Friday, March 14, 2014

மார்ச் 16, 2௦14 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

மார்ச் 16, 2௦14 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
தவக்காலத்தின் 2ம் ஞாயிறு
Genesis 12:1-4a
Psalm 33:4-5, 18-20, 22
2 Timothy 1:8b-10
Matthew 17:1-9

மத்தேயு நற்செய்தி
இயேசு தோற்றம் மாறுதல்
(
மாற் 9:2 - 13; லூக் 9:28 - 36)
ஆறு நாள்களுக்குப் பின்பு இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் ஓர் உயர்ந்த மலைக்குத் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார்.அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அவருடைய ஆடைகள் ஒளிபோன்று வெண்மையாயின.இதோ! மோசேயும் எலியாவும் அவர்களுக்கு முன் தோன்றி இயேசுவோடு உரையாடிக்கொண்டிருந்தனர்.4பேதுரு இயேசுவைப் பார்த்து, ' ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைக்கட்டுமா? இது உமக்கு விருப்பமா? ' என்றார்.அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது ஒளிமயமான மேகம் ஒன்று அவர்கள்மேல் நிழலிட்டது. அந்த மேகத்தினின்று, ' என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவர்பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள் ' என்று ஒரு குரல் ஒலித்தது.அதைக் கேட்டதும் சீடர்கள் மிகவும் அஞ்சி முகங்குப்புற விழுந்தார்கள்.இயேசு அவர்களிடம் வந்து அவர்களைத் தொட்டு, ' எழுந்திருங்கள், அஞ்சாதீர்கள் என்றார்.அவர்கள் நிமிர்ந்து பார்த்தபோது இயேசு ஒருவரைத்தவிர வேறு எவரையும் காணவில்லை.அவர்கள் மலையிலிருந்து இறங்கிவந்தபோது இயேசு, ' மானிட மகன் இறந்து உயிருடன் எழுப்பப்படும்வரை இக்காட்சியைப்பற்றி எவருக்கும் சொல்லக்கூடாது என அவர்களுக்குக் கட்டளையிட்டார்.
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தியில், உயர்ந்த மலையின் மேல், இயேசுவின் பிரகாசமான ஒளி இன்று காட்டப்பட்டது. தந்தை கடவுள் “என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவர்பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள்” என்று கூறினார்
இந்த தோற்றம் மாறுதல், ஒவ்வொரு முறையும், நாம் இயேசுவை கேட்கும் பொழுது, நமது விசுவாசத்தை இன்னும் விசாலாமாக்க அனுமதித்தால், நம் முன் இயேசுவின் தோற்றம் மாறுதல் நடைபெறுகிறது. இப்போது, நாம் தோற்றம் மாறுகிறோம்!. நமது உண்மையான அடையாளம் அப்பொழுது தெரியும். நமது உண்மையான அடையாளம் என்ன? நமது உள்ளார்ந்த இருப்பு. நாம் கடவுளின் உருவம் போல படைக்கப்பட்டு, கடவுளை போல ஞானஸ்நாணம் பெற்றோம்.
நமது உண்மையான அடையாளத்துடன் நாம் வாழும்பொழுது, அதிக சந்தோசமான வாழ்வில் வாழ்கிறோம். எடுத்த் காட்டாக, நீங்கள் பொருமையிழந்து இருக்கும்பொழுது எப்படி உணர்கிறீர்கள்.? அவ்வளவு நல்ல விதமாக உணர்வதில்லை? ஏனெனில், கடவுள் மிகவும் பொறுமையானவர்( 1 கொரிந்தியர் 13: 4-7 உண்மையான அடையாளத்திற்கும், உங்களுக்கும் உள்ள விளக்கங்களை பார்க்கலாம்). மேலும், நாம் பொறுமையாக இருக்கும்பொழுது, இன்னும் அதிக சந்தோசத்துடன் இருக்கிறோம்.
இந்த தவக்காலத்தில், நாம் எந்த அளவிற்கு கிறிஸ்துவை போல அல்லாமல், இருக்கிறோம் என்பதை அறிந்து, அந்த பாவங்களுக்காக மனம் வருத்தப்பட்டு, கிறிஸ்துவின் ஒளி நம் இருட்டை அகற்றிட நாம் அனுமதிக்க வேண்டும்.
இயேசுவின் அழைத்தலை நிறைவேற்றவே, இந்த மலை மேல் இருந்து இறங்கி வந்தார். கிறிஸ்துவை பின் பற்றும் நாமும், மலை மேலிருந்து இறங்கி வந்து , கடவுள் என்ன ஆற்றலை, திறமைகளை கொடுத்திருக்கிறாரோ, அதனை உபயோகித்து, இறை அழைத்தலுக்கு சேவை செய்தல் வேண்டும். திமோத்தயு கூறுவது  போல பரிசுத்த வாழ்வு வாழ்தல் மிகவும் கடினமானது. ஆனால், ஒவ்வொரு கல்வாரி பின்னும், ஈஸ்டர் வரும் என்பது நமக்கு ஆறுதலாக இருக்கும். கடவுளிடமிருந்து நமக்கு வரும் ஆற்றலை நம்பி பரிசுத்த வாழ்வு தொடரலாம்.
கடவுள் உங்களை பற்றி என்ன சொல்கிறார் என்று கேளுங்கள். இயேசுவை பற்றி தேபார் மலையில் என்ன சொன்னாரோ : ' என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவர்பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள் ' என்று சொல்கிறார். கிறிஸ்துவின் தோழனாக இறை சேவையில் நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?


© 2014 by Terry A. Modica 
Facebook

No comments: