Saturday, February 18, 2017

பிப்ரவரி 19,2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை


பிப்ரவரி 19,2017  ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 7ம் ஞாயிறு
Leviticus 19:1-2, 17-18
Ps 103:1-4,8,10,12-13
1 Corinthians 3:16-23
Matthew 5:38-48
மத்தேயு நற்செய்தி


பழி வாங்குதல்
(லூக் 6:29 - 30)
38கண்ணுக்குக் கண்’, ‘பல்லுக்குப் பல்என்று கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.

39ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்.

40ஒருவர் உங்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்து, உங்கள் அங்கியை எடுத்துக்கொள்ள விரும்பினால் உங்கள் மேலுடையையும் அவர் எடுத்துக் கொள்ள விட்டு விடுங்கள்.

41எவராவது உங்களை ஒரு கல் தொலை வரக் கட்டாயப்படுத்தினால் அவரோடு இரு கல் தொலை செல்லுங்கள்.
42உங்களிடம் கேட்கிறவருக்குக் கொடுங்கள்; கடன் வாங்க விரும்புகிறவருக்கு முகம் கோணாதீர்கள்.
பகைவரிடம் அன்பாயிருத்தல்
(லூக் 6:27 - 28, 32 - 36)
43“‘உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு கூர்வாயாக’, ‘பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாகஎனக் கூறியிருப்பதைக் கேட்டிருக்கிறீர்கள்.

44ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்.

45இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள். ஏனெனில் அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார்.

46உங்களிடத்தில் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்துவீர்களானால் உங்களுக்கு என்ன கைம்மாறு கிடைக்கும்? வரி தண்டுவோரும் இவ்வாறு செய்வதில்லையா?

47நீங்கள் உங்கள் சகோதரர் சகோதரிகளுக்கு மட்டும் வாழ்த்துக் கூறுவீர்களானால் நீங்கள் மற்றவருக்கும் மேலாகச் செய்துவிடுவதென்ன? பிற இனத்தவரும் இவ்வாறு செய்வதில்லையா?

48ஆதலால், உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்.
(thanks to www.arulvakku.com)
எப்படி இரக்கத்துடன் கூடிய அன்பை கொடுப்பது?
இன்றைய நற்செய்தியின் முதல் முக்கிய நோக்கம்-இரக்கம் - தான். அன்பு தான் மக்களின் இதயத்தை திறக்கும் என்பதை நினைத்து பாருங்கள். அவர்கள் இதயத்தை மூடும் பொழுது , இறக்கம் தான் பின் வாசல் வழியாக அவர்கள் இருதயத்தை தோடும் கருவியாகும்.
அன்றைய காலத்தில் , யாராவது ஒருவர் கண்ணை பாதிக்கும் வகையில் குத்திவிட்டால், அவர் தனது உறவினர்களுடன் சென்று , கண்ணை குத்தியவரின் கண்ணையோ அல்லது அவரை சார்ந்தவர்களின் கண்களை அவர்கள் தாக்குவர்.   அதனால், கடவுள் அந்த மக்களிடம், எல்லோரும் அன்புடன் இருக்க வேண்டும் என்ற சட்டத்தை கொடுக்கிறார். யாராவது உங்கள் கண்களை காயபடுத்தினால், அதே செயலை அவகளுக்கும் நீங்கள் செய்யலாம், ஆனால் இது அன்பு செயல் ஆகாது, இருந்தும் இது ஒரு நியாமான நடவடிக்கை ஆகும்.

இயேசு இந்த உலகத்திற்கு வந்த பின், அதனை இன்னும் உயர்வான நிலைக்கு கொண்டு சென்றார்: யாராவாது உங்களை தாக்கினால், அதே தாக்குதல் வேண்டாம், அனால் அவர்களை அன்பு செய்யுங்கள் என்று கூறுகிறார்.
மக்கள் உங்களுக்கு எதிராக பாவம் செய்தால்,  அவர்கள் இதயத்தை கடவுளுக்காக , மேலும் அவரின் அன்பையும் பெற , திறக்காமல் மூடி கொள்கிறார்கள் , அதனை அவர்களும் புரிந்து கொள்வதில்லை. ஆனால், நாம் அவர்களை அன்பு செய்தால், நாம் அவர்களிடம் கடவுளை பின் வாசல் வழியாக கொண்டு வருகிறோம்.
இப்படி செய்வதால், நீங்கள் தொடர்ந்து துன்பபட்டு கொண்டே இருக்க வேண்டும் என்பதில்லை, ஆனால், தொடர்ந்து நாம் அன்பு செய்து கொண்டே இருந்தால், -- நாம் கடவுளை அவர்களிடத்தில் கொண்டு வந்து, அவர்களுக்கு குனமாக்குதலை உண்டாக்குகிறோம்.
யாராவது , உங்கள் பொருளை எடுத்து விட்டாலோ, நியாயமின்றி உங்களிடம் நடந்து கொண்டால், அவர்கள் செருக்கை கர்வத்தை நீங்கள் தடுத்து விட முடியாது, ஆனால், அவர்கள் உங்களுக்கு எதிராக பாவம் செய்வதை தடுத்து விட முடியும். தாராள அன்பை தொடர்ந்து வழங்குங்கள், இன்னும் கூடுதலான அன்பை கொடுங்கள். இது சரியான செயலாக இருக்காது என்று எனக்கே தெரிகிறது. ஆனால், இயேசு சொல்வது சரியாக தான் இருக்கும், தெய்வம் எப்பொழுதுமே சரி தான்.
யாராவது உங்களிடம், அவர்கள் செய்யும் வேலையை , அவர்கள் சோம்பலினால், உங்களிடம் செய்ய சொன்னால், நீங்கள் அவர்கள் பாவம் செய்வதை தடுக்க முடியும், அந்த வேலையை மகிழ்ச்சியோடு ஏற்று கொண்டு, அதனை செய்யுங்கள், அப்பொழுது அவர்கள் பாவம் செய்யாதவர்களாக இருப்பர்.
இயேசுவின் இந்த திட்டம், நம் மூலம் , கடவுளின் மேலான அன்பே பிரதானமானது .  இவ்வாறாக செய்யும்பொழுது, நாம் சாத்தானை தோற்கடிப்போம்.
இதனை தான் நாம் சரியான வழி என்று எடுத்து கொள்ள வேண்டும். சரியான வழி - பைபிளில் குறிப்பிடுவது என்னவெனில் - அன்பு, முழுமை, அளவில்லாதது, இரக்கத்துடன் கூடிய அன்பு.

© 2017 by Terry A. Modica

No comments: