மார்ச் 18 2018 ஞாயிறு நற்செய்தி மறையுரை சிந்தனை
தவக்கால 5ம் ஞாயிறு
Jeremiah 31:31-34
Ps 51:3-4, 12-15
Hebrews 5:7-9
John 12:20-33
Ps 51:3-4, 12-15
Hebrews 5:7-9
John 12:20-33
யோவான் நற்செய்தி
கிரேக்கர் இயேசுவைக் காண விரும்புதல்
20வழிபாட்டுக்காகத் திருவிழாவுக்கு வந்தோருள் கிரேக்கர் சிலரும் இருந்தனர்.
21இவர்கள் கலிலேயாவிலுள்ள பெத்சாய்தா ஊரைச் சேர்ந்த பிலிப்பிடம் வந்து, “ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம்” என்று கேட்டுக் கொண்டார்கள்.
22பிலிப்பு அந்திரேயாவிடம் வந்து அதுபற்றிச் சொன்னார்; அந்திரேயாவும் பிலிப்பும் இயேசுவிடம் சென்று அதைத் தெரிவித்தனர்.
23இயேசு அவர்களைப் பார்த்து,
“மானிட மகன் மாட்சி பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது.
24கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியா விட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.✠
25தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்து விடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர்.✠
26
எனக்குக் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும். நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர். எனக்குத் தொண்டு செய்வோருக்குத் தந்தை மதிப்பளிக்கிறார்”
என்றார்.
மானிட மகன் உயர்த்தப்பட வேண்டும்
27மேலும் இயேசு,
“இப்போது என் உள்ளம் கலக்கமுற்றுள்ளது. நான் என்ன சொல்வேன்? ‘தந்தையே, இந்த நேரத்திலிருந்து என்னைக் காப்பாற்றும்’ என்பேனோ? இல்லை! இதற்காகத் தானே இந்நேரம்வரை வாழ்ந்திருக்கிறேன்.
✠
28
தந்தையே, உம் பெயரை மாட்சிப்படுத்தும்”
என்றார். அப்போது வானிலிருந்து ஒரு குரல், “மாட்சிப்படுத்தினேன்; மீண்டும் மாட்சிப்படுத்துவேன்” என்று ஒலித்தது.
29அங்குக் கூட்டமாய் நின்று கொண்டிருந்த மக்கள் அதைக் கேட்டு, “அது இடிமுழக்கம்” என்றனர். வேறு சிலர், “அது வானதூதர் ஒருவர் அவரோடு பேசிய பேச்சு” என்றனர்.
30இயேசு அவர்களைப் பார்த்து,
“இக்குரல் என் பொருட்டு அல்ல, உங்கள் பொருட்டே ஒலித்தது.
31இப்போதே இவ்வுலகு தீர்ப்புக்குள்ளாகிறது; இவ்வுலகின் தலைவன் வெளியே துரத்தப்படுவான்.✠
32
நான் மண்ணிலிருந்து உயர்த்தப்படும் போது அனைவரையும் என்பால் ஈர்த்துக்கொள்வேன்”
என்றார்.
33தாம் எவ்வாறு இறக்கப்போகிறார் என்பதைக் குறிப்பிட்டே இப்படிச் சொன்னார்.
(thanks to www.arulvakku.com)
நீங்கள் எப்பொழுதும் பதற்றத்துடன்
இருக்கிறீர்களா?
நாம் கடவுளை நம்பி, இயேசுவின் பின் செல்ல
நாம் ஆசைப்பட்டாலும், அதனால் ஒரு கலக்கத்துடன் இருந்தால், அது ஒன்றும் பாவம்
இல்லை.
கண்டிப்பாக நம் சொந்த வாழ்க்கையை விட
வேண்டும் (நம் சொந்த ஆசைகள், எப்படி நம் நேரத்தை செலவழிப்பது என நாம் தீர்மானிக்க
தீர்மானம் செய்ய முடியாது, இன்னும் பல ) இது அத்தனையும் விட்டு விட்டு , கிறிஸ்துவோடு நாம் இணைந்து, அவரின் இறைபணியில்
சேர முடியும். எனினும், நமக்கு ஏற்படும் இழப்பை பற்றி நாம் கவலை பட வேண்டியதில்லை.
