Saturday, September 9, 2017

செப்டம்பர் 10 2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை

செப்டம்பர் 10 2017  ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 23ம் ஞாயிறு

Ezekiel 33:7-9
Ps 95:1-2, 6-9
Romans 13:8-10
Matthew 18:15-20


மத்தேயு நற்செய்தி

பாவம் செய்யும் சகோதரர்
(லூக் 17:3)
15உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால் நீங்களும் அவரும் தனித்திருக்கும்போது அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள். அவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது; உங்கள் உறவு தொடரும்.

16இல்லையென்றால் இரண்டு அல்லது மூன்று சாட்சிகளுடைய வாக்குமூலத்தால் அனைத்தும் உறுதி செய்யப்படும்என்னும் மறைநூல் மொழிக்கு ஏற்ப உங்களோடு ஒன்றிரண்டு பேரைக் கூட்டிக் கொண்டு போங்கள்.

17அவர்களுக்கும் செவிசாய்க்காவிடில் திருச்சபையிடம் கூறுங்கள். திருச்சபைக்கும் செவிசாய்க்காவிடில் அவர் உங்களுக்கு வேற்று இனத்தவர் போலவும் வரிதண்டுபவர் போலவும் இருக்கட்டும்.

18மண்ணுலகில் நீங்கள் தடைசெய்பவை அனைத்தும் விண்ணுலகிலும் தடைசெய்யப்படும்; மண்ணுலகில் நீங்கள் அனுமதிப்பவை அனைத்தும் விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

19-20உங்களுள் இருவர் மண்ணுலகில் தாங்கள் வேண்டும் எதைக் குறித்தும் மனமொத்திருந்தால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தை அதை அவர்களுக்கு அருள்வார்.ஏனெனில் இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

(thanks to www.arulvakku.com)
மனம் திரும்ப வைக்கும் 3 வழிகள்
இன்றைய ஞாயிறு நற்செய்தி, நாம் நீதிக்காகவும், பரிசுத்த வாழ்விற்கும், உண்மையாக துணை நிறக வேண்டும் என்றும், பாவ வழிகளில் செல்பவர்களை மனம் திரும்ப அழைக்க வேண்டும் என்று கூறுகிறது. அப்படி நாம் செய்ய வில்லையென்றால், நாமும் அந்த பாவங்களில் பங்கு கொள்கிறோம் என்று அர்த்தம். அதற்கான விலையை நாம் கொடுக்க வேண்டும். (முதல் வாசகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது )
இதே நற்செய்தியில் இயேசு நாம் சமூகத்தோடு இணைந்து இந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும் ஏன சொல்கிறார், அவர்களின் அறிவுரையும் , ஜெப உதவியும் நமக்கு மிகவும் தேவை. எப்படி ?
முதலில் நாம் பாவம் செய்பவர்களிடம பேசுகிறோம். அவர்களே அவர்களை துன்புறுத்தி கொள்கிறார்கள் , அவர்களின் பாவங்கள் மூலம் மற்றவர்களுக்கும் துன்பம் கொடுக்கிறார்கள். (அந்த துன்பங்களை நாம் பார்க்க முடியாவிட்டாலும், எல்லா பாவங்களுமே துன்பம் கொடுப்பவை தான் ), இதனை நாம் அவர்களிடம் சொல்ல வில்லையென்றால் நாம் அவர்கள் மேல் அன்பு செலுத்தவில்லை , அவர்கள் மேல் நாம் அக்கறை கொள்ளவில்லை.
நாம் இந்த உண்மையை அவர்களுக்கு பகிர்ந்து அவர்கள் மாறாவிட்டால் கூட, நம் பாவங்களிலிருந்து நாம் வெளியே வருகிறோம். ஆனால் நமது முயற்சியை விட்டு விட கூடாது, மேலும் நம்மில் சிலரை அழைத்து கொண்டு, இன்னும் அதிகமாய் அவர்களை மனம் மாற்ற முயற்சிக்க வேண்டும் , அவர்கள்  பாவங்களை அறிந்து மனம் மாற அழைக்க வேண்டும்.
இதுவும் தோற்றுவிட்டால், இன்னும் அதிகமாய் முயற்சிக்க வேண்டும்.
சிலருக்கு உதவி செய்யும்பொழுது , அது ஏற்று கொள்ளபடவில்லைஎனில், மட்டுமே, நாம் அந்த முயற்சியை கைவிடுகிறோம். உண்மையில் சொல்ல போனால், நாம் இதனை முடிவிற்கு கொண்டுவரவில்லை அவர்கள் தான் நம்மை விட்டு செல்கிறார்கள். பாவம் செய்பவர்கள் தான் நம்மை விட்டு பிரிந்து செல்கிறார்கள். எனினும், இயேசு எப்படி வரி தண்டுவோரையும், பிற இனத்தாரையும் நடத்தினார் என்று பாருங்கள், அவர்கள் மேல் என்று அன்பு செய்ய அவர் தவறியதில்லை. மேலும் அவர்களுக்காக மரணம் எய்தினார்.!.

© 2017 by Terry A. Modica

No comments: