Saturday, December 8, 2018

திருவருகை கால இரண்டாம் ஞாயிறு நற்செய்தி மறையுரை



திருவருகை கால இரண்டாம் ஞாயிறு நற்செய்தி மறையுரை
டிசம்பர்  9 2018
Baruch 5:1-9
Ps 126:1-6
Philippians 1:4-6, 8-11
Luke 3:1-6 

லூக்கா நற்செய்தி

1திபேரியு சீசர் ஆட்சி செய்துவந்த பதினைந்தாம் ஆண்டில், பொந்தியு பிலாத்து யூதேயாவின் ஆளுநராக இருந்தார். ஏரோது கலிலேயப் பகுதிக்கும் அவன் சகோதரராகிய பிலிப்பு, இத்துரேயா, திரக்கோனித்துப் பகுதிகளுக்கும் லிசானியா அபிலேன் பகுதிக்கும் குறுநில மன்னர்களாக இருந்தனர்.

2அன்னாவும் கயபாவும் தலைமைக் குருக்களாய் இருந்தனர். அக்காலத்தில் செக்கரியாவின் மகன் யோவான் பாலைநிலத்தில் வாழ்ந்து வந்தார். அவர் கடவுளின் வாக்கைப் பெற்றார்.

3“பாவமன்னிப்பு அடைய மனம்மாறித் திருமுழுக்குப் பெறுங்கள்என்று யோர்தான் ஆற்றை அடுத்துள்ள பகுதிகள் அனைத்துக்கும் சென்று அவர் பறைசாற்றிவந்தார்.

4இதைப்பற்றி இறைவாக்கினர் எசாயாவின் உரைகள் அடங்கிய நூலில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது:
பாலைநிலத்தில் குரல் ஒன்று
முழங்குகிறது;
ஆண்டவருக்காக வழியை
ஆயத்தமாக்குங்கள்;
அவருக்காக பாதையைச்
செம்மையாக்குங்கள்;
5பள்ளத்தாக்குகள் எல்லாம் நிரப்பப்படும்;
மலை, குன்றுயாவும் தாழ்த்தப்படும்;
கோணலானவை நேராக்கப்படும்;
கரடு முரடானவை சமதளமாக்கப்படும்.
6மனிதர் அனைவரும் கடவுள் அருளும்
மீட்பைக் காண்பர்’.”
(thanks to www.arulvakku.com)
மகிழ்வான தருணங்களுக்கு தயாராகுதல்
கிறிஸ்துமஸ் விழாவிற்காக நாம் அன்பளிப்புகளையும், கிரீட்டிங்ஸ் கார்டுகளையும், ஜோடனை பொருட்களையும் வாங்கும் பொழுது கிறிஸ்துவின் மறு பிறப்பிற்கு நாம் என்ன மாதிரியான தயாரிப்பை நமது அனுதின வாழ்வில் செய்கிறோம்
இந்த திருவருகை கால அனைத்து நற்செய்தி வாசகங்களும், நமது ஆன்மீக வாழ்விற்கு தயாராகுதல் பற்றியே பேசுகின்றன. இந்த டிசம்பர் மாத பல்வேறு செயல்களில் நாம் இதனை மறந்து விட வாய்ப்புண்டு: நமது சொந்த ஆண்மீக  வளர்ச்சி
இன்றைய பதிலுரை பாடலில்: "ஆண்டவர் வியத்தகு செயல்கள் செய்துள்ளார், ஆண்டவரை ஆர்ப்பரித்து பாடுவோம், மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்து புகழ்ந்த்தேத்துங்கள்" என்று நாம் படுகிறோம். இதனை பாடும்போது உண்மையாகவே நீங்கள் மகிழ்ச்சியுடன் பாடினீர்களா? நமது கவலையான தடுமாற்றமான வாழ்வில் நாம் மகிழ்வதுடன் இந்த பதிலுரை பாட நமக்கு முக்கியமாக விசுவாசம் தேவைபடுகிறது. கடவுள், அவரது மிக பெரிய இரக்கத்தினால்,  நமக்காக மிக பெரிய காரியங்கள் செய்கிறார் என்று நாம் அறிந்து கொள்வதால், நமது விசுவாசம் வளர்கிறது, - நம் தகுதியினால் அவர் எதனையும் செய்வதில்லை என்றும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். அவரின் இரக்கத்தை புரிந்து கொண்டு, நமது பாவங்களிலிருந்து மனம் திருந்தி வெளியே வர வேண்டும்.
அதனால் தான்  யோவான், "ஆண்டவருடைய வழியை ஆயத்தமாக்குங்கள்" என்று  கூறினார்.
நாம் இப்போது நமக்குள் கேட்க வேண்டிய கேள்வி: "என்ன மாதிரியான தயாரிப்பை நாம் செய்ய வேண்டும்? எனது வாழ்வில் உள்ள எந்த கோணலை சரிபடுத்த வேண்டும். கிறிஸ்துவின் உடன் உள்ள உறவை கெடுக்கும் எந்த பாவத்த நான் நீக்க வேண்டும்?
கடின முன்னேற்றம், தொந்தரவான பிரச்சினைகள் அனைத்தும் நீங்கி கிறிஸ்துவின் மகிழ்ச்சி அதனை நிரப்ப என்ன செய்ய வேண்டும். சில நேரங்களில் நம்பிக்கையற்று போகிறோம். இயேசு இந்த துன்ப கிண்ணத்தை எடுத்து கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்.? கடவுள் இது அனைத்தையும் தகர்த்தெறிந்து விடுவார் என நாம் விசுவாம் கொள்ள எந்த தடையை அகற்ற வேண்டும்.
குழப்பத்தில் கொண்டுவிடும் சாலை போல என் மண் ஓட்டத்தில் பல திருப்பங்களை கொண்டு செல்கிறது. பரிசுத்த ஆவி என்னை பரிசுத்த வாழ்விற்கு அழைத்து செல்வாராக, என்று நான் வேண்டுகிறேன். அன்பு இயேசுவே ஏன் பாதையை சம தளமாக்கும்.
இந்த திருவருகை காலம் முழுதும் , கடவுளின் மீட்பை அடைய நாம் செய்ய வேண்டிய வழி முறைகளை ஆராயுந்து அறிவோம். அதற்கான ஒரு திட்டம் வகுத்து அதனை பரிசுத்த சந்தோஷ வாழ்விற்கு கொண்டு செல்வோம்.
© 2018 by Terry A. Modica

No comments: