Saturday, June 9, 2018

ஜுன் 10 2018 ஞாயிறு நற்செய்தி மறையுரை சிந்தனை


ஜுன் 10 2018  ஞாயிறு நற்செய்தி மறையுரை சிந்தனை
ஆண்டின் 10ம் ஞாயிறு
Genesis 3:9-15
Ps 130: 1-8
2 Corinthians 4:13--5:1
Mark 3:20-35

மாற்கு நற்செய்தி

இயேசுவும் பெயல்செபூலும்
(மத் 12:22-32; லூக் 11:14-23; 12:10)
20அதன்பின் இயேசு வீட்டிற்குச் சென்றார். மீண்டும் மக்கள் கூட்டம் வந்து கூடியதால் அவர்கள் உணவு அருந்தவும் முடியவில்லை.

21அவருடைய உறவினர் இதைக் கேள்விப்பட்டு, அவரைப் பிடித்துக்கொண்டுவரச் சென்றார்கள். ஏனெனில் அவர் மதிமயங்கி இருக்கிறார் என்று மக்கள் பேசிக் கொண்டனர்.
22மேலும், எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர், “இவனைப் பெயல்செபூல் பிடித்திருக்கிறதுஎன்றும் பேய்களின் தலைவனைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான்என்றும் சொல்லிக் கொண்டிருந்தனர்.
23ஆகவே அவர் அவர்களைத் தம்மிடம் வரவழைத்து அவர்களுக்கு உவமைகள் வாயிலாகக் கூறியது: 
சாத்தான் சாத்தானை எப்படி ஓட்ட முடியும்?

24தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் நிலைத்து நிற்க முடியாது.

25தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த வீடும் நிலைத்து நிற்க முடியாது.

26சாத்தான் தன்னையே எதிர்த்து நின்று பிளவுபட்டுப் போனால் அவன் நிலைத்து நிற்க முடியாது. அதுவே அவனது அழிவு.

27முதலில் வலியவரைக் கட்டினாலன்றி அவ்வலியவருடைய வீட்டுக்குள் நுழைந்து அவருடைய பொருள்களை எவராலும் கொள்ளையிட முடியாது; அவரைக் கட்டி வைத்த பிறகுதான் அவருடைய வீட்டைக் கொள்ளையிட முடியும்.

28-29உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தூய ஆவியாரைப் பழித்து உரைப்பவர் எவரும் எக்காலத்திலும் மன்னிப்புப்பெறார்; அவர் என்றென்றும் தீராத பாவத்திற்கு ஆளாவார். ஆனால் மக்களுடைய மற்றப் பாவங்கள், அவர்கள் கூறும் பழிப்புரைகள் அனைத்தும் அவர்களுக்கு மன்னிக்கப்படும்.

30இவனைத் தீய ஆவி பிடித்திருக்கிறதுஎன்று தம்மைப் பற்றி அவர்கள் சொல்லி வந்ததால் இயேசு இவ்வாறு கூறினார்.
இயேசுவின் உண்மையான உறவினர்
(மத் 12:45-50; லூக் 8:19-21)
31அப்பொழுது அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து வெளியே நின்று கொண்டு அவரை வரச் சொல்லி ஆள் அனுப்பினார்கள்.

32அவரைச் சூழ்ந்து மக்கள் கூட்டம் அமர்ந்திருந்தது. அதோ, உம் தாயும் சகோதரர்களும் சகோதரிகளும் வெளியே நின்று கொண்டு உம்மைத் தேடுகிறார்கள்என்று அவரிடம் சொன்னார்கள்.
33அவர் அவர்களைப் பார்த்து
என்தாயும் என் சகோதரர்களும் யார்?”
 என்று கேட்டு,

34தம்மைச் சூழ்ந்து அமர்ந்திருந்தவர்களைச் சுற்றிலும் பார்த்து
இதோ! என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே.

35
கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்
 என்றார்.
(thanks to www.arulvakku.com)
மன்னிக்கமுடியாத பாவம் என்ன?
மனம் திருந்திய பாவிகளை கடவுள் மன்னிப்பார்  -- சரி தானே ? என்ன பாவம் செய்திருந்தாலும், உண்மையாக மனம் வருந்தி , கடவுளின் அருளை அடைய பிரார்த்தித்தால், பாவ சங்கீர்த்தனம் நம்மை மோட்சத்திற்கு அழைத்து செல்லும் -- சரிதானே ?
அப்படியிருக்கையில், இன்றைய நற்செய்தியில் மன்னிக்கமுடியாத குற்றம் / பாவம் எதனை குறிக்கிறது? மன்னிக்கமுடியாத குற்றத்தினால் நாம் நகரத்திற்கு செல்லும் ஆபத்தில் இருக்கிறோமா ?
இயேசு கூறும் வழியில், இந்த மன்னிக்க முடியாத பாவத்தை பற்றி பார்ப்போம். அவர் சாத்தானை பற்றி பேசுகிறார். அந்த சாத்தான்கள் மனிதர்களின் ஆன்மாவை திருட முயற்சிக்கிறது. சக்தி வாய்ந்த வழிய மனிதரை கட்டினால் தான், அவருடைய வீட்டிற்குள் செல்ல முடியும். அங்கே கொள்ளை அடிக்க முடியும். இயேசுவும் அவருடைய சீடர்களை அனுப்ப போகிறார், அவர்கள் மக்கள் அனைவரின் ஆன்மாக்களை , கிறிஸ்துவின் ஆற்றலோடு அவர்கள் ஆன்மாக்கள் மீட்பார்கள். அங்கே மீட்கப்பட்ட மனிதர்களின் பாவங்கள் மன்னிக்கப்படும்.
இயேசு, " தூய ஆவியாரைப் பழித்து உரைப்பவர் எவரும் எக்காலத்திலும் மன்னிப்புப்பெறார்; அவர் என்றென்றும் தீராத பாவத்திற்கு ஆளாவார்."  சாத்தான்கள் பரிசுத்த ஆவியை பழித்துரைத்து , அவரின் உண்மையை முழுமையாக அறிந்து இருந்தாலும், சாத்தான்கள் பரிசுத்த ஆவியை பழித்துரைத்து, நம்மை கடவுளிடமிருந்து வெளியே அழைத்து செல்கிறது. இது தான் மன்னிக்க முடியாத குற்றம்!
சாத்தானின் பொய்களை நம்பும் மனிதர்கள் பற்றி என்ன சொல்லலாம்.? கத்தோலிக்க திருமுகம் (1864) , யாரெல்லாம் மனம் திரும்புதலை நிராகரிக்கிறார்களோ , அவர்கள் அனைவரும் மன்னிப்பை நிராகரிக்கிறார்கள். அது மாதிரி கடின மனம் உடையவர்கள் இறுதி தீர்ப்பிற்கும் அண்ட் நித்திய வாழ்வின் இழப்பிற்கும் தன்னையே உட்படுத்தி கொள்கிறார்கள்.
கடவுளின் உண்மை தான் சரி என்று மக்கள் புரிந்து கொள்ளாமல் இருப்பதால், சாத்தானின் பொய்களை  பலர் நம்புகின்றனர். இன்றைய ஞாயிறின் முதல் வாசகம் , ஆதாமும், ஏவாளும் சாத்தானால் ஏமாற்றப்பட்டவர்கள் என்று சொல்கிறது. ஒவ்வொரு பாவியும், சாத்தானால் ஏமாற்றப்பட்டவர்கள் தான். நானும் நீங்களும், மோசடியை புரிந்து கொண்டு அதன் ஊக்கத்திற்கு நாம் தலையசைக்கும் பொது பரிசுத்த ஆவியானவர் , உண்மையின் ஆவி, அந்த பொய்களிளுருந்து நம்மை மீட்டு எடுக்கிறார். அந்த உண்மை நம்மை விடுதலை பெற வைக்கிறது.
© 2018 by Terry A. Modica





No comments: