Friday, January 4, 2019

ஜனவரி 6 2019 ஞாயிறு நற்செய்தி மறையுரை


ஜனவரி  6 2019 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா

Isaiah 60:1-6
Ps 72:1-2, 7-8, 10-13
Ephesians 3:2-3, 5-6
Matthew 2:1-12

மத்தேயு நற்செய்தி

ஞானிகள் வருகை
1ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து,

2“யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்என்றார்கள்.

3இதைக் கேட்டதும் ஏரோது அரசன் கலங்கினான். அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று.
4அவன் எல்லாத் தலைமைக் குருக்களையும், மக்களிடையே இருந்த மறைநூல் அறிஞர்களையும் ஒன்று கூட்டி, மெசியா எங்கே பிறப்பார் என்று அவர்களிடம் விசாரித்தான்.

5-6அவர்கள் அவனிடம், “யூதேயாவிலுள்ள பெத்லகேமில் அவர் பிறக்க வேண்டும். ஏனெனில்,
யூதா நாட்டுப் பெத்லகேமே,
யூதாவின் ஆட்சி மையங்களில்
நீ சிறியதே இல்லை; ஏனெனில்,
என் மக்களாகிய இஸ்ரயேலை
ஆயரென ஆள்பவர் ஒருவர்
உன்னிலிருந்தே தோன்றுவார்
என்று இறைவாக்கினர் எழுதியுள்ளார்என்றார்கள்.

7பின்பு ஏரோது யாருக்கும் தெரியாமல் ஞானிகளை அழைத்துக்கொண்டுபோய் விண்மீன் தோன்றிய காலத்தைப் பற்றி விசாரித்து உறுதி செய்து கொண்டான்.

8மேலும் அவர்களிடம், “நீங்கள் சென்று குழந்தையைக் குறித்துத் திட்டவட்டமாய்க் கேட்டு எனக்கு அறிவியுங்கள். அப்பொழுது நானும் சென்று அக்குழந்தையை வணங்குவேன்என்று கூறி அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பி வைத்தான்.

9அரசன் சொன்னதைக் கேட்டு அவர்கள் புறப்பட்டுப் போனார்கள். இதோ! முன்பு எழுந்த விண்மீன் தோன்றிக் குழந்தை இருந்த இடத்திற்குமேல் வந்து நிற்கும்வரை அவர்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்தது.
10அங்கே நின்ற விண்மீனைக் கண்டதும் அவர்கள் மட்டில்லாப் பெரு மகிழ்ச்சி அடைந்தார்கள்.

11வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்; நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப்போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள்.

12ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று கனவில் அவர்கள் எச்சரிக்கப்பட்டதால் வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பினார்கள்.
(thanks to www.arulvakku.com)
ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா
கிறிஸ்துமஸ் விழாவோடு சேர்த்து கிழக்கிலிருந்து ஞானிகளின் வருகையும் நாமே சேர்ந்தே கொண்டாடுகிறோம்.
கிரேக்க வார்த்தையான "மேகி(ஞானி)' என்ற வார்த்தைக்கு, விஞ்ஞானிகள் என்று அர்த்தம். சில நேரங்களில் "ஜோதிடர்கள்" என்று கூட சொல்வது உண்டு, ஆனால், அவர்கள் குடிலில் ஏற்படுத்திய தோற்றத்தை வைத்து அவர்கள் தொடர்கள் என்று கூறி விட முடியாது. மத்தேயு நற்செய்தியில், இயேசு எல்லோருக்கும் மீட்பு கொடுக்கவே இந்த  உலகத்தில் பிறந்தார்:யூதர்கள் மற்றும் பிற இனத்தார்
இந்த திருக்காட்சி திருவிழாவை நமது திருச்சபை கொண்டாடுவதின் நோக்கம், ஞானிகள் குழந்தை இயேசுவை தெய்வமாகவும் மனிதனாகவும் வணங்கி வரவேற்றனர். அவர்கள் அனைவரையும் இறையரசை விட்டு விளக்கி வைக்கபடுவர் என்று அர்த்தம் இல்லை. கிறிஸ்துவே வழி, அவரே உண்மையும் வாழ்வும் ஆவார் .இயேசு இல்லாமால், யாரும் நித்திய வாழ்வை அடைய முடியாது. ஆனால் அனைவரும் அங்கே செல்ல அழைக்கப்பட்டுள்ளனர்.
அந்த ஞானிகள் யாரும் மன்னர்கள் இல்லை, பைபிள் காலத்திற்கு வந்த பல நூல்கள் கூட அவர்களை ராஜாக்கள் என்று சொல்கின்றனர் ஏனெனில், அவர்கள் கொண்டு வந்த பரிசு பொருட்கள், ராயல் மன்னர்களுக்குண்டான பரிசுகள். இவை அனைத்தும் இயேசுவை மன்னர் தான் என்று அறிவுறுத்த அந்த பரிசு கொடுக்க பட்டது. அந்த ஞானிகள், இயேசு தான் தெய்வீக அரசர், இந்த உலகில் மனிதனாக மரணிப்பார் என்றும் அறிவித்தார்கள்.
தங்கம் இயேசுவை ராஜா என்று மரியாதை செலுத்தியது. நறுமணம் தைலம் இயேசுவை தெய்வம் என்று பறை சாற்றியது. வெள்ளைபோளம் மரணத்தில்  சவத்திற்கு மரியாதை செலுத்த உபயோகிக்க கூடியது. மேலும், அதே பரிசுகள் நமது கிறிஸ்தவ வாழ்விற்கான பொறுப்புகளையும் நமக்கு சுட்டி காட்டுகிறது: தங்கம் நாம் நீதியோடு இருக்க வேண்டும் என்றும், நறுமண தைலம் நமது ஜெபங்களையும் , வெள்ளைபோலம் கிறிஸ்துவுக்காக நாம் படும் துன்பங்களையும் சுட்டி காட்டுகிறது.
"திருக்காட்சி" என்ற வார்த்தையின் அர்த்தம் கண்டுபிடிப்பது என்பது ஆகும். நம் வாழ்வை மாற்றும் ஒரு வெளிப்பாடு ஆகும். அந்த ஞானிகள் , குழந்தை இயேசு தான் நமது மெசியா என்று அறிந்து கொண்டார்களா? அந்த கால கட்டத்தில், ராஜா தான் தெய்வம் என்று எல்லோரும் நம்பினார்கள். அவர்கள் இறக்கும் வரை , நம்மோடு வாழும் கடவுள் என்று நம்பினார்கள். அந்த ஞானிகள் இயேசு தான் என்றுமே ராஜா என்று கண்டு கொண்டார்களா?
கண்டிப்பாக, அவர்கள் இறை பயணம் முடிந்த பின்பு, இயேசுவை மறந்து விடவில்லை, ஜெருசலேம் இல் இறுதி ஏதாவது தகவல் வருகிறதா? என்று எதிர்பார்த்திருந்தனர். யூதர்களின் அரசர் சிலுவையில் அறையப்பட்டதை கேட்டு அறிந்தனர். நாமும் இதனை அறிவோம், அவர்கள் ஒரு நேரத்தில் புனித கிறிஸ்தவர்களாக மாறினார்கள். அவர்களுடைய நினைவாக, புனித பிண்டங்கள் இன்னும் இருக்கிறது. அவர்கள் , அந்த காலத்திலேயே அர்சிக்கபட்டார்கள்.

© 2019 by Terry A. Modica

No comments: