அக்டோபர் 22 2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 29ம் ஞாயிறு
Isaiah 45:1, 4-6
Ps 96:1, 3-5, 7-10
1 Thessalonians 1:1-5b
Matthew 22:15-21
Ps 96:1, 3-5, 7-10
1 Thessalonians 1:1-5b
Matthew 22:15-21
மத்தேயு
நற்செய்தி
சீசருக்கு வரி செலுத்துதல்
(மாற் 12:13 - 17; லூக் 20:20 - 26)
(மாற் 12:13 - 17; லூக் 20:20 - 26)
15பின்பு பரிசேயர்கள் போய் எப்படி இயேசுவைப் பேச்சில் சிக்க வைக்கலாமெனச் சூழ்ச்சி செய்தார்கள்.
16தங்கள் சீடரை ஏரோதியருடன் அவரிடம் அனுப்பி, “போதகரே, நீர் உண்மையுள்ளவர்; எவரையும் பொருட்படுத்தாமல் கடவுளின் நெறியை உண்மைக்கேற்பக் கற்பிப்பவர்; ஆள் பார்த்துச் செயல்படாதவர் என்பது எங்களுக்குத் தெரியும்.
17சீசருக்கு வரி செலுத்துவது முறையா? இல்லையா? நீர் என்ன நினைக்கிறீர் என எங்களுக்குச் சொல்லும்” என்று அவர்கள் கேட்டார்கள்.
18இயேசு அவர்களுடைய தீய நோக்கத்தை அறிந்து கொண்டு,
“வெளிவேடக்காரரே, ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்?
19
வரி கொடுப்பதற்கான நாணயம் ஒன்றை எனக்குக் காட்டுங்கள்”
என்றார். அவர்கள் ஒரு தெனாரியத்தை அவரிடம் கொண்டு வந்தார்கள்.
20இயேசு அவர்களிடம்,
“இதில் பொறிக்கப்பட்டுள்ள உருவமும் எழுத்தும் யாருடையவை?”
என்று கேட்டார்.
21அவர்கள், “சீசருடையவை” என்றார்கள். அதற்கு அவர்,
“ஆகவே சீசருக்கு உரியவற்றை சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்”
என்று அவர்களிடம் கூறினார்.
22இதைக் கேட்ட அவர்கள் வியந்து, அவரை விட்டுப் போய்விட்டார்கள்.
(thanks to www.arulvakku.com)
நம் இதயத்தில் பொறிக்கபட்ட வரைபடம்
இன்றைய ஞாயிறின் நற்செய்தியில், இயேசு
பரிசேயர்களிடம் வரி கொடுக்க வேண்டிய காசில் எந்த உருவம்
பொறிக்கபட்டிருக்கிறது என்று கேட்கிறார். இதன்
மூலம், நமது இதயத்தில் எந்த உருவம் பொறிக்கபட வேண்டும் என்று நமக்கு போதிக்கிறார்.
நமது இதயம் கடவுளிடம் இருக்க வேண்டும் என சொல்கிறார். கடவுளிடம் மட்டுமே இருக்க
வேண்டும் என இயேசு சொல்கிறார்.
ரோமானியர்கள் அவர்களின் அரசர்களை தெய்வமாக பார்த்தார்கள். அதனால்,
ரோமானிய காசை கையில் வைத்திருப்பது , அவர்களின் கடவுளின் படத்தை தம்முடன் வைத்திருப்பதாக
நினைத்தார்கள். இயேசுவை சோதிக்கும்போழுது பரிசேயர்கள் இதனை நினைத்தே கேட்டார்கள்.
சீசருக்கு வரி செலுத்துவது என்பது அந்நிய நாட்டிற்கு வரி செலுத்துவதை விட
மேலானது . இது தெய்வ சித்தாந்தங்களோடு சம்பத்தப்பட்டது. இயேசு உண்மையான தீர்க்கதரிசியாக
இருந்தால், யூதர்கள் இந்த காசினை
வைத்திருப்பதற்கு எதிர்த்து பேசியிருக்க வேண்டும். அவர் உண்மையான மெசியாவாக இருந்தால்,
அடிமைதனத்தையும் , அந்நிய நாட்டு வரியையும் துரத்தியிருக்க வேண்டும். அப்படி தான்
அவர்கள் எதிர்பார்த்தார்கள்.
இயேசுவிடம் காட்டிய , ரோமானிய காசை
அவர்கள் கையில் எப்படி வைத்திருந்தார்கள் என்று நமக்கு தெரியாது. அவர்கள் பர்ஸில் இருந்து எடுத்து இருந்தால், அவர்களின்
போலித்தனத்தை காட்டுகிறது. ஆனால் இயேசு அவர்களின் போலித்தனத்தை வெளிபடுத்துவதில் ஆர்வம்
காட்டவில்லை ஆனால் உண்மையான மெசியா தான் என்பதை அழுத்தாமாக வெளிபடுத்தினார்.
நாம் கடவுளுடைய சொந்தங்களாக இருப்பதால், இயேசு
நம் இதயத்தில் பொறிக்கபட்டிருக்கிறார். பாவங்களின் அழிவிலிருந்து நம்மை மெசியா மீட்டு
உள்ளார். நம் பாவங்களால் சாத்தானின் பிடியிலிருந்த
நம்மை இயேசு மீட்க நாம் அனுமதித்து உள்ளோம்.
உங்கள் வாழ்க்கையை பார்க்கும் பொழுது
எந்த படத்தை பார்க்கிறார்கள்? அவர்கள் உங்களை பார்க்கும் பொழுது இயேசுவின் படம்
உங்களில் பொறிக்கபட்டிருப்பதை
பார்க்கிறார்களா ? ஓரளவிற்கு அவர்கள் இயேசுவை உங்களிடம் பார்ப்பார்கள். ஏனெனில்,
நீங்கள் கடவுளின் இறையரசில் ஓர் அங்கமாகும்.
© 2017 by Terry A. Modica
No comments:
Post a Comment