Friday, June 13, 2014

ஜுன் 15 2௦14, ஞாயிறு நற்செய்தி மறையுரை


ஜுன் 15 2௦14, ஞாயிறு நற்செய்தி மறையுரை
மூவொரு கடவுளின் திருவிழா
Exodus 34:4b-6, 8-9
Daniel 3:52-56
2 Corinthians 13:11-13
John 3:16-18

யோவான் நற்செய்தி
16 தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார்.17 உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்.18அவர்மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை; ஆனால் நம்பிக்கை கொள்ளாதோர் ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டனர். ஏனெனில் அவர்கள் கடவுளின் ஒரே மகனிடம் நம்பிக்கை கொள்ளவில்லை
(thanks to www.arulvakku.com)
பரிசுத்த ஆவியின் விழாவிற்கு அடுத்த வாரத்தில், நாம் மூவொரு கடவுளின் விழாவாக கொண்டாடுகிறோம்.
முதல் வாசகத்தில், தந்தை கடவுள் இஸ்ரேயல் நாட்டை தந்தை போல கவனித்து கொள்வதை பார்க்கிறோம். அவர் இரக்கமும், அருளும் நிறைந்தவராய் பார்க்கிறோம். மிகவும் மெதுவாக கோபம் கொள்வராகவும் , இரக்கத்திலும் , விசுவாசத்திலும் மிகவும் தாராளாமானவராகவும் இருப்பவர் என்பதையும் பார்க்கிறோம் – மிகவும் சரியான தந்தை அவர் .
தந்தை கடவுளை இவ்வாறு நாம் பார்ப்பதற்கு மிகவும் கடினமாக இருக்கிறதா? ஏனெனில், நாம் இதனை இன்னும் அனுபவிக்கவில்லை, நாம் மனித தந்தையே பார்த்து, பார்த்து, தந்தை என்றால் இப்படி தான் இருப்பார் என்று நாம் நினைக்கிறோம். நமது ஆவிக்கு குணப்படுத்தல் வேண்டும். தந்தை கடவுளை , குறையுள்ள மனித தந்தையாகவே நாம் பார்க்கிறோம். நல்ல அப்பாக்களும், நல்ல திறமையான ஆசிரியர்களும் கூட கடவுளின் தரத்திற்கு குறைவாகவே உள்ளனர். இதனை நன்றாக நினைவில் வைத்து கொண்டு நாம் தந்தை கடவுளை பார்க்க வேண்டும் .
இரண்டாவது வாசகம், மூவொரு கடவுளை முழுமையாக நமக்கு காட்டுகிறது. இயேசுவின் அருளும், தந்தை கடவுளின் அன்பும், பரிசுத்த ஆவியின் நட்புறவும், நமக்கு சொல்ல படுகிறது. இதனால், இதன் மூலம் , இதனுள், நாம் சந்தோசம் பெறுகிறோம். இவர்களுள் நம் வழியை செம்மபடுத்துகிறோம். மேலும் நம்மில் ஒருவரோடு ஒருவர் அமைதியோடு வாழ்கிறோம்.
இதனை வேறு மாதிரி சொல்வாதானால், இயேசு நம் பாவங்களை ஏற்று கொண்டு, நமக்காக இறந்தார், நாம் பாவங்களை எதிர்கொள்ளும் திறனை அருளை நமக்கு வழ ங்கினார்.  மேலும், தந்தை கடவுளின் அன்பை நமக்கு கொடுத்து நாமும் மற்றவர்களை அன்பு செய்ய நம்மை தயார்படுத்துகிறார். மேலும், பரிசுத்த ஆவியை நமக்கு கொடுத்து, பரிசுத்த கிறிஸ்தவனாக நாம் தொடர்ந்து வாழ நம்மை ஆயத்தப்படுத்துகிறார்
நற்செய்தி வாசகம், தந்தை கடவுளின் அன்பின் ஆழத்தை காட்டுகிறது. அவர் நம்மை தண்டனைக்குள்ளாக்க விரும்பவில்லை; அவரின் மகனை அனுப்பி பாவத்தின் அழிவிலிருந்து நம்மை மீட்க தயாரானார். நமது பாவங்கள், நம்மை தீர்ப்புகுள்ளாக்கி நம்மை சாவிற்கு அழைத்து செல்கிறது. ஆனால், இயேசு நம்மை மீட்டு நம்மை நித்திய வாழ்விற்கு , வெற்றியின் வாழ்வை கொடுத்துள்ளார், - அதனை ஏற்பது நம் கையில்.

© 2014 by Terry A. Modica

No comments: