பிப்ரவரி 24 2018 ஞாயிறு நற்செய்தி மறையுரை
தவக்கால 2ம் ஞாயிறு
Gen 22:1-2, 9-13, 15-18
Ps 116:10, 15-19
Rom 8:31b-34
Mark 9:2-10
மாற்கு நற்செய்தி
இயேசு தோற்றம் மாறுதல்
(மத் 17:1-13; லூக் 9:28-36)
(மத் 17:1-13; லூக் 9:28-36)
2ஆறு நாள்களுக்குப் பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் அழைத்து, ஓர் உயர்ந்த மலைக்கு அவர்களைமட்டும் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார். அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார்.
3அவருடைய ஆடைகள் இவ்வுலகில் எந்த சலவைக்காரரும் வெளுக்க முடியாத அளவுக்கு வெள்ளை வெளேரென ஒளிவீசின.
4அப்போது எலியாவும் மோசேயும் அவர்களுக்குத் தோன்றினர். இருவரும் இயேசுவோடு உரையாடிக் கொண்டிருந்தார்கள்.
5பேதுரு இயேசுவைப் பார்த்து, “ரபி, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம்” என்றார்.
6தாம் சொல்வது என்னவென்று அவருக்குத் தெரியவில்லை. ஏனெனில் அவர்கள் மிகுந்த அச்சம் கொண்டிருந்தார்கள்.
7அப்போது ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட அந்த மேகத்தினின்று, “என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்” என்று ஒரு குரல் ஒலித்தது.✠
8உடனடியாக அவர்கள் சுற்றுமுற்றும் பார்த்தார்கள். தங்கள் அருகில் இயேசு ஒருவரைத் தவிர வேறு எவரையும் காணவில்லை.
9அவர்கள் மலையிலிருந்து இறங்கி வந்துகொண்டிருந்த போது அவர்,
“மானிட மகன் இறந்து உயிர்த்தெழும் வரை, நீங்கள் கண்டதை எவருக்கும் எடுத்துரைக்கக் கூடாது”
என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்.
10அவர்கள் இவ்வார்த்தையை அப்படியே மனத்தில் இருத்தி, “இறந்து உயிர்த்தெழுதல்” என்றால் என்னவென்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள்
(thanks to www.arulvakku.com)
நீங்கள் அனுபவித்த
"மலை உச்சியின் நிகழ்வுகளை" நினைவு கொள்ளுங்கள். அந்த நிகழ்வுகளை எது
முக்கியமாக இருந்தது ? அதன் முலம் என்ன பலன் அடைந்தீர்கள். ?
அது உங்களுக்கு எவ்வளவு
முக்கியத்துவம் வாய்ந்தது? அந்த நிகழ்வு உங்கள் வாழ்க்கையையே மாற்றியதா அல்லது சில
காலம் மட்டும் அதன் தாக்கம் இருந்ததா ?
பைபிள்
குறியீடுகளில், மலை உச்சி என்பது, கடவுள் அருகில் செல்வது. உங்கள் அனுபவம்
கடவுளுக்கு அருகில் கொண்டு சென்றதா?
தபோர் மலையில்
தான், இயேசு அவரது இறைத்தன்மையை , மிக நெருங்கிய நண்பர்களுக்கு வெளிபடுத்தினார்.
"உயர்ந்த மலை" என்று நற்செய்தியில் குறிப்பிட்டாலும், உண்மையாக அந்த மலை
மிக சிறிய குன்று தான். ஆனால் அந்த நிகழ்வோ மிக பெரிய பெரிய நிகழ்வாகும். ஏன் அது
பெரிய நிகழ்வு ?
நம்முடைய சில மத
அனுபவங்கள், இந்த மலை உச்சி நிகழ்வு போல இல்லாமல் இருக்கலாம், ஆனால் கண்டிப்பாக இறைவனுடன்
மிக பெரிய அனுபவம் பெற்று இருப்பீர்கள்.
மூன்று சீடர்களும்,
கிறிஸ்துவின் தோற்றம் மாறுதலை பார்த்தவுடன் அவரின் மாட்சிமையை கண்டு களித்தனர்.
ஏனெனில், அவர்கள் ஒரு நாள் இயேசுவின் இவ்வுலக இறைபணியை தொடர உள்ளனர்.
“என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்” என்று தந்தை சொல்கிறார். அதே
போல இயேசுவிடம் நாம் கேட்கும் பொழுது, அவர் வார்த்தைகளை கவனிக்கும் பொழுது, நாமும்
தோற்றம் மாறுகிறோம்.
இந்த தவ காலம்,
நமக்கு ஒரு மலை உச்சி அனுபவத்தை கொடுக்கிறது. நாம் ஒளி பேழையோடு இருக்கும் இயேசுவை
பின் பற்றினால், நம்மில் உள்ள இருள் போய் ஒளி வந்து விடும்.
எவ்வளவு அதிகம்
அவரின் போதனைகளை கேட்டு , அதன் படி நம் வாழ்வில் கடை பிடிக்கிறோமோ, அந்த அளவிற்கு
நாம் அவரை போல ஆகுவோம். மேலும் நாம் யேசுவை போல மாறி, நம்மை சுற்றி உள்ளவர்கள்
அனைவருக்கும், அவரின் ஒளியை பரப்புவோம். நாம் மாறி நம்மை சுற்றி உள்ளவர்கள்
அனைவரையும் இயேசுவை போல ஒளியாக்குவோம்.
முதல் வாசகம் கூறுவது
போல, ஆபிரகாம் கடவுளிடம் இருந்து, அவரது மகனை காக்கவில்லை, அதே போல , தந்தை
கடவுளும், அவரது மகனை அவருக்குள் வைத்து கொள்ளவில்லை
அதே போல , நாமும்
பொறுப்புள்ள கிறிஸ்தவனாக, இயேசுவை நாம் நமக்குள் வைத்து கொள்ளாமல், நாம்
சந்திக்கும் மனிதர்களிடம் கொடுக்க வேண்டும். அவரின் நற்செய்தியை அறிவிப்பதிலும்,
அல்லது ஏதோ உதவி செய்து, இயேசுவின் அன்பை காட்டுவதிலும், அல்லது
அவர்களின் கவலையை கேட்பதிலும், நிறைய இரக்கத்தையும் அன்பையும், அவர்கள் மேல்
காட்டுவதிலும் நாம் இயேசுவை அவர்களிடம் கொண்டு செல்கிறோம். நாம் தான் அவர்களின்
ஜெபத்திற்கு பதில் கொடுக்கிறோம்.
கிறிஸ்துவின்
அன்புடன் , நாம் ஒளியை கொடுத்திட நமது ஞானஸ்நானம் மூலம், நமக்கு அருள்
கொடுக்கப்பட்டுள்ளது. இயேசுவின் இந்த உலக இறைபணியை தொடர நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.
இந்த தவ கால அனுபவம், நம்மை கிறிஸ்துவிடம் உயர்த்தி , அவரது இறைபணியில்
இனைக்கட்டும்.
© 2018 by Terry A. Modica