Friday, February 9, 2018

பிப்ரவரி 11 2018 ஞாயிறு நற்செய்தி மறையுரை

பிப்ரவரி 11 2018  ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 6ம் ஞாயிறு
Lev 13:1-2, 44-46
Ps 32:7, 1-2, 5, 11
1 Cor 10:31--11:1
Mark 1:40-45

மாற்கு நற்செய்தி

தொழுநோயாளர் நலமடைதல்
(மத் 8:1-4; லூக் 5:12-16)
40ஒரு நாள் தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வந்து, “நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்என்று முழந்தாள் படியிட்டு வேண்டினார்.
41இயேசு அவர்மீது பரிவு கொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு அவரிடம்
நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!
 என்றார்.

42உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்க, அவர் நலமடைந்தார்.

43-44பிறகு அவரிடம்
இதை யாருக்கும் சொல்ல வேண்டாம், கவனமாய் இரும். ஆனால் நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி, நோய் நீங்கியதற்காக மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும்
 என்று மிகக் கண்டிப்பாகக் கூறி உடனடியாக அவரை அனுப்பி விட்டார்.

45ஆனால் அவர் புறப்பட்டுச் சென்று இந்தச் செய்தியை எங்கும் அறிவித்துப் பரப்பிவந்தார். அதனால் இயேசு எந்த நகருக்குள்ளும் வெளிப்படையாய்ச் செல்ல முடியவில்லை; வெளியே தனிமையான இடங்களில் தங்கிவந்தார். எனினும் மக்கள் எல்லா இடங்களிலிருந்தும் அவரிடம் வந்து கொண்டிருந்தார்கள்.
(thanks to www.arulvakku.com)

இன்றைய ஞாயிறின் இரண்டாவது வாசகம் நமது படுக்கை அறையில் எழுதி மாட்ட வேண்டிய பொன்மொழி: "எதை செய்தாலும், கடவுளின் மாட்சிக்காக செய்யவேண்டும்" காலையில் படுக்கை விட்டு எழும் பொழுது  இந்த வசனத்தை பார்த்து கொண்டே  எழுந்து கடவுளின் மாட்சிக்காக நம் நாளை தொடங்கலாம்.

எல்லா செயல்களுமே! கடவுளை புகழ்ந்து கொண்டே  பல் விளக்குவது, "காலை வணக்கம்" சொல்வதும், மேலும், திருப்பலிக்கு சென்று கடவுளை மாட்சிமை படுத்துவதும், (நமக்காக மட்டும் நாம் திருப்பலிக்கு செல்வதில்லை)  நமது அனுதின வேலைகளை கடவுளின் மாட்சியோடு செயல்படுத்துவதிலும் நாம் கவனம் செலுத்தலாம். மேலும், வண்டி ஓட்டும் பொழுது , அமைதியாக கடவுளை மாட்சிமை படுத்தலாம். திருச்சபையின் தேவைகளுக்காக நாம் பணமோ அல்லது நமது நேரத்தை செலவிட நேரும் பொழுது நாம் அதற்கு ஆம் என்று சொல்லி அதில் ஈடுபடும்பொழுது நாம் கடவுளை மாட்சிமை  படுத்துகிறோம்.  இந்த செயல்கள் மூலம் கடவுள் நமக்கு கொடுக்க விரும்பும் (நீங்கள் சம்பாதிக்கும் பணம், உங்கள் வேண்டுதலுக்கு கிடைத்த வரம், இந்த வாழ்வில் நமக்கு கிடைக்கும் அனைத்தும் ) நாம் கடவுளின் மாட்சிக்காக பெறுவோம்.

நாம் தினமும் காலையில் இந்த ஜெபத்தை சொல்ல வேண்டும். "பரிசுத்த ஆவியே  நான் இன்று செய்யும் ஒவ்வொரு செயலும், கடவுளின் மாட்சிக்காக செய்ய எனக்கு உதவி அருளும்., ஆமென்!"

இந்த ஜெபத்தை ஒவ்வொரு நாளும் நம் பழக்க வழக்கத்தில் கொண்டு வந்தால்,  கடவுளின் மாட்சிக்காகவே நம் செயல்கள் அனைத்தும் ஒன்றித்து விடும். "நீ எதை செய்தாலும், கடவுளின் மாட்சிமைக்காக  " என்று நாம் ஒவ்வொரு செயலிலும் நினைக்கும் மிகவும் சுலபமாக  பாவத்தை எதிர்க்க  நம்மால் முடியும். ஒவ்வொரு கணமும் நாம் புனித படுத்துகிறோம்.

பல நேரங்களில், நாம் தெய்வீக காரியங்களும் , நமது சொந்த காரியங்களும், பிரித்தே பார்க்கிறோம்  கோவிலுக்கு செல்லும் நேரங்களை நாம் நமது சொந்த நேரத்தில் ஒரூ மணி நேரம் ஒதுக்கி வைத்து செல்கிறோம். நாம் செய்து கொண்டிருக்கும் வேலையை விட்டு நாம் ஜெபம் செய்கிறோம்.  குருக்களும், சபையில் உள்ளவர்கள் மட்டும் தான் முழு நாளும் நேரமும் கடவுளுக்காக  அர்ப்பணிப்பு செய்தவர்கள் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் ஏன் ?

ஏன் நாம் "கடவுளின் மாட்சிமையை " பரிசுத்த குருவானவர்களுக்கும், கண்ணியர்களுக்கும், தினமும் திருப்பலி செல்பவர்களுக்கும் உரியது என்று நாம் ஒதுக்கி வைக்கிறோம்? ஆனால், நம் ஒவ்வொரு நிமிடத்தையும் நாம் பரிசுத்தமாக்க முடியும். அதன் மூலம் கடவுளை நாம் மகிமை படுத்த முடியும்.

© 2018 by Terry A. Modica

No comments: