பிப்ரவரி 26, 2017 ஞாயிறு
நற்செய்தி மறையுரை
ஆண்டின் 8ம் ஞாயிறு
Isaiah
49:14-15
Ps
62:2-3,6-9
1
Corinthians 4:1-5
Matthew
6:24-34
மத்தேயு நற்செய்தி
கடவுளா? செல்வமா?
(லூக் 16:13)
(லூக் 16:13)
24‘எவரும் இரு தலைவர்களுக்குப்
பணிவிடை செய்ய முடியாது. ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்து
கொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை
செய்ய முடியாது.
கவலை வேண்டாம்
(லூக் 12:22 - 34)
(லூக் 12:22 - 34)
25ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன்; உயிர் வாழ எதை உண்பது, எதைக் குடிப்பது என்றோ, உடலுக்கு எதை உடுத்துவது என்றோ நீங்கள் கவலை கொள்ளாதீர்கள். உணவை விட உயிரும்
உடையைவிட உடலும் உயர்ந்தவை அல்லவா?
26வானத்துப் பறவைகளை நோக்குங்கள்; அவை விதைப்பதுமில்லை; அறுப்பதுமில்லை; களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதுமில்லை. உங்கள் விண்ணகத் தந்தை அவற்றுக்கும் உணவு
அளிக்கிறார். அவற்றைவிட நீங்கள் மேலானவர்கள் அல்லவா!
27கவலைப் படுவதால் உங்களில் எவர் தமது உயரத்தோடு ஒரு முழம் கூட்ட முடியும்?⁕
28உடைக்காக நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? காட்டுமலர்ச் செடிகள் எப்படி வளருகின்றன எனக் கவனியுங்கள்; அவை உழைப்பதுமில்லை, நூற்பதுமில்லை.
29ஆனால் சாலமோன் கூடத் தம் மேன்மையில் எல்லாம் அவற்றில் ஒன்றைப் போலவும்
அணிந்திருந்ததில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.✠
30நம்பிக்கை குன்றியவர்களே, இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பில் எறியப்படும் காட்டுப்புல்லுக்குக்
கடவுள் இவ்வாறு அணிசெய்கிறார் என்றால் உங்களுக்கு இன்னும் அதிகமாகச் செய்ய
மாட்டாரா?
31ஆகவே, எதை உண்போம்? எதைக் குடிப்போம்? எதை அணிவோம்? எனக் கவலை கொள்ளாதீர்கள்.
32ஏனெனில் பிற இனத்தவரே இவற்றையெல்லாம் நாடுவர்; உங்களுக்கு இவை யாவும் தேவை என உங்கள் விண்ணகத் தந்தைக்குத் தெரியும்.
33ஆகவே அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும்⁕ நாடுங்கள். அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்.
34ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதீர்கள். ஏனெனில் நாளையக் கவலையைப் போக்க நாளை
வழி பிறக்கும். அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லையே போதும்.
(thanks to www.arulvakku.com)
எந்த அளவிற்கு கடவுள் மேல் நம்பிக்கை கொண்டுள்ளீர்கள்?
இன்றைய நற்செய்தி இயேசுவின் மலை பிரசங்கத்திலிருந்து ஒரு
பகுதியாகும். இயேசு பரிசுத்த வாழ்வில் வாழ்ந்து காட்டி, எப்படி வாழவேண்டும்
என்றும் போதிக்கிறார். இதே வழிகாட்டுதலை, இயேசு அவர் சொல்லி கொடுத்த ஜெபத்திலும்
கோடிட்டு கட்டுகிறார். "பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே " என்று
அவர் சொல்லி கொடுத்த ஜெபத்தில், "எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்
" என்றும் சொல்லி கொடுத்து, இந்த இரண்டு இடங்களிலும், நம் அனுதின வாழ்வில்
கடவுளை நாம் நம்பி, அவர் மேல் நமது பார்வை என்றும் இருக்க வேண்டும் என்றும்
சொல்கிறார்.
