Friday, September 18, 2015

செப்டம்பர் 20 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை

செப்டம்பர் 20 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 25ம் ஞாயிறு
Wisdom 2:12, 17-20
Ps 54:3-6, 8
James 3:16--4:3
Mark 9:30-37


சுய நலமும், பொறாமையும் - மீண்டு வருவது
மாற்கு நற்செய்தி
அக்காலத்தில் இயேசுவும் அவருடைய சீடர்களும் புறப்பட்டுக் கலிலேயா வழியாகச் சென்றார்கள். அது யாருக்கும் தெரியக்கூடாது என்று இயேசு விரும்பினார். ஏனெனில், ``மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்பட இருக்கிறார்;அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள். கொல்லப்பட்ட மூன்று நாள்களுக்குப் பின் அவர் உயிர்த்தெழுவார்''என்று அவர் தம் சீடருக்குக் கற்பித்துக் கொண்டிருந்தார்.
அவர் சொன்னது அவர்களுக்கு விளங்கவில்லை. அவரிடம் விளக்கம் கேட்கவும் அவர்கள் அஞ்சினார்கள். அவர்கள் கப்பர்நாகுமுக்கு வந்தார்கள். அவர்கள் வீட்டில் இருந்த பொழுது இயேசு, ``வழியில் நீங்கள் எதைப் பற்றி வாதாடிக் கொண்டிருந்தீர்கள்?''என்று அவர்களிடம் கேட்டார். அவர்கள் பேசாதிருந்தார்கள். ஏனெனில் தங்களுள் பெரியவர் யார் என்பதைப் பற்றி வழியில் ஒருவரோடு ஒருவர் வாதாடிக்கொண்டு வந்தார்கள்.
அப்பொழுது அவர் அமர்ந்து,பன்னிருவரையும் கூப்பிட்டு,அவர்களிடம், ``ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்''என்றார்.
பிறகு அவர் ஒரு சிறு பிள்ளையை எடுத்து,அவர்கள் நடுவே நிறுத்தி,அதை அரவணைத்துக் கொண்டு, ``இத்தகைய சிறுபிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக் கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவர் என்னை மட்டும் அல்ல,என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார்''என்றார்.


இன்றைய நற்செய்தியில், பொல்லாத குணத்தை பார்க்கிறோம்: எது நல்லதோ அதனை பொறாமை அழிக்கிறது, சுய லாபம் , மற்றவர்களுக்கு துன்பம் கொடுக்கிறது, அவர்கள் வரும் வழியில் தற்பெருமை மற்றவர்களை ஒதுக்கி விடுவதையும் பார்க்கிறோம்.
முதல் வாசகம் இஸ்ரேயல் நாட்டினை வெளியாட்கள் ஒடுக்கியதை எடுத்து காட்டுகிறது. நற்செய்தியிலோ இயேசு அவரின் இறைசேவையை எதிர்ப்பவர்களை கண்டு உணர்ந்து அவர்களுக்கு அறிவுறுத்துகிறார். யாக்கோபுவின் நற்செய்தியோ பொல்லாத குணங்களை சுட்டி காட்டி, திருச்சபைக்குள் உள்ள பிரச்சினையை பற்றி பேசுகிறார். கிறிஸ்தவர்களுக்குள்ளே உள்ள சண்டையை பற்றி பேசுகிறார்.
பொறாமையும், சுய நலமும் தான் நமது திருச்சபையில் நடக்கும் ஒவ்வொரு குற்ற செயலுக்கும் முழு முதல் காரணமாக . இருக்கிறது , பங்கில் உள்ள வேலையாட்களிடம் உள்ள பிரிவினை, இறைசேவை செய்ய ஆர்வத்துடன் வருபவர்களிடம் உள்ள பிணக்குகள், கிறிஸ்துவ குடும்பத்தில் உள்ளை பிரிவு, கத்தோலிக்க மதத்தில் இருந்து வேறு சபைக்கு வெளியே தள்ளும் செயல்கள் அனைத்தும், பொல்லாத குணங்களால் ஏற்படுகிறது.
எந்த பிரிவினை பிரச்சினையின் மூலத்தை அறிய வேண்டுமெனில், சுய நலத்துடன் உள்ள ஆசையை உற்று கவனித்தால் நமக்கு தெரிய வரும். நேர்மையாகவும், உண்மையான நோக்கத்துடனும் நாம் முயற்சி செய்யும் பொழுது, ஒவ்வொரு பிரிவினையின் முக்கிய காரணம் நமக்கு தெரிய வரும். மேலும் கடவுளின் மாற்று மருந்தும் அதற்கான சுலபமான மாற்று வழியும் நமக்கு தெரிய வரும். மற்ற குழுக்களில் பிரிவினை பார்க்கும் பொழுது , நீங்கள் அவர்களுக்காக வருத்த படுகிறீர்களா? அப்படி இல்லை என்றால், ஏன்? இதற்கான பதில், நம் சொந்த சுய விருப்பத்தினால் ஆன தற்பெருமை ஆகும்.
இயேசு இதற்கு சிகிச்சை தருகிறார் :"ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் ( இதுவும் சுய நலத்தினால் மட்டுமே நமக்கு வருகிறது )அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்'
சுய நலத்துடன் கூடிய ஆசை பாவமாகும். இது மற்றவர்களின் வாய்ப்பை தட்டி . பறிக்கிறது. யாக்கோபு , நாம் என்ன ஆசையுடன் இருந்தாலும் , அது நல்ல விருப்பமாக இருந்தால் கடவுளிடம் கேளுங்கள், பரிசுத்த ஆவியுடன் இணைந்து அதனை அடைய முயற்சி செய்யுங்கள் என்று கூறுகிறார் , அதற்காக நமது சுய விருப்பங்கள் மட்டுமே அதில் நிறைவு பெற வேண்டும் என்று என்ன கூடாது.
நாம் கடவுளிடம் என்ன கேட்கிறோமோ, அது நம் முழு குடும்பத்துக்கும், பங்கு குழுக்களுக்கும், மேலும் பலருக்கும் பயன் உள்ளதாக இருக்கும் பொழுது, கடவுள் கண்டிப்பாக தருவார். மற்றவர்களுக்காக நாம் உதவி செய்ய ஆசைப்பட்டு, அவர்களுக்கு அது எப்படி உதவியாக இருக்கும் என்று நாம் முழுமையாக அறிந்து , அந்த ஆசையை நாம் கடவுளிடம் கேட்கும் பொழுது, அது அமைதியை தருவதாகவும், இரக்கத்துடனும், முழு பயனுடனும், எல்லோருக்கும் ஆதரவளிப்பதாக இருக்கும்.


© 2015 by Terry A. Modica

No comments: