Friday, September 11, 2015

செப்டம்பர் 13 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை

செப்டம்பர் 13 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 24ம் ஞாயிறு
Isaiah 50:5-9a
Ps 116:1-6, 8-9
James 2:14-18
Mark 8:27-35


மாற்கு நற்செய்தி
மானிடமகன் பலவாறு துன்பப்பட வேண்டும்.

அக்காலத்தில் இயேசு தம் சீடருடன் பிலிப்புச் செசரியாவைச் சார்ந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றார். வழியில் அவர் தம் சீடரை நோக்கி, ``நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?'' என்று கேட்டார்.
அதற்கு அவர்கள் அவரிடம், ``சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் இறைவாக்கினருள் ஒருவர் எனவும் சொல்கின்றனர்'' என்றார்கள். ``ஆனால் நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?'' என்று அவர் அவர்களைக் கேட்க, பேதுரு மறுமொழியாக, ``நீர் மெசியா'' என்று உரைத்தார். தம்மைப் பற்றி எவரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார்.
``மானிடமகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்று நாள்களுக்குப்பின் உயிர்த்தெழவும் வேண்டும்'' என்று இயேசு அவர்களுக்குக் கற்பிக்கத் தொடங்கினார். இதையெல்லாம் அவர் வெளிப்படையாகவே சொன்னார்.
பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கடிந்துகொண்டார்.
ஆனால் இயேசு தம் சீடர்கள் பக்கம் திரும்பிப் பார்த்துப் பேதுருவிடம், ``என் கண் முன் நில்லாதே, சாத்தானே. ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்'' என்று கடிந்து கொண்டார்.
பின்பு அவர் மக்கள் கூட்டத்தையும் சீடரையும் தம்மிடம் வரவழைத்து, ``என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில் தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்து விடுவார்; என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக்கொள்வார்'' என்றார்.




நம்பிக்கையை செயல்படுத்துதல்
இன்றைய இரண்டாவது வாசகம் , விசுவாசமும் நம்பிக்கையும் செயல்படுத்தினால் தான் , அது நம்பிக்கை என்று கூறுகிறது.
நம்பிக்கை இல்லா செயல்பாடுகள் எவ்வளவு நல்லதாக இருந்தாலும், அது நம்மை மோட்சத்திற்கு அழைத்து செல்லாது. நம்மில் சிலர் கடவுளின் இருதயத்தில் இடம் பெற , பங்கு பணிகளிலும் , சரியாக ஜெபம் சொல்வதிலும் ஈடுபடுகிறோம் . இது மாதிரியான முறைகள், நாம் சிறு வயதிலிருந்து கற்று கொண்டுள்ளோம்: “ நான் நன்றாக இருந்தால், தந்தையும் தாயும், எனக்கு பரிசளிப்பார்கள் " என்ற மனப்பான்மையோடு வளர்கிறோம். “படிப்பில் நன்றாக செயல்பட்டால், ஆசிரியர்கள் என்னை பாராட்டுவார்கள்" என்றும் நாம் வளர்ந்து வருகிறோம்.


ஆனால், மோட்சத்திற்கு செல்லும் முழுமையான தகுதி நம்மிடம் இல்லை என்பது தான் உண்மை. அதனால் தான் இயேசு இவ்வுலகிற்கு வந்து , நம் பாவங்களுக்காக சிலுவையில் மரணமடைந்தார் .
செயல்பாடுகள் இல்லாத விசுவாசம் நாம் மோட்சத்திற்கு அழைத்து செல்லாது . ஏனெனில்,
இயேசுவின் மேல் உள்ள நம்பிக்கை, நம்மை அவர் முழுமையாக அன்பு செய்கிறார் என்பதை நாம் நம்புவதில் இருந்து ஆரம்பிக்கிறது. அவர் நமக்காக இறந்தார், பிறகு உயிர்த்தெழுந்தார் அதன் முலம் நாம் நித்திய வாழ்வு பெறுவோம் என்று நம்பி அதன் படி வாழ்வதில் இருந்து . ஆரம்பிக்கிறது. இது தான் நம்மை மோட்சத்திற்கு அழைத்து செல்கிறது. எனினும், அதன் நுழை வாயில் மூலம் நடப்பதற்கு , நாம் இயேசுவின் பின் செல்ல வேண்டும். அவ்வாறு பின் செல்வதற்கு, அவர் இறப்பிலும் உயிர்ப்பிலும் நம்பிக்கை மட்டும் இருந்தால் போதாது, அவர் வாழ்விலும் நம்பிக்கை கொள்ள வேண்டும். எப்படி வாழ்ந்தாரோ , அதில் விசுவாசம் கொள்ள வேண்டும். இயேசுவை பின் செல்வதில் நாம் வாழ்க்கை முறை மாற வேண்டும், நம் அனுதின நடவடிக்கைகள் மாற வேண்டும். கிறிஸ்துவை போல மாற வேண்டும்.
நாம் உண்மையாகவே நம்பிக்கையோடு இருக்கிறோம் என்பதை காட்டுவது தான் நாம் செய்யும் நல்ல செயல்கள். இயேசுவின் மேல் உள்ள விசுவாசம் , நாம் இயேசுவை அன்பு செய்வது போல , இயேசு அன்பு செய்யும் அனைவரையும் நாம் செய்தல் வேண்டும். எல்லோரையும், அவர்கள் நம் அன்புக்கு தகுதி உள்ளவர்கள் , தகுதியற்றவர்கள் என்ற பாகுபாடு தேவையில்லை.
மேலும், இயேசுவின் மேல் விசுவாசம் என்பது, அவர் என்ன சொன்னாலும் அதனை செய்வது - நம் நடவடிக்கைகளில், அவரை போலவே நடந்து கொள்வது, அதே மனப்பான்மை உடன் இருப்பது, அவர் அழைத்தலுக்கு செவி சாய்ப்பது : குருவானவராக, சாதாராண இறைபநியாளராக இருப்பது . இது அர்த்தமற்றது போல தோன்றினாலும் அதனை செய்வது.
இயேசு இன்றைய நற்செய்தியில் , இயேசு கேட்பது போல "``நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?' , நம் பதில் , நமது மீட்பர், நம்மை மோட்சத்திற்கு அழைத்து செல்பவர், நம் கடவுள், எப்படி வாழவேண்டும் என்று நமக்கு போதிப்பவர், நம்மை முழுதும் அன்பு செய்பவர், அதன் முலம் நாம் மற்றவர்களையும் கடினமாக இருந்தாலும், நாம் அன்பு செய்ய முடியும்.

© 2015 by Terry A. Modica

No comments: