Saturday, February 3, 2018

பிப்ரவரி 4 2018 ஞாயிறு நற்செய்தி

பிப்ரவரி 4 2018 ஞாயிறு நற்செய்தி
ஆண்டின் 5ம் ஞாயிறு

Job 7:1-4, 6-7
Ps 147:1-6
1 Cor 9:16-19, 22-23
Mark 1:29-39

மாற்கு நற்செய்தி


சீமோன் பேதுருவின் மாமியார் குணமடைதலும் இயேசு பலருக்குக் குணமளித்தலும்
(மத் 8:14-17; லூக் 4:38-41)

29பின்பு அவர்கள் தொழுகைக் கூடத்தை விட்டு வெளியே வந்து யாக்கோபு, யோவானுடன் சீமோன், அந்திரேயா ஆகியோரின் வீட்டிற்குள் சென்றார்கள்.

30சீமோனுடைய மாமியார் காய்ச்சலாய்க் கிடந்தார். உடனே அவர்கள் அதைப் பற்றி இயேசுவிடம் சொன்னார்கள்.

31இயேசு அவரருகில் சென்று கையைப் பிடித்து அவரைத் தூக்கினார். காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று. அவர் அவர்களுக்குப் பணிவிடை செய்தார்.
32மாலை வேளையில், கதிரவன் மறையும் நேரத்தில் நோயாளர்கள், பேய்பிடித்தவர்கள் அனைவரையும் மக்கள் அவரிடம் கொண்டுவந்தார்கள்.

33நகர் முழுவதும் வீட்டு வாயில்முன் கூடியிருந்தது.

34பல்வேறு பிணிகளால் வருந்திய பலரை அவர் குணப்படுத்தினார். பல பேய்களையும் ஓட்டினார்; அந்தப் பேய்கள் அவரை அறிந்திருந்ததால் அவற்றை அவர் பேசவிடவில்லை.
ஊர்கள்தோறும் நற்செய்தி முழக்கம்
(லூக் 4:42-44)
35இயேசு விடியற்காலைக் கருக்கலில் எழுந்து தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கே அவர் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார்.

36சீமோனும் அவருடன் இருந்தவர்களும் அவரைத் தேடிச் சென்றார்கள்.

37அவரைக் கண்டதும், “எல்லாரும் உம்மைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்என்றார்கள்.
38அதற்கு அவர்
நாம் அடுத்த ஊர்களுக்குப் போவோம், வாருங்கள். அங்கும் நான் நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டும்; ஏனெனில் இதற்காகவே நான் வந்திருக்கிறேன்
 என்று சொன்னார்.

39பின்பு அவர் கலிலேய நாடுமுழுவதும் சென்று அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் நற்செய்தியைப் பறைசாற்றி பேய்களை ஓட்டி வந்தார்.

(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியில் புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய  முதல் கடிதத்தில் , நாம் செய்யும் இறைசேவையை ஒத்து  இருக்கிறது


16நான் நற்செய்தியை அறிவிக்கிறேன் என்றாலும் அதில் நான் பெருமைப்பட ஒன்றுமில்லை. இதைச் செய்ய வேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது. நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு!

17இதை நானாக விரும்பிச் செய்தால் எனக்குக் கைம்மாறு உண்டு. நானாக விரும்பாவிட்டாலும் இது என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்பாக இருக்கிறது.

18அப்படியானால், எனக்குக் கைம்மாறு என்ன? உங்களுக்கு எச்செலவுமின்றி நற்செய்தியை அறிவிப்பதிலுள்ள மனநிறைவே அக்கைம்மாறு; நான் நற்செய்தி அறிவிப்போருக்குரிய உரிமையைக் கொஞ்சம் கூடப் பயன்படுத்திக்கொள்ளவில்லை.
19நான் யாருக்கும் அடிமையாய் இல்லாதிருந்தும் பலரைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர என்னை எல்லாருக்கும் அடிமையாக்கிக் கொண்டேன்.

22வலுவற்றவர்களைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர வலுவற்றவர்களுக்கு வலுவற்றவனானேன். எப்படியாவது ஒரு சிலரையேனும் மீட்கும்படி நான் எல்லாருக்கும் எல்லாமானேன்.

