Friday, June 6, 2014

ஜுன் 8 2014 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜுன் 8 2014 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
பரிசுத்த ஆவி விழா
Acts 2:1-11
Psalm 104:1, 24, 29-31, 34
1 Corinthians 12:3b-7, 12-13
John 20:19-23

யோவான் நற்செய்தி
இயேசு சீடர்களுக்குத் தோன்றுதல்
(
மத் 28:16 - 20; மாற் 16:14 - 18; லூக் 24:36 - 49)
19 அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடி வைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார் அவர்கள் நடுவில் நின்று, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! என்று வாழ்த்தினார்.20இவ்வாறு. ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள்.21இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன் 'என்றார்.22 இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, ' தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.23 எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா என்றார்.
(thanks to www.arulvakku.com) 

கடவுளே உமது ஆவியை நீர் அனுப்பி, மன்னகத்தை புதுப்பித்தள் செய்வாயாக “ என்று இன்றைய பதிலுரை பாடலில் நாம் சொல்கிறோம். இந்த பரிசுத்த ஆவியின் விழாவில், நமது ஜெபமாக இது இருக்கிறது. இதனால், தான், நமது திருச்சபை இன்னும் இப்பூவுலகில் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. நாம் பரிசுத்த ஆவியின் காலத்தில் வாழ்கிறோம்.


கிறிஸ்துவின் ஆவியின் சக்தியும், அதன் பிரசன்னமும் இவ்வுலகில் இல்லை என்றால், , கிறிஸ்தவன் இந்த உலகை மாற்ற முடியாது. மேலும், ஆவியின் சக்தி இல்லை என்றால், இந்த இரண்டாயிரம் வருடங்களாக, பல்வேறு ஊழலிலும் , தடையும் தாண்டி கிறிஸ்தவம் வளர்ந்திருக்காது.
கிறிஸ்துவின் அவையின்றி, நாம் இந்த உலகில் கிறிஸ்து ஆக இருக்க முடியாது. தந்தை கடவுள் நம்மிடம் செய்ய சொன்னதை நம்மால், செய்ய முடியாது.
பரிசுத்த ஆவியின் ஞாயிறு, திருச்சபையின் பிறந்த நாளை , புதுப்பிக்கப்பட்ட நாளை குறிக்கிறது. அதே போல, நம் பரிசுத்த வாழ்வின் பிறந்த நாளையும் குறிக்கிறது. இது, திருச்சபையில் நம்மை ஒரு அங்கத்தினாராக சேர்ந்து கொண்டதை குறிக்கிறது. இந்த நாள் பெரிய விழா நாள், நாம் எல்லோரும் சேர்ந்து கொண்டாடும் நாள், நமது ஞானஸ் நாணத்திலும், உறுதி பூசுதலிலும் நாம் பெற்ற பரிசுத்த ஆவியை மிண்டும் புதுப்பித்து கொள்ளவும், ஆவியின் இருப்பை உறுதிபடுத்தும் விழா.

இந்த பரிசுத்த ஆவியின் நாளில், அருட் சாதனங்களின் மூலம் நாம் பெற்ற கடவுளின் ஆற்றல், சக்தி, அவரின் நம்மோடு இருப்பது ,ஆகியவற்றால், நாம் பாவங்களை விட்டு விலகியும், பரிசுத்த வாழ்வில் வாழ்ந்தும், இந்த பூவுலகை நாம் மாற்ற முடியும் என்பதனை நமக்கு நினைவுருத்தபடுகிறது.
கடவுள் “எவ்வாறு இந்த உலகை மாற்ற போகிறார் ? “நம் மூலம்! தந்தை கடவுள் அவரின் பரிசுத்த ஆவியை , அவரின் மகனுக்கு கொடுத்து இந்த உலகின் இறை சேவையை செய்ய அனுப்பினார். இயேசு அதே ஆவியை நமக்கு கொடுத்தார். அதன் மூலம் நாம் பரிசுத்த வாழ்வில் வளர்ந்து, இந்த உலகின் மாற்றத்திற்கான ஆயத்த பணிகளில் நாம் ஈடுபடலாம்.
பரிசத்த செயல் செய்ய, நாம் எதோ ஒரு தகுதியை இழந்து இருக்கிறோம், என்று நீங்கள் நினைத்தால், அது சரியாக கூட இருக்கலாம், ஆனால், கடவுளின் ஆவி உன்னில் இருந்து குறைகளை துரத்தி நிறைகளாக்கும், இந்த இணைப்பில், தொடர்ந்து நம்பிக்கையோடு செல்வாயாக!.

© 2014 by Terry A. Modica

No comments: