Saturday, December 15, 2018

டிசம்பர் 16 2018 ஞாயிறு நற்செய்தி மறையுரை


டிசம்பர் 16 2018  ஞாயிறு நற்செய்தி மறையுரை
திருவருகை கால 3ம் ஞாயிறு

Zephaniah 3:14-18a
Isaiah 12:2-6
Philippians 4:4-7
Luke 3:10-18
லூக்கா நற்செய்தி
10அப்போது, “நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கூட்டத்தினர் அவரிடம் கேட்டனர்.

11அதற்கு அவர் மறுமொழியாக, “இரண்டு அங்கிகளை உடையவர் இல்லாதவரோடு பகிர்ந்து கொள்ளட்டும்; உணவை உடையவரும் அவ்வாறே செய்யட்டும்என்றார்.
12வரி தண்டுவோரும் திருமுழுக்குப் பெற வந்து, “போதகரே, நாங்கள் என்ன செய்யவேண்டும்?” என்று அவரிடம் கேட்டனர்.

13அவர், “உங்களுக்குக் குறிக்கப்பட்ட தொகைக்கு அதிகமாக எதையும் தண்டாதீர்கள்என்றார்.

14படைவீரரும் அவரை நோக்கி, “நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டனர். அவர், “நீங்கள் எவரையும் அச்சுறுத்திப் பணம் பறிக்காதீர்கள்; யார்மீதும் பொய்க் குற்றம் சுமத்தாதீர்கள்; உங்கள் ஊதியமே போதும் என்றிருங்கள்என்றார்.
15அக்காலத்தில் மக்கள் மீட்பரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒருவேளை யோவான் மெசியாவாக இருப்பாரோ என்று எல்லாரும் தங்களுக்குள் எண்ணிக்கொண்டிருந்தார்கள்.

16யோவான் அவர்கள் அனைவரையும் பார்த்து, “நான் தண்ணீரால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுக்கிறேன்; ஆனால் என்னைவிட வலிமைமிக்க ஒருவர் வருகிறார். அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார்.
17அவர் சுளகைத் தம் கையில் கொண்டு கோதுமையையும் பதரையும் பிரித்தெடுப்பார். கோதுமையைத் தம் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அணையா நெருப்பிலிட்டுச் சுட்டெரிப்பார்என்றார்.

18மேலும் பல அறிவுரைகள் கூறி மக்களுக்கு நற்செய்தியை அறிவித்தார்.
(thanks to www.arulvakku.com)
இறைபணியில் மகிழ்வை அனுபவிப்பது
மூன்றாவது திருவருகை கால  ஞாயிறு மகிழ்ச்சியை சந்தோசத்தை  முக்கிய குறிக்கோளாக கொண்டுள்ளது. கிறிஸ்துவின் மீது நாம் கொண்ட உண்மையான விசுவாசம் சந்தோசத்தில் தான் கொண்டுசெல்கிறது. இன்றைய வாசகங்கள் அனைத்தும் சந்தோசத்தையே மகிழ்வையே குறித்து பேசுகிறது. மேலும், எதிர்பார்ர்ப்பிலும் ஒரு திரில் இருக்க தான் செய்கிறது. நற்செய்தி வாசகத்தில், ஞானஸ்நான யோவான் மக்களுக்கு நற்செய்தியை அறிவிக்கிறார். மேலும் அவர்கள், கடவுளை பற்றி சந்தோசத்துடன் ஒரு எதிர்பார்ப்புடன் இருந்தனர்.
சந்தோசமாக மகிழ்வுடன் இருப்பதே ஒரு இறைசேவை என்று உங்களுக்கு தெரியுமா? இதன் மூலம் நாம் விசுவாசத்தை பரப்ப முடியும். நம்மில் பல துன்பங்களையும் துயரங்களையும் நம்பிக்கைன்மையும் கொண்டிருக்கும்போது நாம் சந்தோசமாக இருக்க தைரியத்துடன் கிறிஸ்து பார்த்து கொள்வார் என்று விசுவாசத்துடன் இருக்க நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.
யோவான் இந்த இறைசேவையை எப்படி செய்தார் என்று பார்ப்போம்.   ஒட்டகத்தின் தொலை ஆடையாக அணிந்து கொண்டு, பாவத்திலிருந்து மனம் திரும்புங்கள் என்று மட்டு சொல்லவில்லை. இன்னும் நன்றாக கவனியுங்கள், அவரின் இறைபணியின் மூலம் இயேசுவை வரவேற்க ஆயத்தப்டுத்தினார்.
விசுவாசத்துடன் இருப்பது என்பது, கடவுள் மேல் நம்பிக்கை கொள்வது, அந்த நம்பிக்கை நம்மில் மகிழ்வை கொண்டு வரும். உங்களுக்கோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களுக்கோ சந்தோசம் இல்லை என்றால், இயேசுவை நாம் முழுமையாக நம்மள் ஏற்று கொள்ளவில்லை, அவரை முழுமையாக வரவிடாமால் இருக்கிறோம், என்று அர்த்தம். நமக்கு இன்னும் விசுவாசம் பத்தாமல் இருக்கலாம், அதனை நாம் இன்னும் நன்றாக உறுதிபடுத்தி கொள்ள வேண்டும். விசுவாசத்தில் நாம் இன்னும் வளர்ந்திட வேண்டும்.
கடவுளின் அன்பின் மீது நம் கவனத்தை திருப்பும் பொழுது, அதன் மூலம் அவரின் ஆறுதலை பெறுவதால், நம் துயரம் நம்மை விட்டு நீங்கி நாம் சந்தோசம் அடைகிறோம். மேலும் இயேசுவின் சந்தோஷ பக்கங்களையும் நாம் பார்க்க தெரிந்து கொள்ள வேண்டும். சந்தொசத்திர்கான காரண காரியங்களை அவரிடமிருந்து , அவர் போதனையிலிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
இயேசு இன்னும் அதிக ஸ்டேப் எடுத்து செல்ல சொல்கிறார், பகைவரையும் அன்பு செய்ய சொல்கிறார், நமக்கு அதிக தொந்தரவு கொடுக்கிறவரையும் அன்பு செய்ய சொல்கிறார்.  இவை அனைத்தும் நமக்கு சந்தோசமான மகிழ்ச்சியான விஷயம் இல்லை. பரிசுத்த வாழ்வில் வாழ நாம் அறிந்து கொண்டு ,  அதனை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும். இயேசுவோடு , அவரின் சந்தோசத்தோடு நாம் மற்றவர்களோடு அதனை பகிரும் பொழுது , இயேசுவின் சந்தோஷ அன்பில் நாம் இணைவோம். மேலும் நினைவில் வைத்து கொள்ளுங்கள், இயேசுவோடு அவரது சிலுவையில் இணையும் பொழுது இன்னும் அதிக சந்தோசத்தை நாம் பெறுவோம்.
நற்செய்தி: இயேசு நமக்கு, நாம் எப்படி பரிசுத்த வாழ்வு வாழ வேண்டும் என சொல்லி கொடுக்கவில்லை. ஆனால், நாம் பரிசுத்தமாக இருக்க தேவையான ஆற்றலை கொடுத்துள்ளார். அவரின் பரிசுத்த ஆவியை நமக்கு கொடுத்துள்ளார் மற்றவர்கள் நம்மில் பரிசுத்த ஆவியின் செயலை காணும் பொழுது, இயேசு தான் நம் மகிழ்ச்சிக்கு காரனம் என்று அறியும் பொழுது, நம் விசுவாசம் மூலம் மனம் மாறுகின்றனர்.
© 2018 by Terry A. Modica


No comments: