நவம்பர் 27, 2016 ஞாயிறு நற்செய்தி
மறையுரை
திருவருகை கால முதல் ஞாயிறு
Isaiah
2:1-5
Ps
122:1-9
Romans
13:11-14
Matthew 24:37-44
மத்தேயு நற்செய்தி
37நோவாவின் காலத்தில் இருந்தது போலவே மானிட மகன் வருகையின்போதும் இருக்கும்.
38வெள்ளப் பெருக்குக்கு முந்தைய காலத்தில், நோவா பேழைக்குள் சென்ற நாள்வரை எல்லாரும் திருமணம் செய்து கொண்டும் உண்டும் குடித்தும் வந்தார்கள்.
39வெள்ளப்பெருக்கு வந்து அனைவரையும் அடித்துச் செல்லும்வரை அவர்கள் எதையும் அறியாதிருந்தார்கள். அப்படியே மானிடமகன் வருகையின்போதும் இருக்கும்.
40இருவர் வயலில் இருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டு விடப்படுவார்.
41இருவர் திரிகையில் மாவரைத்துக்கொண்டிருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப்படுவார்.
42விழிப்பாயிருங்கள்; ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் என உங்களுக்குத் தெரியாது.
43இரவில் எந்தக் காவல் வேளையில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் விழித்திருந்து தம் வீட்டில் கன்னமிடவிடமாட்டார் என்பதை அறிவீர்கள்.
44எனவே நீங்களும் ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்
(thanks to www.arulvakku.com)
விண்ணகத்திலிருந்து வரும் நம்பிக்கை
இந்த திருவருகை கால முதல் ஞாயிறின் முக்கிய குறிக்கோள்
நம்பிக்கை ஆகும். முதல் வாசகத்தில் இசையாஸ் வாசகத்தில் வரும் காலங்கள் அனைத்தும்
நன்றாக இருக்கும், ஏனெனில், 1) கடவுள் தான் எல்லாவறிற்கும் மேலான அதிகாரம்
படைத்தவர் என அங்கீகரிக்கபட்டார் 2) ஆனடவருக்கு கீழ் படிதலே எல்லாவற்றிற்கும்
மேலானது.
இந்த எதிர்கால பார்வை இஸ்ரேயலர்களுக்கு நம்பிக்கை தந்தது.
இன்று இதனை விண்ணகத்தின் விளக்கமாக பார்த்தால், நமக்கும் மிக பெரிய நம்பிக்கையை
தருகிறது. நாம் இறந்த பிறகு, நம் மேல் தண்டனைகள் கிடைக்க கூடும். ஏனெனில் நாம்
எப்பொழுதுமே கடவுளின் பாதையில் சென்று கொண்டிருக்கவில்லை. (உத்தரிக்கிற ஸ்தலத்திற்கு செல்ல காரணம் ) ,
ஆனால், நாம் கடவுளின் ஒளியில் வாழ்வோம் , அங்கே போர் இருக்காது.
இது தான் நம் எதிர்காலம் என்று நமக்கு தெரியும் பொழுது,
இங்கு நமக்கு நடக்கும் சோதனைகள், விண்ணகத்திற்கு நாம் செல்ல நம்மை தயார்படுத்தும்
வழிகள் ஆகும். நிலத்தை உழுது மண்ணை நன்றாக
ஆக்கும் கலப்பையை போல இந்த பூமியில் நாம் இருளுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தை
ஒப்பிடலாம், இந்த போராட்டத்தின் மூலம் நாம் இறையரசிற்கு தேவையான அறுவடையை நாம் மிகுதியாக
பெறுவோம். மற்றவர்களுக்காக நாம் துன்பம் ஏற்று கொண்டு அவர்களுக்கு உதவி
செய்யும்பொழுதும், அந்த இறை சேவை மிக பெரிய மதிப்பை பெறுகிறது .
மெசியா எருசலேமிலிருந்து வருவார் என்று இசையாஸ்
சொல்லியிருந்தாலும், நாம் கடவுளின் அதிகாரத்தை ஏற்று கொண்டும், கிறிஸ்துவை போல வாழ
நாம் முனைந்தால், எல்லாமே நல்லது நடக்கும் என்று இசையாஸ் கூறுகிறார். ஆனால்,
சாத்தானுடன் நம் போராட்டாம் இன்னும் முடியவில்லை, இயேசு சாத்தானுடன் மோதி நமக்காக
ஜெயித்து விட்டார். நமது நம்பிக்கை , அமைதிக்காக மட்டும் இல்லை, இயேசு நமக்கு என்ன
செய்தார் இன்னும் என்ன செய்ய போகிறார் என்பதில் இருக்கிறது. அதனால், "அகமகிழ்வோடு ஆண்டவரது
இல்லத்திற்குப் போவோம்"
நற்செய்தி வாசகம், நாம் விழிப்பாயிருக்க வேண்டும் என்றும் கிறிஸ்துவின் நடவடிக்கைகள்
எப்படி இருக்கும் என்று நமக்கு தெரியாது என்றும் , அவர் என்று வருவார் நமக்கு தெரியாது என்றும் சொல்கிறது.
உங்களில் நிராசையானது எது ? நிராசையும் கவலையும் நாம் கிறிஸ்துவை விட்டு வெளியே வர
செய்யும். கிறிஸ்துவை மறக்க செய்யும். மேலும் கிறிஸ்து இந்த வெற்றியை நமக்காக
ஏற்கனவே ஜெயித்து விட்டார். என்பதை நம்மை விட்டு மறக்கடிக்க செய்து விடும்.
கிறிஸ்துவின் பிரசன்னத்தை நாம் எப்போதும் அறிந்து விழிப்போடு இருந்தால் , மேலும்
அவரின் அதிகாரத்தை ஏற்றுக்கொண்டு அவரின் வழி சென்றால், நாம் நம்பிக்கையோடு
வாழ்வோம். வெறும் ஆசையோடு இல்லாமல்,
உண்மையாகவே வாழ்ந்து காட்டுவோம்.
© 2016 by Terry A. Modica