இன்றைய நற்செய்தியில், இயேசு
கலக்கத்துடன் இருந்தார், என்று குறிப்பிட்டுள்ளனர். அவர் செய்ய வேண்டிய தியாகத்தை
நினைத்து, கலக்கமுற்றார். இருந்தாலும், இயேசுவே கலக்கமடைந்ததை நாம் பார்க்கிறோம்.!
மேலும், கடவுள் இயேசுவை மாட்சிமை படுத்தினார்.
இயேசு இவ்வுலகிற்கு வந்து கடவுளின்
வழியையும், கடவுளின் அன்பையும் வெளிப்படுத்தி நம்மை விண்ணுலகம் அழைத்து செல்ல
வந்தார். தற்போது, அவரை பின் செல்பவர்களாக நாம், கடவுளின்வழியையும், அன்பையும் வெளிப்படுத்த
, அருட்சாதனங்கள் மூலம் அழைக்கப்பட்டுள்ளோம். அதன் மூலம் இயேசு எல்லோரையும்
விண்ணுலகம் அழைத்து செல்வார். இது தான்
நமக்கு கொடுக்கப்பட்ட இறைபணி, திருச்சபையில் இருக்கும் அனைவருக்கும் - குருக்கள் ,
பொதுவானவர்கள் - அழைக்கப்பட்ட இறைபணி.
ஞானஸ்நானம் திருவருட்சாதனம் மூலம் முதல்
அழைப்பு விடபடுகிறது. உறுதி பூசுதல் நம்மை இறைபணி செய்ய பணிக்கின்றது. பாவ
சங்கீர்த்தனம் இந்த இறைபணியை இன்னும் நல்ல முறையில் செய்ய நம்மை மெருகேற்றுகிறது.
திருமண சடங்குகளும், மற்ற பல இறை நிகழ்வுகள் இந்த இறைபணி செய்ய ஏதுவான இடமாக மாறுகிறது.
நோயில் பூசுதல் கிறிஸ்துவின் சிலுவை மரணத்திற்கு சாட்சியாக காட்ட ஒரு வாய்ப்பாக
அமைகிறது. திவ்ய நற்கருணை நம்மை கிறிஸ்துவின் பாடுகளோடு இணைத்து, நாம் என்ன செய்ய வேண்டுமோ, அந்த
இறைபணியாக நம்மை ஆக்கி விடுகிறது.
நமது அனுதின இறைபணி: இயேசு மற்றவர்களை
அன்பு செய்வது போல நாமும் அன்பு செய்தல் வேண்டும்.இயேசு அவர்களுக்கு என்ன செய்வாரோ
அதனை அவர்களுக்கு செய்வது, மேலும், இயேசுவின் நற்செய்தியை மற்றவர்களுக்கு
அறிவிப்பது அனைத்தும் நாம் அனுதினம் செய்தல் வேண்டும்.
அதிக நேரங்களில் இதனை செய்யும்பொழுது,
நாம் நிறைய இழக்க வேண்டி ம், கஷ்டமான தியாகங்களை செய்ய வேண்டி வரும். பல நேரங்களில்
அவர்கள் நம்மை நிராகரிக்க கூடும் , நம்மை வார்த்தை வசவுகளால் திட்ட கூடும், பல
வழிகளில் நமக்கு வேதனை ஏற்படுத்தலாம். இது தான் நம்மை கிறிஸ்துவின் பாடுகளோடு
இணைக்கிறது. இந்த இறைபணியை தான் நாம் செய்ய வேண்டும்.
இதற்காக தந்தை கடவுள் நம்மை
பாராட்டுகிறார். எப்படி இயேசுவை மாட்சிமைபடுத்தினாரோ, அதே போல, அவர் இறக்கத்தினாலும்,
பரிசுகள் கொடுத்தும், நம்மை ஏற்று கொள்கிறார்.
நமது இறைபணியில் சில தொந்தரவுகள்
ஏற்படுவது நமக்கு இட்ட சவால் ஆகும். ஆனால், நாம் தொடர்ந்து இதனை செய்ய நமக்கு
ஆறுதல் ஆக இருப்பது , கடவுள் நம்மை உயர்த்துகிறார் என்ற உண்மை தான். ஒவ்வொரு சிலுவைக்கு பின்பும், ஒரு
உயிர்ப்பெழுதல் இருக்கிறது.
© 2018 by Terry A.
Modica
No comments:
Post a Comment