ஆகஸ்டு 21 2016 ஞாயிறு
நற்செய்தி மறையுரை
ஆண்டின் 21ம்
ஞாயிறு
Isaiah 66:18-21
Ps 117:1, 2
(with Mark 16:15 )
Hebrews
12:5-7, 11-13
Luke
13:22-30
லூக்கா நற்செய்தி
இடுக்கமான வாயில்
22இயேசு நகர்கள், ஊர்கள் தோறும் கற்பித்துக்கொண்டே எருசலேம் நோக்கிப்
பயணம் செய்தார்.
23அப்பொழுது ஒருவர் அவரிடம், “ஆண்டவரே, மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா?” என்று கேட்டார். அதற்கு அவர் அவர்களிடம் கூறியது:
24“இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள்.
ஏனெனில் பலர் உள்ளே செல்ல முயன்றும் இயலாமற்போகும்.
25‘வீட்டு உரிமையாளரே, எழுந்து கதவைத் திறந்துவிடும்’ என்று
கேட்பீர்கள். அவரோ, நீங்கள் எங்கிருந்து வந்தவர்கள் என எனக்குத் தெரியாது’ எனப் பதில் கூறுவார்.
26அப்பொழுது நீங்கள், ‘நாங்கள் உம்மோடு உணவு உண்டோம், குடித்தோம். நீர் எங்கள் வீதிகளில் கற்பித்தீரே’ என்று சொல்வீர்கள்.
27ஆனாலும் அவர், ‘நீங்கள் எவ்விடத்தாரோ எனக்குத் தெரியாது. தீங்கு
செய்வோரே, அனைவரும் என்னைவிட்டு அகன்று போங்கள்’ என உங்களிடம் சொல்வார்.
28ஆபிரகாமும் ஈசாக்கும் யாக்கோபும் இறைவாக்கினர் யாவரும் இறையாட்சிக்கு
உட்பட்டிருப்பதையும் நீங்கள் புறம்பே தள்ளப்பட்டிருப்பதையும் பார்க்கும் போது
அழுது அங்கலாய்ப்பீர்கள்.
29இறையாட்சியின்போது கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமிருந்து மக்கள்
வந்து பந்தியில் அமர்வார்கள்.
30ஆம், கடைசியானோர் முதன்மையாவர்; முதன்மையானோர் கடைசியாவர்.”
(thanks to www.arulvakku.com)
மோட்சத்திற்கு செல்லும் சாலை
இன்றைய ஞாயிறின் நற்செய்தியில்,
மோட்சத்திற்கு செல்லும் குறுகிய வாயிலின் கதவுகளுக்கு செல்லும் சாலையின் வழி
காட்டும் கருவியாக சொல்லபடுகிறது. இசையாஸ், கடவுளுக்கு நமது செயல்களும் , என்னங்களும்
தெரியும் என்று சொல்கிறார். நமது செயல்களையும், எண்ணங்களையும் புனிதபடுத்தி, அதன்
மூலம் கடவுளின் மாட்சிமையை நாம் இறக்கும் பொழுது முழுதாக பார்க்க ,இசையாஸ் நமக்கு ஒரு அடையாளம்
தருகிறார். அந்த அடையாளம், வழி காட்டும் கருவி
இயேசு , அவரின் வாழ்வும். -- இயேசு எப்படி வாழ்ந்தார் , எப்படி இறந்தார் --
என்பதெல்லாம் நமக்கு மோட்சத்திற்கு செல்லும் ஒரு வழிகாட்டியாக உள்ளது.
நற்செய்தியில் இயேசு, ஏனெனில் பலர் உள்ளே செல்ல முயலவர் , ஆனால் அவர்களால்
முடியாது, ஏன் முடியாது ?
நற்செய்தி முழுதும் இயேசு அதற்கான
பதிலை கொடுக்கிறார்: அன்பில் நாம் முழுதும் பரிசுத்தமாய் இருத்தல் வேண்டும்.
அதனால் நம்முடைய சின்ன தவறுகள், குறைகள் நம்மை மோட்சத்திற்கு செல்ல விடாமல்
தடுத்து விடும் என்றில்லை. மோட்சத்தின் கதவுகளை திறக்கும் சாவி அன்பு தான், நாம்
அன்பை புறக்கணித்து விட்டால், நாம் சாவியை தூக்கி எறிகிறோம்.
நாம் பாவம் செய்தாலும், நாம்
எப்பொழுதுமே அன்பை ஒதுக்குவதில்லை, ஆனால், நாம் அன்பில் எப்பொழுதும் சரியாக இருக்க
வேண்டும். அதன் அர்த்தம் என்னவெனில், முழுமையான அன்பை நாம் கொடுக்க வேண்டும். நிபந்தனையின்றி,
தியாகத்துடனும் , தீவீரமாகவும் அன்புடன் செயல் பட வேண்டும்.
அன்பில் நாம் மிக சரியாக இருக்க,
நமக்கு கடவுளின் அன்பு தேவையாக இருக்கிறது, இயேசு நம்மில் இருந்தால் தான், நம்
மூலம் அவர் மற்றவர்களை சென்று அடைய முடியும். நம்மால் சொந்தமாக, முழுமையான அன்பை
கொடுக்க முடியாது ஆனால், கடவுளை நம்பி, அவரின் அன்பை மற்றவர்களுக்கு
கொடுக்கும்பொழுது , நம்மிலும் முழு அன்பு நிலைக்கும்.
கடவுளின் அன்பில் நாம்
நிலைத்திருக்க , அதில் முழு நம்பிக்கை பெற, நம்மில் அதனை தடுக்கும் அனைத்தையும்
துரத்தி விட வேண்டும்.: மன்னிக்காமல் இருப்பது, பழி வாங்கும் எண்ணம், பொறாமை
, வெறுப்பு மனப்பான்மை, மற்றவர்களின் தேவை
அறிந்தும் ஏதும் செய்யாமல் இருப்பது, இவை அனைத்தும் நம்மிடமிருந்து வெளியேற
வேண்டும்.
இரண்டாவது வாசகம் கடவுளின் நீதீயை அலட்சியபடுத்த
வேண்டாம் என சொல்கிறது. நமக்கு என்ன கஷ்டம் வந்தாலும், யாரையாவது நாம் குறை
சொன்னாலும், கடவுள் அவர்களை பயன்படுத்தி நம் அன்பை சரி படுத்துகிறார். இதனை நாம்
ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி நம் அன்பை
வளர்க்க வேண்டும். அதில் நாம் கடவுளிடம் வேண்டினால், , அவர் நம் அன்பை இன்னும்
பெரிதாக்க உதவி செய்வார். நாம் இயேசுவை போல மாறுவோம். மோட்சத்திற்கு நேராக
செல்வோம். நம் பரிசுத்த வாழ்வில் இருக்கும் தடைகள் அகலும்.
© 2016 by Terry A. Modica