ஒவ்வொரு சோதனையிலும் , ஒவ்வொரு சவால்களிலும் , ஒவ்வொரு
கஷ்டத்திலும், நாம் ஒன்று கடவுளை நம்பி இருப்போம், அல்லது, நமக்கு தெரிந்த அறிவை
கொண்டு, நாம் ஒரு முடிவுக்கு வந்து இந்த உலக வழியில் செல்வோம். இந்த இரண்டையும்
ஒரே நேரத்தில் செய்ய முடியாது. ஒரு காலை மோட்சத்தை நோக்கி வைத்தும் , இன்னொரு காலை
, இந்த உலக வழியில் வைத்தும் நம்மால் இருப்பது போல கற்பனை செய்து பாருங்கள், , இது
நாமாக ஏற்படுத்தி கொள்கிற முட்டாள் தனம்.
"மம்மான்" என்ற வார்த்தை அராமைக் மொழிளிருந்து
வந்தது . அதன் அர்த்தம் "சொத்து" அல்லது "செல்வம்" என்று
அர்த்தம் ஆகும். சிலர் சொல்வடையாக சொல்வதுண்டு, ஒருவர் கடவுளிடம், "எங்கள்
அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்" என்று கடவுளிடம் கேட்ட பின்பு,
கடவுள், அவரிடம் "உங்கள் உணவு ஏற்கனவே உங்களிடம் இருக்கிறது,
மற்றவர்களுடைய உணவும், உங்களிடம்
இருக்கிறது" என்று கூறினார் என்று நம்மில் பலர் சொல்லி கேட்டிருக்கிறோம்.
மற்றவர்களுக்கு தேவையான எதனை நாம் வைத்திருக்கிறோம்? நம்மிடம் தாராளாமாக உள்ள
ஒன்று நமது எதிர்காலத்துக்காக சேமித்து வைத்து இருக்கிறோம் ஆனால் பலர் இப்போதே அது
கிடைக்காமல், அவர்கள் போராடி வருகின்றனர். நாம் சேமித்து வைத்ததை மற்றவர்களிடம்
கொடுக்க நமக்கு பயமாக இருக்கலாம், இன்னும் சில நாட்கள் கழித்து நமக்கே
தேவைப்படலாம் என்று நாம் பயப்படலாம், (இதனால், தான், கத்தோலிக்கர்கள் பலர்,
கோவிலுக்கு தாராள நந்கொடை கேட்கும்பொழுது , அவர்கள் எண்ணம் தடுமாறுகிறது)
இது மாதிரியான எண்ணம் நமக்கு இருக்குமாயின், நாம் கடவுளை
முழுதுமாக நம்பவில்லை , அவர் நம்மை காத்து கொள்வார் என்று நாம் விசுவாசிக்கவில்லை
என்று அர்த்தம் . நாம் தாராள மனதுடன் இல்லாமல் இருப்பது போல கடவுளும் இருப்பார்
என்று நாம் அனுமானிக்கிறோம்.
அதனால் இயேசு இப்படி சொன்னார், "நீங்கள் அதிகம்
கவலைபடுகிறீர்கள்" , நாம் கவலைகளை பற்றியே சிந்திக்காமல், கடவுள் எவ்வளவு
நல்லவர் என்று நாம் நம் சிந்தனை முழுதுமாக இருக்க வேண்டும்.
"கடவுள் உங்களை அதிகமாக அன்பு செய்கிறார், உங்களை அவர்
பார்த்து கொள்வார், இறையரசை நோக்கி நாம் சென்றால், நம் அனுதின வாழ்வில் இறையரசை நோக்கிய வாழ்வாக இருக்கட்டும்
என்று இயேசு சொல்கிறார். மேலும், உங்களுக்கு தேவையானது அனைத்தும் கிடைக்கும்.
என்றும் இயேசு சொல்கிறார்.
இயேசுவை விட்டு விட்டு அவர் மேல் நம் பார்வை இல்லாமல்,
கவலையிலே நம் மனம் இருந்தால், , அது பாவம் ஆகும். இயேசு நம் முலம் கொடுக்க
நினைப்பதை மற்றவர்களுக்கு நாம் பகிராமல் இருப்பதும் பாவம் ஆகும்.
© 2017 by Terry A. Modica
No comments:
Post a Comment