ஆகஸ்டு
30
2015 ஞாயிறு
நற்செய்தி ,
மறையுரை
ஆண்டின்
22ம்
ஞாயிறு
Deuteronomy
4:1-2, 6-8
Ps
15:2-5
James
1:17-18, 21b-22, 27
Mark
7:1-8, 14-15, 21-23
மாற்கு
நற்செய்தி
ஒரு
நாள் பரிசேயரும் வந்திருந்த
மறைநூல் அறிஞர் சிலரும்
இயேசுவிடம் வந்து கூடினர்.
அவருடைய
சீடருள் சிலர் தீட்டான,அதாவது,கழுவாத
கைகளால் உண்பதை அவர்கள்
கண்டார்கள்.
பரிசேயரும்,ஏன்
யூதர் அனைவருமே,தம்
மூதாதையர் மரபைப் பின்பற்றிக்
கைகளை முறைப்படி கழுவாமல்
உண்பதில்லை;சந்தையிலிருந்து
வாங்கியவற்றைக் கழுவிய பின்னரே
உண்பர்.
அவ்வாறே
கிண்ணங்கள்,பரணிகள்,செம்புகள்
ஆகியவற்றைக் கழுவுதல் போன்று
அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய
மரபுகள் இன்னும் பல இருந்தன.
ஆகவே
பரிசேயரும் மறைநூல் அறிஞரும்
அவரை நோக்கி,
``உம்
சீடர் மூதாதையர் மரபுப்படி
நடவாமல் தீட்டான கைகளால்
உணவு அருந்துவதேன்?''என்று
கேட்டனர்.
அதற்கு
அவர்,
``வெளிவேடக்காரர்களாகிய
உங்களைப் பற்றி எசாயா பொருத்தமாக
இறைவாக்கு உரைத்திருக்கிறார்.
`இம்மக்கள்
உதட்டினால் என்னைப்
போற்றுகின்றனர்;இவர்கள்
உள்ளமோ என்னை விட்டு வெகு
தொலையில் இருக்கிறது.
மனிதக்
கட்டளைகளைக் கோட்பாடுகளாகக்
கற்பிக்கின்றனர்.
இவர்கள்
என்னை வழிபடுவது வீண்'என்று
அவர் எழுதியுள்ளார்.
நீங்கள்
கடவுளின் கட்டளைகளைக் கைவிட்டு
மனித மரபைப் பின்பற்றி
வருகிறவர்கள்''என்று
அவர்களிடம் கூறினார்.
இயேசு
மக்கள் கூட்டத்தை மீண்டும்
தம்மிடம் வரவழைத்து,அவர்களை
நோக்கி,
``நான்
சொல்வதை அனைவரும் கேட்டுப்
புரிந்துகொள்ளுங்கள்.
வெளியேயிருந்து
மனிதருக்குள்ளே சென்று
அவர்களைத் தீட்டுப்படுத்தக்
கூடியது ஒன்றுமில்லை.
மனிதருக்கு
உள்ளேயிருந்து வெளியே வருபவையே
அவர்களைத் தீட்டுப்படுத்தும்.
ஏனெனில்
மனித உள்ளத்திலிருந்தே
பரத்தைமை
,கொலை
விபசாரம்
,பேராசை
,தீச்செயல்
,வஞ்சகம்
,காமவெறி,பொறாமை,பழிப்புரை,செருக்கு,மதிகேடு
ஆகியவற்றைச் செய்யத் தூண்டும்
தீய எண்ணங்கள் வெளிவருகின்றன.
தீயனவாகிய
இவை அனைத்தும் உள்ளத்திலிருந்து
வந்து மனிதரைத் தீட்டுப்படுத்து
கின்றன''
என்றார்.
இன்றைய
நற்செய்தியில் ,
இயேசு,
பரிசேயர்களை
வெறும் உதட்டளவில் கடவுளை
புகழ்கின்றனர் ,
ஆனால்
அவர்கள் இருதயமோ கடவுளை விட்டு
விலகி நிற்கிறார்கள் என்று
கூறி பரிசேயர்களை கண்டிக்கிறார்.
அவர்கள்
இயேசுவும் ,
அவரது
சீடர்களும்,
ஏதாவது
ஒரு செயலில்,யூதர்களின்
சட்டத்தை மதிக்காமல்
இருக்கிறார்களா ?
என்று
அவர்கள் மேல் குறைகளை
பார்த்தார்கள்.
அவ்வாறு
செய்வதில் எந்த வித அன்பும்
இல்லை.
மனிதர்களை
விட ,
சட்ட
திட்டங்கள் தான் முக்கியம்
என்று அவர்கள் இருந்தனர்.
“எனக்கு
உன்னை விட அதிகம் தெரியும்,
நான்
உன்னை விட பெரியவன்,
ஏனெனில்,
நான்
எல்லா சட்ட திட்டங்களை ஒழுங்காக
கடைபிடிக்கிறேன் "
என்று
பரிசேயர்கள் தான் தான் சரி
என்ற நினைப்பில் இருந்தவர்கள்.
சட்ட
வரைமுறைகளுக்காக நாம்
கீழ்படிந்து நடப்பது,
ஒரு
பாசாங்கான விசயம்.
சட்ட
திட்டங்களை வைத்து கொண்டு,
அதனை
நாம் தான் சரியாக செய்கிறோம்
என்று சொல்லி கொண்டு மற்றவர்களை
விட நாம் தான் பெரியவன் என்ற
நினைப்புடன் இருந்தனர்.
இன்றைய
கால கட்டத்தில்,
நாம்
திருப்பலியை ரோமன் கத்தோலிக்க
திருசட்ட்டத்தின் படி சரி
வர கடை பிடிக்க வில்லை என்று
நாம் பாவ சங்கிர்த்தனம்
செய்யும் பொழுது,
அதனை
ஏற்று கொண்டு,
செயல்படுபவர்
ஆனால் ,
யார்
பாவி இங்கே ?
இப்படி
நடக்கிற பொழுது,
“உபயோகம்
இல்லாமல் என்னை வணங்குகின்றனர்"
என்று
இயேசு சொல்கிறார்.
திருப்பலியின்
முக்கிய நோக்கம் அங்கே இல்லாமல்
போய் விடுகிறது.
பல
சட்ட திட்டங்கள் நம்மிடையே
உள்ளன.
சில
கால கட்டத்திற்கு தகுந்தாற்போல
சில சட்டங்கள் மாற்றி
அமைக்கப்பட்டுள்ளது,
ஆனால்,
கடவுளின்
முக்கிய கட்டளைகள் ,
நல்லொழுக்க
கட்டளைகள் மிகவும் முக்கியமானது
அது எதுவும் மாற போவதில்லை
.
எல்லா
சட்ட திட்டங்களும்,
நம்மை
மோட்சத்திற்கு அழைத்து செல்ல
உதவுபவை
யாரும்
சட்டத்திற்கு கீழ் படியவில்லை
என்றால்,
அவர்களுக்கு
எதிராக நாம் குரல் கொடுக்க
வேண்டும்,
கண்டிப்பாக
இதனை செய்ய வேண்டும்.
ஆனால்,
அவர்களின்
பரிசுத்த வாழ்வின் வளர்ச்சியை
இந்த பாவங்கள் தடுக்கும்.
அவர்கள்
ஏன் அவ்வாறு கட்டளைகளுக்கு
கிழ்படியவில்லை என்று காரணத்தை
கண்டு பிடித்து அதன் வேர்களை
ஆராய்ந்து தெரிந்து ,
அதனை
களைய நாம் அன்புடன் முற்பட்டால்
,
நாம்
உண்மையாகவே அவர்களை பரிசுத்த
வாழ்விற்கு அழைத்து செல்ல
முடியும்.
இவ்வாறு
செய்தால்,
"இறைவார்த்தையைக்
கேட்கிறவர்களாக மட்டும்
இருந்து உங்களை ஏமாற்றிக்கொள்ள
வேண்டாம்.
அதன்படி
நடக்கிறவர்களாயும் இருங்கள்
"
என்று
இரண்டாம் வாசகத்தில்
கூர்பட்டுள்ளது போல நாம்
நடந்து கொள்ள முடியும்.
ஜேம்ஸ்
சொல்வது போல உண்மையான மதம்,
மற்றவர்கள்
மேல் அக்கறை கொள்ளும்.
அனால்
இன்றைய நர்செய்தியிலோ ,
பரிசேயர்கள்,
சீடர்களின்
பசியை பார்க்க வில்லை .
©
2015 by Terry A. Modica
No comments:
Post a Comment