23நற்செய்தியால் வரும் ஆசியில் பங்கு பெறவேண்டி நற்செய்திக்காக எல்லாவற்றையும் செய்கிறேன்.

புனித பவுல் அடிகளார், இறை சேவைக்கு கட்டணம் வாங்க கூடாது என்று கூறவில்லை. இயேசுவும் கூட, கூலியாட்கள் அவர்களுக்கு உண்டான கூலி கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார். (லூக்கா 10:7) ஆனால், பவுல் அடிகளாரோ கடவுள் கொடுத்த கொடைகளை  உபயோக படுத்துவதே அவரின் முக்கிய நோக்கமாக இருந்தது.

என்னுடைய அனுதின நற்செய்தியை , அதன் விளக்கத்தையும் கொடுப்பதால்,  நாம் அதற்கு எந்த கட்டணமும் வாங்குவதில்லை. அதனால் எனக்கு சந்தோசம் தான். இந்த இறைசேவை மூலம் பல்லாயிரம் பேருக்கு நாம் நற்செய்தியை பகிர்ந்து கொள்கிறோம். இது என்னால் மட்டும் முடிவதில்லை, பலர் அவர்களுடைய தாராள குணத்தினால் இதற்கு உதவி செய்கிறார்கள். அவர்கள் மூலம் தான் இந்த இறை சேவை முழுமை அடைகிறது.

பாதர் ஹென்றி நோவான் "பணம் வசூல் செய்வது என்பது , நாம் மக்கள் நற்செய்தி பரப்புவதில் பங்களிக்க ஒரூ வாய்ப்பாக இருக்கிறது. " என்று சொல்கிறார். நமது நற்செய்தி பரப்புவதில் , நாமும் அன்பளிப்பு பெறுகிறோம். அது மூலம் நாம் பலரை இந்த இறைசேவையில் பங்களிக்க வாய்ப்பு அளிக்கிறோம். சிலர் தன்னார்வலராக என்னோடு இணைந்து பணியாற்றுகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறி கொள்கிறேன்.

நம்முடைய கோவிலில் உண்டியல் வரும்போதும், அல்லது குருவானவர் அதிக அன்பளிப்பை கேட்பதும், ஒன்றும் தவறில்லை. பங்கு திருச்சபையின் இறை சேவையில் நாம் பங்கு கொள்ள இது ஒரு வாய்ப்பாகும். நாம் தாராள குணத்துடன் கலந்து கொண்டோமா?

நாம் அனைவருமே, கிறிஸ்துவின் இறை சேவையை இந்த பூமியில் நாம் தொடர வேண்டும் என்பது நமது கடமை , கிறிஸ்தவர் ஒருவர் இதனை செய்ய வில்லை என்றால்,  அவர் சோம்பலுடன் கூடிய விசுவாசத்தை கொண்டவர் என்றும், அல்லது சுய நலன் கொண்ட விசுவாசத்துடனும், அல்லது உயிர்ப்பற்ற விசுவாசம் கொண்டவராகவும் இருக்கிறார் என்றும் நாம் அர்த்தம் கொள்ளலாம். கடவுள் நமக்கு கொடுத்த திறமைகள், ஞானம் , அறிவாற்றலும், இரக்கமும் , நாம் தாராளமாக  செலவிடும்போது , நாம் விசுவாசத்தை உயிர்ப்புடன் கொண்டு செல்கிறோம். நமக்கு உடனே கிடைக்க கூடிய சந்தோசம் , நாம் கிறிஸ்துவுடன் இணைந்து பணியாற்றுகிறோம் என்பது தான்.


இன்றைய நற்செய்தியோ, பீட்டர் மாமியார் எப்படி தாராள குணத்துடன் அவர்களை உபசரித்தார் என்று கூறுகிறது, மேலும், இயேசு நற்செய்தியை உறுதியுடன் அனைவருக்கும் ஓய்வில்லாமல் அறிவித்ததையும் காட்டுகிறது.

இரண்டுமே நல்ல பணியினை நமக்கு எடுத்து காட்டுகிறது. எல்லா திறமைகளும் அன்பளிப்பும், பண வருவாயும், கடவுளின் ஆசிர்வாதம் ஆகும். அதனை நாம் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.

© 2018 by Terry A. Modica

No comments: