Friday, January 11, 2019

ஜனவரி 13, 2019 ஞாயிறு நற்செய்தி மறையுரை


ஜனவரி 13, 2019 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டவரின் திருமுழுக்கு விழா  
Isaiah 42:1-4, 6-7 (or Isaiah 40:1-5, 9-11)
Ps 29:1-4, 9-11 (or Ps 104:1-4, 24-25, 27-30)
Acts 10:34-38 (or Titus 2:11-14; 3:4-7)
Luke 3:15-16, 21-22

லூக்கா நற்செய்தி
15அக்காலத்தில் மக்கள் மீட்பரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒருவேளை யோவான் மெசியாவாக இருப்பாரோ என்று எல்லாரும் தங்களுக்குள் எண்ணிக்கொண்டிருந்தார்கள்.

16யோவான் அவர்கள் அனைவரையும் பார்த்து, “நான் தண்ணீரால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுக்கிறேன்; ஆனால் என்னைவிட வலிமைமிக்க ஒருவர் வருகிறார். அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார்.

இயேசு திருமுழுக்குப் பெறுதல்
(மத் 3:13-17; மாற் 1:9-11)
21மக்களெல்லாரும் திருமுழுக்குப் பெறும் வேளையில் இயேசுவும் திருமுழுக்குப் பெற்று, இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தபோது வானம் திறந்தது.

22தூய ஆவி புறா வடிவில் தோன்றி அவர்மீது இறங்கியது. அப்பொழுது,
என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகிறேன்
என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.
(thanks to www.arulvakku.com)

நீங்கள் எதை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறீர்கள் ?
இன்றைய ஞாயிறின் நற்செய்தியானது, முழுதும் எதிர்பார்ப்போடு இருக்கிறது? எதற்காக காத்து கொண்டு இருக்கிறீர்கள்? உங்களுக்கு ஏற்படும் அநிதி, சாத்தானின் காரியாங்களிளிருந்து கடவுள் எப்படி உங்களை காக்க வேண்டும் என எதிர்பார்ப்புடன் இருக்கிறீர்கள்? அல்லது உங்களுக்கு மிகவும் பிடித்தமானவர்கள் கடவுளிடம் திரும்பி வர கடவுள உதவ வேண்டும் என எதிர்பார்ப்புடன் இருக்கிறீர்களா? குழப்பத்திலோ அல்லது என்ன நடக்க போகிறது என்று தெரியாமல் இருக்கும் சுழ்நிலையில் என்ன மாதிரியான  வழிகாட்டுதலை எதிர்பார்க்கிறீர்கள்?
நீங்கள் கிறிஸ்துவை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் போது  கிறிஸ்துவின்  அன்பளிப்பான அமைதியை உணர்கிறீர்களா? அல்லது, கவலையுடனும், அமைதியின்றியும்,விரக்தியுடனும் இருக்கிறீர்களா?
இன்றைய நற்செய்தியில், யோவான் ஞானஸ்நானம் முழுதும் எதிர்பார்ப்போடு மக்கள் இருந்தார்கள், ஏனெனில் யோவான் தான் மெசியா என்று நினைத்தனர்.. கடவுள் வந்து , அவர்களின் துயரத்தையும், அநிதியும், வெளிநாட்டவரின் ஆக்கிரமிப்பையும் கடவுள் வந்து மீட்பார் என்ற எதிர்பார்ப்புடனும் , கடவுள் செய்தே ஆக வேண்டும் என்ற   எண்ணத்துடனும், யோவானின் ஞானஸ்நானம் மூலம் அவர்கள் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று எதிர்பார்த்தனர்.
ஆனால் கடவுள், இதனை விட இன்னும் நல்ல திட்டத்தை அவர் மனதில் வைத்திருந்தார். முழுமையான திட்டம். உண்மையான மெசியா பரிசுத்த ஆவினால் திருமுழுக்கை கொடுப்பார். ஆனால் யோவானோ மனம் திருந்துங்கள் என்று மட்டுமே கூற முடிந்தது. ஆனால் உண்மையான மெசியாவோ அனைவரையும் பரிசுத்த வாழ்வில் வாழ தன்னுடைய ஆவியையே கொடுத்தார்.  
இயேசு இறுதியாக யோவானிடம் ஞானஸ்நானம் பெற வந்தார். அவர் பாவ மன்னிப்பை பெற வேண்டியதில்லை. ஏனெனில், அவர் பாவம் இல்லாதவர். நாம் மனம் திருந்த வேண்டிய கடைமையோடு தன்னையும் இயேசு இணைத்து கொண்டார். அதன் மூலம் தனது இறைபணியை (நம்மை பாவத்திலிருந்து மீட்பது) , நம்மை சிலுவையை கொண்டு செல்ல ஆரம்பிக்கிறார்.
கிறிஸ்தவ ஞானஸ்நானத்தில், இயேசுவின் பரிசுத்தத்திலும், அவரின் இறைபனியிலும், அவரது குருத்துவத்திலும், நற்செய்தியை அறிவிப்பதிலும், சேவை செய்வதிலும், மற்றவர்களுக்காக தியாகம் செய்வதிலும் நாம் மூழ்கடிக்கபடுகிறோம்.பரிசுத்த ஆவியானவர், இயேசு செய்ததை போல நாம் செய்ய நமக்கு உதவியாக இருக்கிறார். தந்தை நம் மேல் "என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகிறேன் என்று கூறுகிறார்.
நீங்கள் என்ன எதிர்பார்த்து இருக்கிறிர்கள்? உங்கள் அனுதின வாழ்வில், உங்கள் ஞானஸ்நானத்தால் என்ன நடக்க வேண்டும் என நினைகிறீர்கள்? எதிர்பார்ப்பது ஒரு நல்ல குணம் தான் -- ஆனால், அதையே பொறுமையின்றி எதிர்பார்க்கும் பொழுது, நாம் ஏமாந்து விடுவோம். கடவுளின் நன்மையோடு நம் எதிர்பார்ப்பை வைக்கும் பொழுதும், மேலும், கடவுள் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்று நாம் இருக்கும்பொழுதும், நமக்கு சந்தோசமும், அதிகமான விசுவாசமும், இன்னும் பல அதிசயங்களும் நடக்கும்.
© 2019 by Terry A. Modica


No comments: