போல் நாம் மாற வேண்டியிருக்கும்.

உண்மையான விசுவாசத்துடன் நாம் இருக்கிறோம் என்பதற்கு அத்தாட்சி, நாம் செய்யும் நல்ல செயல்கள் ஆகும். இயேசுவில் நம்பிக்கை கொண்ட நாம், அவர் அன்பு செய்த எல்லாரையும் நாமும் அன்பு செய்ய வேண்டும். எல்லாரும் என்பது, அனைத்து அன்பர்களையும், அவர்கள் அதற்கு தகுதியானவரா? இல்லையா? என்றெல்லாம் பார்க்க கூடாது.
மேலும், இயேசுவின் மேல் உள்ள விசுவாசத்தினால், நாம் அவர் செய்ய சொல்வதையெல்லாம் செய்வொம், நமது எல்லாவித செயல்களிலும், அவரை போலவே நடந்து கொள்கிறோம், அவர் குணாதிசயங்களை நம்முள்ளும் கொண்டு வருகிறோம், அவர் அழைப்பிற்கு ஏற்ப, குருவாகவும், சமய சடங்குகளிலும் பணி செய்பவர்களாகும் நாம் ஆகிறோம்.
அதனால், இயேசு நற்செய்தியில் கேட்பதை போல, ' நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்? ' , நாம் அவர் தான் மெசியாவென்றும், நம்மை மோட்சத்திற்கு அழைத்து செல்பவர் என்றும் பதில் உரைக்கிறோம், மேலும், அவர் தான் நம் தந்தை கடவுள், எப்படி வாழ்வேண்டும் என்று நமக்கு போதிக்கிறார் , மேலும், எல்லோரையும் அன்பு செய்ய நமக்கு முழு அதிகாரம் வழங்குகிறார், அதுவே நாம் தூக்கி செல்ல வேண்டிய சிலுவை ஆகி விடுகிறது.
© 2012 by Terry A. Modica