Saturday, September 23, 2017

செப்டம்பர் 24, 2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை

செப்டம்பர்  24, 2017  ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 25ம் ஞாயிறு
Isaiah 55:6-9
Ps 145:2-3, 8-9, 17-18
Romans 1:20c-24, 27a
Matthew 20:1-16a
மத்தேயு   நற்செய்தி

திராட்சைத் தோட்ட வேலையாள்கள் உவமை
1விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்; நிலக்கிழார் ஒருவர் தம் வேலையாள்களை வேலைக்கு அமர்த்த விடியற்காலையில் வெளியே சென்றார்.

2அவர் நாளொன்றுக்கு ஒரு தெனாரியம் கூலி என வேலையாள்களுடன் ஒத்துக்கொண்டு அவர்களைத் தம் திராட்சைத் தோட்டத்துக்கு அனுப்பினார்.

3ஏறக்குறைய காலை ஒன்பது மணிக்கு அவர் வெளியே சென்ற பொழுது சந்தை வெளியில் வேறுசிலர் வேலையின்றி நிற்பதைக் கண்டார்.
4அவர்களிடம், ‘நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்; நேர்மையான கூலியை உங்களுக்குக் கொடுப்பேன்என்றார்.

5அவர்களும் சென்றார்கள். மீண்டும் ஏறக்குறைய பன்னிரண்டு மணிக்கும் பிற்பகல் மூன்று மணிக்கும் வெளியே சென்று அப்படியே செய்தார்.

6ஏறக்குறைய ஐந்து மணிக்கும் வெளியே சென்று வேறு சிலர் நிற்பதைக் கண்டார். அவர்களிடம், ‘நாள் முழுவதும் வேலை செய்யாமல் ஏன் இங்கே நின்று கொண்டிருக்கிறீர்கள்?’ என்று கேட்டார்.

7அவர்கள் அவரைப் பார்த்து, ‘எங்களை எவரும் வேலைக்கு அமர்த்தவில்லைஎன்றார்கள். அவர் அவர்களிடம், ‘நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்என்றார்.

8மாலையானதும் திராட்சைத் தோட்ட உரிமையாளர் தம் மேற்பார்வையாளரிடம், ‘வேலையாள்களை அழைத்துக் கடைசியில் வந்தவர் தொடங்கி முதலில் வந்தவர்வரை அவர்களுக்குரிய கூலி கொடும்என்றார்.

9எனவே ஐந்து மணியளவில் வந்தவர்கள் ஒரு தெனாரியம் வீதம் பெற்றுக் கொண்டனர்.

10அப்போது முதலில் வந்தவர்கள் தங்களுக்கு மிகுதியாகக் கிடைக்கும் என்று எண்ணினார்கள். ஆனால் அவர்களும் ஒரு தெனாரியம் வீதம் தான் பெற்றார்கள்.

11அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டபோது அந்நிலக்கிழாருக்கு எதிராக முணுமுணுத்து,

12கடைசியில் வந்த இவர்கள் ஒரு மணி நேரமே வேலை செய்தார்கள். பகல் முழுவதும் வேலைப் பளுவையும் கடும் வெயிலையும் தாங்கிய எங்களோடு இவர்களையும் இணையாக்கி விட்டீரேஎன்றார்கள்.

13அவரோ அவர்களுள் ஒருவரைப் பார்த்து, ‘தோழரே, நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை. நீர் என்னிடம் ஒரு தெனாரியம் கூலிக்கு ஒத்துக் கொள்ளவில்லையா?

14உமக்குரியதைப் பெற்றுக் கொண்டு போய்விடும். உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம்.

15எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?’ என்றார்.

