Friday, March 7, 2014

மார்ச் 9 2௦14 ஞாயிறு, நற்செய்தி, மறையுரை

மார்ச் 9 2௦14 ஞாயிறு, நற்செய்தி, மறையுரை
தவக்காலத்தின் முதல் ஞாயிறு
மத்தேயு நற்செய்தி
இயேசு சோதிக்கப்படுதல்
(
மாற் 1:12 - 13; லூக் 4:1 - 13)
அதன்பின் இயேசு அலகையினால் சோதிக்கப்படுவதற்காகப் பாலை நிலத்திற்குத் தூய ஆவியால் அழைத்துச் செல்லப்பட்டார்.அவர் நாற்பது நாள் இரவும் பகலும் நோன்பிருந்தார். அதன் பின் பசியுற்றார்.3சோதிக்கிறவன் அவரை அணுகி, ' நீர் இறைமகன் என்றால் இந்தக் கற்கள் அப்பமாகும்படிக் கட்டளையிடும் ' என்றான்.அவர் மறுமொழியாக, ' மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர் ' என மறைநூலில் எழுதியுள்ளதே என்றார்.5பின்னர் அலகை அவரை எருசலேம் திருநகரத்திற்குக் கூட்டிச் சென்றது. கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி,6 ' நீர் இறைமகன் என்றால் கீழே குதியும்; ' கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார். உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக் கொள்வார்கள் ' என்று மறைநூலில் எழுதியுள்ளது ' என்று அலகை அவரிடம் சொன்னது.இயேசு அதனிடம், ' ″ உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்கவேண்டாம் எனவும் எழுதியுள்ளதே என்று சொன்னார்.மறுபடியும் அலகை அவரை மிக உயர்ந்த ஒரு மலைக்குக் கூட்டிச் சென்று உலக அரசுகள் அனைத்தையும், அவற்றின் மேன்மையையும் அவருக்குக் காட்டி,9 அவரிடம், ' நீர் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து என்னை வணங்கினால், இவை அனைத்தையும் உமக்குத் தருவேன் ' என்றது.10 அப்பொழுது இயேசு அதனைப் பார்த்து, ' அகன்று போ, சாத்தானே, ' உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய் ' என்றும் மறைநூலில் எழுதியுள்ளது என்றார்.11 பின்னர் அலகை அவரை விட்டு அகன்றது. உடனே வானதூதர் வந்து அவருக்குப் பணிவிடை செய்தனர்.
(thanks to www.arulvakku.com)
உங்களுக்கு தவறு செய்ய தூண்டபடும் நேரத்தில் அல்லது சோதிக்கப்படும்போழுது அதனை எப்படி கையாள்வீர்கள்?  இந்த தவக்காலத்தின் முதல் ஞாயிறில், நற்செய்தி நமக்கு சவால் விடுகிறது. நாம் நமது பயணத்தை இயேசுவோடு ஆரம்பிக்கிறோம். அவரோடு இணைந்து பரிசுத்தமான இடத்திற்கு நாம் இந்த வாழ்வில் செல்வோம்.
இந்த தவக்காலம் பழைய தவக்காலம் போல இல்லை. போன வருடம் நம் தேவைகள் வேறாக இருந்தன. நம் வளர்ச்சி வேறாக இருந்தது. நமது புரிதலும், உள்ளார்ந்த அர்த்தங்களும், தாழ்ந்த நிலையில் இருந்தன. அதன் பிறகு நிறைய விசயங்கள் நடந்து விட்டன. இவையெல்லாமே கடவுள் நமக்கு என்ன செய்ய போகிறாரோ அதற்கான தயாரிப்பு தான்.

இந்த வருடத்தில் உங்களுக்கு எதிலிருந்து வெற்றி தேவை? எது மீட்கப்படவேண்டும். ? இயேசு உங்களை தண்டனை சிலுவையிளிருந்தும், சுய நலமின்றியும் உள்ள பாதையில் அழைத்து செல்வார். அவருடைய கல்லறைக்கும், கடவுளின் ஒளியிலும் அழைத்து சென்று அவரின் அன்பின் மூலமாக உங்களை குணப்படுத்தி புதிய வாழ்விற்கு இப்பொழுதே அழைத்து செல்வார்
இந்த தவக்காலத்தில், ஒவ்வொரு முறையும் நாம் தியாகம் செய்யும்பொழுதும், நம் துன்பத்தை, கிறிஸ்துவின் பாடுகளோடு இணைத்து – நாம் இயேசுவை பின்பற்றி சிலுவைக்கும்  அதன் பின் மீட்பிற்கும் நாம் சென்றடைகிறோம். இதன் மூலம் நம் சிலுவைகளை நாமே புதிய வெளிச்சத்தில் பார்ப்போம். கல்வாரி மலைக்கு நாம் வெற்றி வழியாக அடைய , நமது அனுபவத்தின் மூலம் தான் பெற முடியும்.
இந்த ஈஸ்டர் வெறும், சாக்கலேட்டும், வண்ணமான முட்டை மற்றும விருந்து உணவோடு இல்லாமல், நாம் இன்னும் பலனான ஈஸ்டராக மாற்ற, இந்த 4௦ நாளும், கட்டாய விரதம், புலால் உணவை மறுப்பது, தியாகம் செய்வது, கோவில் நடக்கும் இன்னும் அதிகமான பிரார்த்தனைகளில் கலந்து கொல்வது, என்று இல்லாமல், இன்னும் அதிகமாக செய்ய வேண்டும்.

மீட்பின் ஆற்றலை நாம் அனுபவிக்க விரும்பினால், துக்கத்தின் ஆற்றலை நாம் அனுபவிக்க வேண்டும். நமது பாவ வாழ்க்கையிலிருந்து மனம் திரும்புதல் வேண்டும். இதையே வேறு மாதிரியாக சொல்வாதானால், நாம்  ஆற்றல் இல்லாத மரணத்தை அனுபவிக்க வேண்டும் – நமது பாவத்தின் மரணத்தை , இவ்வுலக வாழ்க்கையின் மரணத்தை , கிறிஸ்து மாதிரி அல்லாத நமது வாழ்க்கை முறையின் அழிவாகும். © 2014 by Terry A. Modica Facebook

No comments: