Saturday, June 24, 2017

ஜூன் 25 2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை

ஜூன் 25 2017  ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின்  12ம் ஞாயிறு
Jeremiah 20:10-13
Ps 69:(14c)8-10,14,17,33-35
Romans 5:12-15
Matthew 10:26-33

மத்தேயு நற்செய்தி

அஞ்சாதீர்கள்
(லூக் 12:2 - 7)
26எனவே, அவர்களுக்கு அஞ்ச வேண்டாம். ஏனெனில் வெளிப்படாதவாறு மூடப்பட்டிருப்பது ஒன்றும் இல்லை; அறியமுடியாதவாறு மறைந்திருப்பதும் ஒன்றும் இல்லை.

27நான் உங்களுக்கு இருளில் சொல்வதை நீங்கள் ஒளியில் கூறுங்கள். காதோடு காதாய்க் கேட்பதை வீட்டின் மேல்தளத்திலிருந்து அறிவியுங்கள்.

28ஆன்மாவைக் கொல்ல இயலாமல். உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்சவேண்டாம். ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள்.

29காசுக்கு இரண்டு சிட்டுக் குருவிகள் விற்பதில்லையா? எனினும் அவற்றுள் ஒன்று கூட உங்கள் தந்தையின் விருப்பமின்றித் தரையில் விழாது.

30உங்கள் தலைமுடியெல்லாம் எண்ணப்பட்டிருக்கின்றது.

31சிட்டுக் குருவிகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள். எனவே அஞ்சாதிருங்கள்.
மக்கள் முன்னிலையில் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்தல்
(லூக் 12:8 - 9)
32மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக்கொள்பவரை விண்ணுலகில் இருக்கும் என் தந்தையின் முன்னிலையில் நானும் ஏற்றுக்கொள்வேன்.

33மக்கள் முன்னிலையில் என்னை மறுதலிப்பவர் எவரையும் விண்ணுலகில் இருக்கிற என் தந்தையின் முன்னிலையில் நானும் மறுதலிப்பேன்.

(THANKS TO WWW.ARULVAKKU.COM)

நற்செய்தியோடு தைரியமாக இருங்கள்!
நீங்கள் இருளில் இருந்த நேரம் பற்றி நினைத்து பாருங்கள்: எடுத்து காட்டாக ஒரு பாவத்தில் இருந்தீர்கள், அல்லது கடவுள் உங்கள் ஜெபம் கேட்காமல் உங்களை ஒதுக்கி வைத்துவிட்டு இருக்கிறார் என நினைத்த நேரம், உங்களுக்கு கடவுள் கொடுத்த அன்பளிப்புகள், திறமைகள் மறைந்து போய்விட்டது என்று நினைத்த நேரம் பற்றி எடுத்து கொள்ளுங்கள். அந்த நேரத்தில் இயேசு உங்களிடம் என்ன சொன்னார் (நற்செய்தி வாசகங்கள் மூலம் , அல்லது நண்பன் மூலம் பேசியிருக்கலாம், அல்லது திருப்பலி பிரசங்கம் மூலம் உங்களிடம் பேசியிருக்கலாம் )?  உங்கள் காதில் என்ன ரகசியமாக சொனார்?  அவரின் வார்த்தைகளும் , வழி காட்டுதலும் உங்களுக்கு நற்செய்தி!
இன்றைய நற்செய்தியில் இயேசு " உங்களுக்கு இருளில் சொல்வதை நீங்கள் ஒளியில் கூறுங்கள்" என்று சொல்கிறார்  .
 இயேசு உங்களை அழைக்கிறார், இறைபணி செய்ய அர்சித்து, உங்களுக்கு தேவையான ஆற்றலையும் அதிகாரத்தையும்  பரிசுத்த ஆவியின் மூலம் கொடுக்கிறார் நற்செய்தியை மற்றவர்களுடன் பகிர உங்களுக்கு தேவையான அனைத்தையும் கொடுக்கிறார். உறுதியாகவும், எல்லோருக்கும் தெரியும்படி நற்செய்தியை அறிவியுங்கள், அதன் மூலம் இதனை கேட்க நினைப்பவர் அனைவரும் கேட்கட்டும். இயேசு உங்கள் வாழ்க்கையில் என்ன வெல்லாம் செய்கிறார் மேலும், உங்கள் வளர்ச்சிக்கு எவ்வாறு உதவினார், பாவங்களிலிருந்து மீள எப்படியெல்லாம் உதவி செய்தார் என்பதை பகிர்ந்து கொள்ள பயப்பட வேண்டாம் .

முதல் வாசகத்தில் சொல்லியுள்ளது போல ஜெரமையாவிற்கு நேர்ந்த கொடுமை போல நமக்கும் நடக்கலாம், சிலர் உங்களை கேலி செய்யலாம், ஒதுக்கி தள்ளலாம், ஆனால் நாம் உறுதியுடன் இருக்க வேண்டும். ஏனெனில் தந்தை கடவுள் நம்மோடு இருக்கிறார். உங்களுக்கு சாம்பியன் போல ஆக்கி , நம்மை தடுத்து நிறுத்தியவர்களை தலை குனிய வைப்பார். இயேசு "யாருக்கும் பயப்பட வேண்டாம் " என சொல்கிறார். கடவுள் கண்டிப்பாக எப்பொழுதும் நம் மேல் அக்கறை கொள்கிறார்.

இயேசுவை ஏற்று கொள்கிறவர்களை , அவர் ஏற்றுகொள்கிறார். இதனையே மாறாக சொல்வதானால், விசுவாசத்தினால், நமக்கு ஏற்படும் அவமானங்களையும், கிண்டல்களும் நடைபெறும்பொழுது இயேசு நமக்கு ஆறுதல் சொல்லி நம்மை காக்கின்றார். அவர் நம்மை பற்றி என்ன நினைக்கிறார் என்பது மட்டுமே நமக்கு முக்கியமாக இருக்க வேண்டும். மற்றவர்கள் என்ன பேசினாலும் கண்டு கொள்ள வேண்டாம். அவரிடம் கூர்ந்து கேளுங்கள். உங்கள் இருதயத்தின் தூய்மை பற்றி உங்கள் காதில் கிசு கிசுப்பாய் சொல்வதை கேளுங்கள்.  உங்களில் உள்ள எல்லா நல்லதையும் இயேசு கூறுவார். மேலும் நீங்கள் செய்த நல்ல செயல்களை உங்களிடம் கூறி , உங்களை போராட்டுவார். உங்களுக்கு நற்செய்தியை கூறுகிறார். அது கண்டிப்பாக எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள கூடியதே.
© 2017 by Terry A. Modica

No comments: