Friday, October 6, 2017

அக்டோபர் 8 2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை

அக்டோபர்  8 2017   ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின்  27ம் ஞாயிறு 
Isaiah 5:1-7
Ps 80:9, 12-16, 19-20 (with Is 5:7a)
Philippians 4:6-9
Matthew 21:33-43
மத்தேயு நற்செய்தி

கொடிய குத்தகைக்காரர் உவமை
(மாற் 12:1 - 12; லூக் 20:9 - 19)
33மேலும் ஓர் உவமையைக் கேளுங்கள்: நிலக்கிழார் ஒருவர் ஒரு திராட்சைத் தோட்டம் போட்டு, சுற்றிலும் வேலி அடைத்து அதில் பிழிவுக்குழி வெட்டி ஒரு காவல் மாடமும் கட்டினார்; பின்பு தோட்டத் தொழிலாளர்களிடம் அதைக் குத்தகைக்கு விட்டுவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார்.

34பழம் பறிக்கும் காலம் நெருங்கி வந்த போது அவர் தமக்குச் சேர வேண்டிய பழங்களைப் பெற்று வரும்படி தம் பணியாளர்களை அத்தோட்டத் தொழிலாளர்களிடம் அனுப்பினார்.

35தோட்டத் தொழிலாளர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து, ஒருவரை நையப் புடைத்தார்கள்; ஒருவரைக் கொலை செய்தார்கள்; ஒருவரைக் கல்லால் எறிந்தார்கள்.

36மீண்டும் அவர் முதலில் அனுப்பியவர்களைவிட மிகுதியான வேறு சில பணியாளர்களை அனுப்பினார். அவர்களுக்கும் அப்படியே அவர்கள் செய்தார்கள்.

37தம் மகனை மதிப்பார்கள் என்று அவர் நினைத்துக் கொண்டு அவரை இறுதியாக அவர்களிடம் அனுப்பினார்.

38அம்மகனைக் கண்ட போது தோட்டத் தொழிலாளர்கள், ‘இவன்தான் சொத்துக்கு உரியவன்; வாருங்கள், நாம் இவனைக் கொன்று போடுவோம்; அப்போது இவன் சொத்து நமக்குக் கிடைக்கும்என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.
39பின்பு அவர்கள் அவரைப் பிடித்து, திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே தள்ளிக் கொன்றுபோட்டார்கள்.

40
எனவே, திராட்சைத் தோட்ட உரிமையாளர் வரும்போது அத்தொழிலாளர்களை என்ன செய்வார்?”
 என இயேசு கேட்டார்.

41அவர்கள் அவரிடம், “அத்தீயோரை ஈவிரக்கமின்றி ஒழித்து விடுவார்; உரிய காலத்தில் தமக்கு சேரவேண்டிய பங்கைக் கொடுக்க முன்வரும் வேறுதோட்டத் தொழிலாளர்களுக்கு அத்திராட்சைத் தோட்டத்தைக் குத்தகைக்கு விடுவார்என்றார்கள்.

42இயேசு அவர்களிடம்,
“‘கட்டுவோர் புறக்கணித்த கல்லே
கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று.
ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது;
நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று!
என்று நீங்கள் மறைநூலில் ஒருபோதும் வாசித்தது இல்லையா?

43எனவே உங்களிடமிருந்து இறையாட்சி அகற்றப்படும்; அவ்வாட்சிக்கு ஏற்ற முறையில் செயல்படும் ஒரு மக்களினத்தார் அதற்கு உட்படுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்

(thanks to www.arulvakku.com)
இன்றைய நமது வாழ்வில் பரலோகத்தின் கணிகள்
 "யார் கணிகள் உற்பத்தி செய்து கொடுகிரார்களோ அவர்களுக்கு தான் இறையரசு " என்பது தான் இன்றைய நற்செய்தியின் சாராம்சமாக இயேசு கொடுக்கிறார். நாம் இவ்வுலகில் இருக்கும் போதே என்ன மாதிரியான இறையரசை கொடுக்கிறார். அதன் கணிகள் எவை , அதனை நாம் தான் இவ்வுலகில் உற்பத்தி செய்கிறோம்  ?
நாம் கிறிஸ்துவோடு இணைந்து பரலோகம் செல்லும் பயணத்தில் நாம் கிறிஸ்துவை போல செய்யும் ஒவ்வொரு காரியங்களுமே , நாம் கொடுக்கும் கணிகள் தான். கிறிஸ்து அன்பு செய்வது போல நாமும் அன்பு செய்வதும், அவர் மன்னிப்பதை போல நாமும் மன்னிப்பதும், மற்றவர்களுக்கு இறை சேவை செய்வதும், உண்மையை போதிப்பதும், துன்புறுவோருக்கு ஆறுதல் கொடுப்பதும், இறையரசில் நாமும் வாழ்கிறோம்.
நான் கத்தோலிக்கர்களை நோக்கி நீங்கள் பரலோகம் போவீர்களா? என கேட்டால், நிறைய பேர் சந்தேகத்துடன் இருக்கின்றனர், ஒன்று இனிமேல் அவர்கள் செய்ய போகும் சாவான பாவத்திற்காக பயம் கொண்டுள்ளனர், அல்லது, "ஆம்" என்று சொல்வது அவ்வளவு பகட்டாக தெரிகிறது, மீட்பு உண்டு என்று தெரிந்தாலும்.
கண்டிப்பாக நாம் அனைவருமே கிறிஸ்துவை போல நடந்து கொள்வதில்லை. நம்மில் பல பேர் உத்தரிக்கிற ஸ்தலத்தில் சில காலம் இருந்து நம் பாவங்கள் அனைத்தும் கழுவப்பட்ட பின்பு கடவுளின் அற்புதங்களோடு பரலோகத்தில் இணைவோம்.
நாம் உத்தரிக்கிற ஸ்தலத்திற்கு சென்று விட்டால், கண்டிப்பாக நாம் மோட்சத்தை நோக்கி செல்வோம். மேலும் நாம் கிறிஸ்துவை போல இருக்க விரும்பி முயற்சி செய்வதாலும், இயேசு நம் பாவங்களை கழுவி, சாவான பாவம் எதையும் செய்யாமல் இருக்க நம்மை நடத்தி செல்வார், நாம் சாகும் தருவாயில், இயேசு நம்மிடம் வரும்பொழுது சந்தோசமாக அவரது இணைவோம்
கிறிஸ்துவிற்காக நீங்கள் செய்யும் அனைத்தும், கிறிஸ்துவின் மேல் கொண்ட அன்பால் தான் என்பதே நாம் இறையரசில் வாழ்கிறோம் என்பதற்கு சாட்சியாகும்.

© 2017 by Terry A. Modica

No comments: