ஏப்ரல் 1 2018 ஞாயிறு நற்செய்தி
மறையுரை சிந்தனை
ஆண்டவரின் உயிர்ப்பு
பெருவிழா
Acts 10:34a, 37-43
Ps 118:1-2, 16-17, 22-23
Col 3:1-4 or 1 Cor 5:6b-8
John 20:1-9
Ps 118:1-2, 16-17, 22-23
Col 3:1-4 or 1 Cor 5:6b-8
John 20:1-9
யோவான் நற்செய்தி
இயேசு உயிர்த்தெழுதல்
(மத் 28:1-10; மாற் 16:1-8; லூக் 24:1-12)
(மத் 28:1-10; மாற் 16:1-8; லூக் 24:1-12)
1வாரத்தின் முதல் நாளன்று விடியற் காலையில் இருள் நீங்கும் முன்பே மகதலா மரியா கல்லறைக்குச் சென்றார்; கல்லறை வாயிலில் இருந்த கல் அகற்றப்பட்டிருப்பதைக் கண்டார்.
2எனவே அவர் சீமோன் பேதுருவிடமும் இயேசு தனி அன்பு கொண்டிருந்த மற்றச் சீடரிடமும் வந்து, “ஆண்டவரைக் கல்லறையிலிருந்து யாரோ எடுத்துக் கொண்டு போய் விட்டனர்; அவரை எங்கே வைத்தனரோ, எங்களுக்குத் தெரியவில்லை!” என்றார்.
3இதைக் கேட்ட பேதுருவும் மற்றச் சீடரும் கல்லறைக்குப் புறப்பட்டனர்.
4இருவரும் ஒருமித்து ஓடினர். மற்றச் சீடர் பேதுருவை விட விரைவாக ஓடி முதலில் கல்லறையை அடைந்தார்.
5அவர் குனிந்து பார்த்தபோது துணிகள் கிடப்பதைக் கண்டார்; ஆனால் உள்ளே நுழையவில்லை.
6அவருக்குப் பின்னாலேயே சீமோன் பேதுருவும் வந்தார். நேரே அவர் கல்லறைக்குள் நுழைந்தார். அங்குத் துணிகளையும்,
7இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டையும் கண்டார். அத்துண்டு மற்றத் துணிகளோடு இல்லாமல் ஓரிடத்தில் தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது.✠
8பின்னர், கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த மற்றச் சீடரும் உள்ளே சென்றார், கண்டார்; நம்பினார்.
9இயேசு இறந்து உயிர்த்தெழ வேண்டும் என்னும் மறைநூல் வாக்கை அவர்கள் அதுவரை புரிந்துகொள்ளவில்லை.✠
10பின்பு சீடர்கள் தாங்கள் தங்கியிருந்த இடத்திற்குத் திரும்பிச் சென்றார்கள்.
(thanks
to www.arulvakku.com)
கடவுள் உங்களுக்கு ஒரு ஆச்சரியம் கொடுக்க
இருக்கிறார்!
கொண்டாடுங்கள்! மிக பெரிய ஆச்சரியத்தின் வருடாந்திர விழா இன்று! முதல் சீடர்கள் கல்லறையில் ஒன்றுமில்லாமல் எப்பாடி ஆச்சரிய பட்டார்களோ அப்படியே நமக்கு உயிர்ப்பின் ஆச்சரியத்தை உங்களுக்கு கொடுக்க இருக்கிறார்.
இன்றைய ஈஸ்டர் ஞாயிறன்று, நற்செய்தி வாசகத்தில், நிறைய பேர் அங்கங்கே ஓடுவதும், ஆச்சரியமும் கலந்து மிக பெரிய செய்தியை ஒருவருக்கொருவர் கொடுத்தான், அதன் உள் அர்த்தத்தை யாரும் சரியாக புரிந்து கொள்ளவில்லை. இயேசு அவர்களுக்கு முன்னமே இதனை பற்றி அறிவித்தும் , விளக்கி கூறியும், அவர் மரணம் அடைந்து மீண்டும் உயிர்த்தெழுவேன் என்று சொல்லியும் அவர்களுக்கு புரியவில்லை. கடவுளின் திட்டம் அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மேசியாவின் இறைபணி திட்டத்தில் உயிர்த்தெழுதலும் ஒரு பகுதி என்று அவகளுக்கு புரியவில்லை.
கடவுளின் திட்டங்கள் பல நேரங்களில் நம்மை ஆச்சரியபடுத்தும். நமது வாழ்வின் பல கட்டங்களில், ஏற்படும் பல கஷ்ட நேரங்களில் , அதன் முடிவு மிக பெரிய வெற்றியாக இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்வதில்லை. காலியான கல்லறை நம் வாழ்விலும் உள்ளது என்பதை நாம் மறந்து விடுகிறோம். (நம் வாழ்வில் ஏற்படும் இழப்புகள்) , இவை அனைத்தும் புதிய வளர்ச்சிக்கு வித்திடும் என்பதையும் நாம் மறந்து விடுகிறோம். கெட்ட நேரங்களை மிக பெரிய ஆசிர்வாதமாக இயேசு மாற்ற போகிறார் என்பதை நம்மால் கனவில் கூட கணிக்க முடியாது.
நமது கஷ்டகாலங்களில், நாம் துன்பப்பட்டு, அந்த பிரசினைகளின் ஊடே கடந்து வந்து, அந்த துன்ப சிலுவையில் விட்டு வெளியே வா காத்திருக்கிறோம். அதே வேலையில் இயேசு ஈஸ்டர் எழுச்சியை உங்கள் சிலுவைக்காக கொடுக்கிறார்.
நாம் சோர்வுற்று இருக்கும்போது, கடவுளின் மாட்சியை எப்படி அறிந்து கொள்வது? நமது துன்பத்தை நினைத்து நாம் நொந்து கொண்டிருக்கும்போது, நமது மீட்பை நாம் அறிந்து கொள்ள முடியாது.
ஈஸ்டர் மக்களாக நாம், மீட்பின் நம்பிக்கையை எப்பொழுதும் நாம் நினைவில் கொள்ள கற்று கொள்ள வேண்டும். ஒவ்வொரு சிலுவைக்கும் பின்பும் மீட்பு இருக்கிறது. இயேசு எப்போதும் நம்முடன் இருக்கிறார் என்று விசுவாசம் கொள்ள வேண்டும். கேட்டதை நல்லதாக மாற்ற இயேசு முயற்சி செய்து கொண்டிருக்கிறார் என்ற நம்பிக்கை நம்மில் இருக்க வேண்டும். கடவுள் நம்மை ஆச்ச்சர்யபடுத்த நாம் அனுமதிக்க வேண்டும்.
© 2018 by Terry A.
Modica