ஜுன் 29, 2௦14 ஞாயிறு நற்செய்தி மறையுரை
அப்போஸ்தலர்கள் பேதுரு, பவுல் திருவிழா
Acts 12:1-11
Psalm 34:2-9
2 Timothy 4:6-8, 17-18
Matthew 16:13-19
Psalm 34:2-9
2 Timothy 4:6-8, 17-18
Matthew 16:13-19
மத்தேயு நற்செய்தி
இயேசுவைப் பற்றிய பேதுருவின் அறிக்கை
(மாற் 8:27 - 30; லூக் 9:18 - 21)
(மாற் 8:27 - 30; லூக் 9:18 - 21)
13 இயேசு, பிலிப்புச்
செசரியா பகுதிக்குச் சென்றார். அவர் தம் சீடரை நோக்கி, ' மானிடமகன்
யாரென்று மக்கள் சொல்கிறார்கள்? ' என்று கேட்டார்.14 அதற்கு
அவர்கள், ' சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர்
எலியா எனவும் மற்றும் சிலர் எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் என்றும்
சொல்கின்றனர் ' என்றார்கள்.15 ' ' ஆனால் நீங்கள்,
நான் யார் எனச் சொல்கிறீர்கள்? ' என்று அவர் கேட்டார்.16சீமோன் பேதுரு மறுமொழியாக, ' நீர் மெசியா,
வாழும் கடவுளின் மகன் ' என்று உரைத்தார்.
அதற்கு இயேசு, ' யோனாவின் மகனான சீமோனே, நீ பேறு பெற்றவன்.17 ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு
வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே
வெளிப்படுத்தியுள்ளார்.18 எனவே நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு;
இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின்
வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா.19 விண்ணரசின் திறவுகோல்களை நான்
உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடைசெய்யப்படும்.
மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும் ' என்றார்.
(thanks to www.arulvakku.com)
எது மிக சரியான தலைமைத்துவம்? அதற்கு சரியான எடுத்து காட்டாக, பவுல்,
மற்றும் பேதுருவிடம் காண்கிறோம். என் இயேசுவிடம் கூட பார்க்கிறோம்.
இன்றைய நற்செய்தியில், பேதுரு முதலில் இயேசுவை மெசியா என்று
சொல்கிறார், பிறகு, அவர் மற்றவர்களை அழைத்து இயேசு மெசியா என்ற உண்மையை கண்டறிய
உதவுகிறார். பேதுருவை நல்லாயனாக இருக்க அமர்த்த பட்டுள்ளார் அதன் மூலம் இயேசுவோடு ஒவ்வொருவரும் அன்பில்
இணைந்திருக்க நல்லாயனாக பேதுருவுக்கு அதிகாரம் வழங்கபட்டுள்ளது.
இன்றும், நமக்கும் அதே பொருப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. நமது வார்த்தைகளால்,
நம்மால் சிலரை மனமாற்றம் செய்ய முடியாவிட்டாலும், நமது நடவடிக்கைகள் மூலமும், நல்ல குணத்தினாலும், இறக்கத்தினாலும், இயேசுவை
போல இருந்து நம் கடைமையை செய்தல் வேண்டும்.
பவுல் அவரது இறைசேவையில் துன்புறுவதை முதல் வாசகத்தில் பார்க்கிறோம்.
இயேசுவும் துன்புற்றதை , அவர் நல்லாயனாக இருந்த பொழுது, பல சோதனைகளை சந்தித்ததை
நாம் அறிந்திருக்கிறோம். நாமும், இவ்வுலகில், இறையரசை கொண்டு வர ஈடுபடும்பொழுது,
நாமும் பல துன்பங்களை சந்தித்து இருப்போம். இதில் சந்தோசமான விசயம் என்ன
என்றால், சாத்தானின் எந்த ஒரு சக்தியும்,
கிறிஸ்துவினால், ஆன காரியம் எதையும் வெற்றி கொள்ள முடியாது.
கிறிஸ்துவின் வாயில்கள், சாத்தானிடமிருந்து நாம் எல்லாம் வெளியே வர
கதவுகளாக உள்ளன. கிறிஸ்துவை பின் பற்றுபவர்களாக, ஒவ்வொரு தலைமைத்துவம் பெற்றவர்
அனைவரும், பலரை பாதாலாத்திளிருந்து கிறிஸ்துவின் வாயிலுக்கு கொண்டு செல்ல
முனைவோம். நாம் உண்மையாகவே கிறிஸ்துவை பின் பற்றினால், நாம் கிறிஸ்துவோடு, அவர்
எதிரியின் எல்லைக்கு செல்லும்பொழுது, இதற்கிடையே பரிசுத்த ஆவி யாரை நாம்
கிறிஸ்துவிடம் கொண்டு வர முனைகிறோமோ, அவர்களை கிறிஸ்துவிடம் வர தயார்
படுத்துகிறார். நாம் அவர்களிடம் மாற்றத்தை காணாமல் இருந்தால் கூட, மாற்றம் நடந்து
கொண்டு தான் இருக்கிறது.
பாவ வாழ்க்கையில் வாழ்பவர்கள், நாம் முயற்சியை நிராகரிப்பார்கள்,
ஆனால், அவர்களுக்கு எதுவெல்லாம் ஆற்றல் கொடுக்கிறது: நிபந்தனை இல்லா அன்பிற்காக
அவர்கள் பல்வேறு வழிகளில், தேடி அலைவது தான் அவர்களின் நோக்கமாக இருக்கும். இது
தான் அடிப்படை என்றால், அவர்கள் நல்லாயனை நெருங்கி , கடவுளின் மன்னிப்பிற்கும்,
மீட்புக்கும், அருகில் வருகிறார்கள் என்று அர்த்தம்.
அவர்களை கதவு வழியாக இழுத்து கொண்டு வர முடியாது, அவர்களுக்கு வழியை
காண்பிக்கலாம், மேலும், அவர்களுக்காக கடவுளிடம் மன்றாடி, அவர்களுக்கு உள்ள
வாய்ப்புகளை அறிந்து கொள்ள ஜெபம் செய்யலாம். இது தான் நமக்கு கொடுத்த அழைப்பு.
© 2014
by Terry A. Modica