செப்டம்பர் 23, 2012, ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 25ம் ஞாயிறு
Wis 2:12, 17-20
Ps 54:3-6, 8
James 3:16–4:3
Mark 9:30-37
Ps 54:3-6, 8
James 3:16–4:3
Mark 9:30-37
மாற்கு நற்செய்தி
|
|
அதிகாரம் 9 |
இயேசு
தம் சாவை இரண்டாம் முறை முன்னறிவித்தல்
(மத் 17:22 - 23; லூக் 9:43 - 45)
(மத் 17:22 - 23; லூக் 9:43 - 45)
30 அவர்கள் அங்கிருந்து புறப்பட்டுக் கலிலேயா வழியாகச் சென்றார்கள். அது யாருக்கும் தெரியக்கூடாது என்று இயேசு விரும்பினார்.31 ஏனெனில், ' மானிடமகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்படவிருக்கிறார்; அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள். கொல்லப்பட்ட மூன்று நாள்களுக்குப் பின் அவர் உயிர்த்தெழுவார் ' என்று அவர் தம் சீடருக்குக் கற்பித்துக் கொண்டிருந்தார்.32 அவர் சொன்னது அவர்களுக்கு விளங்கவில்லை. அவரிடம் விளக்கம் கேட்கவும் அவர்கள் அஞ்சினார்கள்.
யார்
மிகப் பெரியவர்?
(மத் 18:1- 5; லூக் 9:46 - 48)
(மத் 18:1- 5; லூக் 9:46 - 48)
33அவர்கள்
கப்பர்நாகுமுக்கு வந்தார்கள். அவர்கள் வீட்டில் இருந்த பொழுது இயேசு, வழியில்
நீங்கள் எதைப்பற்றி வாதாடிக் கொண்டிருந்தீர்கள்? என்று அவர்களிடம் கேட்டார்.34அவர்கள்
பேசாதிருந்தார்கள். ஏனெனில் தங்களுள் பெரியவர் யார் என்பதைப்பற்றி வழியில் ஒருவரோடு
ஒருவர் வாதாடிக் கொண்டு வந்தார்கள்.35 அப்பொழுது அவர் அமர்ந்து, பன்னிருவரையும்
கூப்பிட்டு, அவர்களிடம், ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும்
கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும் ' என்றார்.36 பிறகு
அவர் ஒரு சிறு பிள்ளையை எடுத்து, அவர்கள் நடுவே நிறுத்தி, அதை அரவணைத்துக் கொண்டு,37 '
இத்தகைய சிறுபிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக் கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார்.
என்னை ஏற்றுக் கொள்பவர் என்னைமட்டும் அல்ல, என்னை அனுப்பினவரையே ஏற்றுக் கொள்கிறார்
' என்றார்.
இன்றைய
நற்செய்தியில், நாம், பொறாமையால், நல்லவற்றை
அழிப்பதையும், குறுக்கு புத்தியையும், தனக்கு தான் எல்லாம்
என்று நினைப்பால், மற்றவர்களை காயபடுத்துவதையும், தற்பெருமையால், நம் வழியில் வருபவர்களை
தாக்குவதையும் பார்க்கிறோம்.
முதல் வாசகம், இஸ்ர்யேலை வெளியாட்கள்
அழித்ததை கூறுகிறது. நற்செய்தியில், இயேசுவின் இறைபணியை கெட்ட ஆவியால் தடுப்பவர்களை
இயேசு கண்டு கொள்கிறார். ஜேம்ஸின்
கடிதமோ, திருச்சபைக்குள் நடக்கும் ப்ரச்னைகளையும், கிறிஸ்தவர்களே கிறிஸ்தவர்களுக்கு எதிராக கலகம் செய்வதையும்
எடுத்து காட்டுகிறார்.
பொறாமையும்,
சுய நலமும் தான் இன்று
திருச்சபையில் நடக்கும் ஒவ்வொரு ஊழலுக்கும் காரணமாக
இருக்கின்றன. பங்கில் உள்ள ஊழியர்களிடையே
ஆன மோதலும், இறைசேவை செய்யும் நண்பர்களிடையே
ஏற்படும் பிரிவும், தன்னார்வ ஊழியர்களை வெளியே தள்ளப்படுவதும், கிறிஸ்தவ
குடும்பங்களில் ஏற்படும் பிரிவுகளும், கத்தோலிக்க விசுவாசத்தில் இருந்து கத்தோலிக்கர்கள் தள்ளபடுவதும்,
மிக கேவலமான நடைத்தை ஆகும்,
இது பொறாமையாலும், சுய நலத்தாலும் ஏற்படுகிறது.
ஒவ்வொரு
பிரிவிற்கும் உள்ள முக்கியமான மூல
காரணத்தை ஆராய்ந்தால், சுய நலத்தால் ஏற்படும்
ஆசை ஆகும். நேர்மையாகவும், மிகவும்
கூர்ந்து ஆராய்ந்து பார்த்தால், நமக்கு கடவுளின் மூலம்
இதனை சுலபமாக தீர்த்திட வழி
தெரியும். பிறரில், நீங்கள் ப்ரச்னை உண்டு
என்று அறிந்த பின்பும், அதனால்,
நீங்கள் கவலை படவில்லை என்றால்,
உங்களுக்குள்ளும் சுய நலமான எண்ணங்கள்
உள்ளது தானே?
இதற்கு
இயேசு தீர்வு வழங்குகிறார்: "' ஒருவர் முதல்வராக
இருக்க விரும்பினால் (சுய நலத்தினால் தோன்றும்
ஆசை) அவர்
அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும் ' "
சுய நலத்தினால் வரும் ஆசைகள், பாவத்திற்குள்ளானவை,
ஏனெனில், மற்றவர்களிடத்தில் இருந்து வரும் வெற்றியை
பிடுங்கிகொள்வது போன்றதாகும். நமக்கு என்ன தேவையாக
இருந்தாலும், அது நல்ல விசயமாக
இருந்தால், கடவுளிடம் கேட்க வேண்டும், பரிசுத்த
ஆவியோடு இனைந்து , நமது நோக்கத்தை அடையவேண்டும்.
ஆனால், அது நமக்காக மட்டும்
இருந்து விட கூடாது.
நாம் என்ன ஜெபிக்க்றோம், கடவுளிடம்
என்ன கேட்கிறோமோ, அது பங்கிற்கோ, சமூகத்திற்கோ,
குடும்பம் முழுதிற்கோ நன்மை பயக்குமெனில், கடவுள்
கண்டிப்பாக தருவார். மற்றவர்களுக்கு எப்படியெல்லாம் உதவ முடிய்மென்ற ஆசையில்,
அமைதியுடனும், துய ஆசையுடனும், இரக்கத்துடனும்
நாம் வேண்டினால், கண்டிப்பாக கிடைக்கும் மேலும் பலன் பெறுமாறு
கடவுள் தருகிறார்.
© 2012 by Terry A. Modica
No comments:
Post a Comment