ஜூலை 2, 2017 ஞாயிறு
நற்செய்தி மறையுரை
ஆண்டின் 13ம் ஞாயிறு
2 Kings 4:8-11, 14-16a
Ps 89:2-3, 16-19
Romans 6:3-4, 8-11
Matthew 10:37-42
மத்தேயு
நற்செய்தி
37என்னைவிடத் தம் தந்தையிடமோ தாயிடமோ மிகுந்த அன்பு கொண்டுள்ளோர் என்னுடையோர் என கருதப்படத் தகுதியற்றோர். என்னைவிடத் தம் மகனிடமோ மகளிடமோ மிகுதியாய் அன்பு கொண்டுள்ளோரும் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர்.
38தம் சிலுவையைச் சுமக்காமல் என்னைப் பின்பற்றி வருவோர் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர்.
39தம் உயிரைக் காக்க விரும்புவோர் அதை இழந்து விடுவர். என் பொருட்டுத் தம் உயிரை இழப்போரோ அதைக் காத்துக் கொள்வர்.
கைம்மாறு பெறுதல்
(மாற் 9:41)
(மாற் 9:41)
40“உங்களை ஏற்றுக்கொள்பவர் என்னை ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவரோ என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார்.
41இறைவாக்கினர் ஒருவரை அவர் இறைவாக்கினர் என்பதால் ஏற்றுக் கொள்பவர் இறைவாக்கினருக்குரிய கைம்மாறு பெறுவார். நேர்மையாளர் ஒருவரை அவர் நேர்மையாளர் என்பதால் ஏற்றுக்கொள்பவர் நேர்மையாளருக்குரிய கைம்மாறு பெறுவார்.
42இச்சிறியோருள் ஒருவருக்கு அவர் என் சீடர் என்பதால் ஒரு கிண்ணம் குளிர்ந்த நீராவது கொடுப்பவரும் தம் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.”
(thanks to www.arulvakku.com)
எந்த விஷயம் உங்களுக்கு மிகவும்
முக்கியமானது?
இன்றைய ஞாயிறு நார்செய்தியில், இயேசுவின் மேல் நம் கண் எப்பொழுதும் இருக்க
வேண்டும் என்று சொல்கிறார், அது தான் நமக்கு மிகவும் முக்கியம் என்றும், மேலும்
இயேசுவே நமது முன்னுரிமை ஆக இருக்க வேண்டும் என்றும் சொல்கிறார். கடவுளோடு நமக்கு
இருக்கும் உறவு தான் மிகவும் முக்கியம், அதனை விட்டு வேறுதுவும் நமக்கு முக்கியம்
இல்லை. இதன் அர்த்தம் என்ன என்றால், அவர்
அழைத்து செல்லும் இடத்திற்கு நாம் அவர் பின்பு செல்ல வேண்டும், ஒவ்வொரு நாளும்
1௦௦% சதவிதம் நாம் கடவுளுக்காக கொடுக்க வேண்டும். (விசுவாசத்தில் சாதாரணமாக
இருந்து விட முடியாது), இயேசு தன வாழ்வை கொடுத்து மற்றவர்களுக்காக உழைத்தாரோ அதே
போல நாமும் இருக்க வேண்டும்.
நமது வாழ்வை விட்டு கொடுப்பது என்பது தொடர்ந்து தியாகம் செய்வது ஆகும் நம்மிடம் உள்ள குளிர்ந்த நீரை ,
தாகம் உள்ள மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டியிருக்கும். நமது பிசி வேளைகளில் மத்தியில்,
ஒருவரை வரவேற்று அவர் மூலம் கடவுள் சொல்வதை நாம் கேட்க வேண்டும்.
மற்றவர்களுக்காக நம் வாழ்வை கொடுக்க
நாம் தாயாராக இல்லை என்றால், கிறிஸ்துவின் சிலுவையை, நமக்காக அவர் பட்ட வேதனைகளை
நாம் நிராகரிக்கிறோம் என்று அர்த்தம். நம்மிடம் நல்ல மாதிரியாக நடந்து கொள்ளாமல்
இருப்பவர்களிடம் , அவர்களை விட்டு விலக ஒன்றும் தடையில்லை , அவர்களிடமிருந்து இயேசு உங்களை பாதுகாப்பாக
வெளியே அழைத்து கொண்டு வருவார். இது மாதிரியாக உங்களை நிராகரிக்கிரவர்களை , உங்கள்
மேல் துன்பம் கொடுப்பவர்களை விட்டு விலகி செல்வதும் , சிலுவையின் ஒரு வழி தான்.
நாம் உண்மையாக கிறிஸ்துவை பின்பற்றி
செல்லும் பொழுது, அவரை நாம் முழுமையாக பெற்று கொள்ளலாம், அவரிடமிருந்து அனைத்தும்
நாம் பெற்றுகொள்வோம். நமது பயத்தை , சொந்த கொள்கைகளை விட்டு விடும்பொழுது, இயேசு
நம்மை புதிய இடத்திற்கு அழைத்து செல்கிறார், மேலும், பிரசினைகளை கையாள புதிய
வழிகளை காண்பிக்கிறார். புதிய வாழ்வில் கிறிஸ்துவில் கண்டுகொள்கிறோம்.
கிறிஸ்துவின் வழிகள் எப்பொழுமே நாம் பயபடுவதை விட நல்ல வழிகள் தான்.
மிதமான விசுவாசத்திற்கும்,
கிறிஸ்துவில் முழுதும் இணைந்து , சாகசங்கள் நிறைந்த, அற்புதங்கள், எதிர்பாராத தீர்வுகள்,
சிகிச்சைகள், வெற்றிகளுடன் உள்ள கிறிஸ்த வாழ்விற்கும் , கடவுளுக்கு நாம் எவ்வளவு
முக்கியமானவர்கள் என்று நாம் அறிந்து கொள்வதிலும் வித்தியாசம் இருக்கிறது.
©
2017 by Terry A. Modica
No comments:
Post a Comment