16
இவ்வாறு கடைசியானோர் முதன்மையாவர். முதன்மையானோர் கடைசியாவர்
என்று இயேசு கூறினார்.
(THANKS TO WWW.ARULVAKKU.COM)

முழுதும் அன்பு செய்யபடுகிறீர்கள் சமமாக அன்பு கொடுக்கபடுகிறது
கடவுள் நியாயமாக நடப்பதில்லை! எத்தனை முறை நாம் இப்படி நினைத்திருப்போம் ?  கண்டிப்பாக இது உண்மையாக கூத இருக்கலாம்,  நம் வாழ்வின் நடைமுறையில். இன்றைய   நற்செய்தி இதற்கு மிக சரியான எடுத்து காட்டாகும்.
நிலத்தின் சொந்தகாரர் நியாமாக நடந்து கொண்டதாக தெரியவில்லை. நாம் அவரை புரிந்து கொள்ள முயற்சிப்போம் , எனினும், இதே உவமையை பெற்றோரோடு ஒப்பிடுகையில், அன்புள்ள தந்தை அவரின் அனைத்து குழந்தைகளையும் சமமாக அன்பு செய்கிறார். இருந்தாலும், எந்த குழந்தைக்கு அதிகம் தேவை  படுகிறதோ அந்த குழந்தையின் மேல் அதிகம் கவனம் செலுத்தலாம், மற்ற குழந்தைகளையும் அதே போல அன்பு செய்கிறார்.
 தந்தை கடவுள் , திராட்சை  தோட்டத்தின் முதலாளி போன்றவர் தான், அவர் எல்லோருக்கும் சமமாஹவே கொடுப்பவர். நாம் நாமாகவே மோட்சத்திற்கு செல்ல முடியாததால், எல்லோரும் சமம் ஆக பாவிப்பதில் தவறில்லை. சிலர் அதிகமாக இறைபணி செய்திருந்தாலும், எல்லோருக்கும் மோட்சம் உண்டு. மேலும் கடவுள் எல்லோருக்கும் ஒரே பரிசுத்தமான அன்பை கொடுக்கிறார். கடைசி நேரத்தில் அவரை கண்டு சேர்ந்தவர்களுக்கும் கூத அதே அன்பை கொடுக்கிறார். அவர் இதனை விட யாருக்கும் குறைவாக கொடுப்பதில்லை. முதல் வாசகம் "மண்ணுலகத்திலிருந்து விண்ணுலகம் மிக உயர்ந்து இருப்பதுபோல"  என்று நமக்கு நினைவூட்டுகிறது, கடவுளின் வழி நம் வழியை விட மேலானது, நாம் நினைப்பதை விட மேலானது. நியாமாக நடப்பது என்றால், எல்லோருக்கும் சமமான மதிப்பீடு கிடைக்கவேண்டும் என நாம் நினைக்கிறோம், ஆனால், அது பழைய ஏற்பாட்டின் காலங்களோடு ஒத்து போனது. "கண்ணுக்கு கண்" என்று கூறுவது போல உள்ளது. இயேசு நீதியை மிகவும் உயர்ந்த இடத்திற்கு கொண்டு சென்றார். அதன் அர்த்தம் என்ன என்றால், எல்லோரையும் சமமாக அன்பு செய்தாலும், அழ மேல் இறக்கம் கொள்வதும் ஆகும். அவர்கள் அதற்கு தகுதி ஆனவர்களா இல்லையா என்பது வேறு விஷயம்.
கடவுளுடைய உயர்ந்த வழிகளை நாம் புரிந்து கொள்ள வேண்டியதில்லை. கடவுள் நம்மை முழுதுமாய் அன்பு செய்கிறார். நாம் அவரை அன்பு செய்யாவிட்டாலும் கூட. அவர் நம்மை தொடர்ந்து அன்பு செய்கிறார். நாம் அதற்கு தகுதி அற்றவராய் இருந்தாலும் கூட  மிக புனிதர்களுக்கு எவ்வளவு அன்பை தருகிறாரோ அதே அளவு அன்பை நமக்கு கொடுக்கிறார். கிறிஸ்துவின் புனித அன்னை மரியாளுக்கு எந்த அன்பு செலுத்து கிறாரோ அதே அன்பை நமக்கு தருகிறார்.! "ஏன் அன்பை எப்படி உபயோக்க வேண்டும் நான் விரும்புகிறேனோ அப்படி நான் செய்ய கூதாதா? " என்று கேட்கிறார்.

© 2017 by Terry A. Modica

No comments: