Saturday, March 23, 2019

மார்ச் 24 2019 ஞாயிறு நற்செய்தி மறையுரை



தவக்காலத்தின் 3ம் ஞாயிறு
Exodus 3:1-8a, 13-15
Ps 103: 1-4, 6-8, 11
1 Corinthians 10:1-6, 10-12
Luke 13:1-9
லூக்கா நற்செய்தி

மனம் மாறாவிடில் அழிவு
1அவ்வேளையில் சிலர் இயேசுவிடம் வந்து, பலி செலுத்திக் கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றான் என்ற செய்தியை அறிவித்தனர்.

2அவர் அவர்களிடம் மறுமொழியாக
இக்கலிலேயருக்கு இவ்வாறு நிகழ்ந்ததால் இவர்கள் மற்றெல்லாக் கலிலேயரையும் விடப் பாவிகள் என நினைக்கிறீர்களா?

3அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அவ்வாறே அழிவீர்கள்.

4சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேரைக் கொன்றதே. அவர்கள் எருசலேமில் குடியிருந்த மற்ற எல்லாரையும்விடக் குற்றவாளிகள் என நினைக்கிறீர்களா?

5
அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அப்படியே அழிவீர்கள்
 என்றார்.
காய்க்காத அத்திமரம்
6மேலும், இயேசு இந்த உவமையைக் கூறினார்: 
ஒருவர் தம் திராட்சைத் தோட்டத்தில் அத்திமரம் ஒன்றை நட்டு வைத்திருந்தார். அவர் வந்து அதில் கனியைத் தேடியபோது எதையும் காணவில்லை.

7எனவே அவர் தோட்டத் தொழிலாளரிடம், ‘பாரும், மூன்று ஆண்டுகளாக இந்த அத்தி மரத்தில் கனியைத் தேடி வருகிறேன்; எதையும் காணவில்லை. ஆகவே இதை வெட்டிவிடும். இடத்தை ஏன் அடைத்துக்கொண்டிருக்க வேண்டும்?’ என்றார்.

8தொழிலாளர் மறுமொழியாக, ‘ஐயா, இந்த ஆண்டும் இதை விட்டுவையும்; நான் இதைச் சுற்றிலும் கொத்தி எருபோடுவேன்.

9அடுத்த ஆண்டு கனி கொடுத்தால் சரி; இல்லையானால் இதை வெட்டிவிடலாம்என்று அவரிடம் கூறினார்.
உடல் ஊனமுற்ற பெண் ஓய்வுநாளில் குணமடைதல்
10ஓய்வுநாளில் இயேசு தொழுகைக்கூடம் ஒன்றில் கற்பித்துக்கொண்டிருந்தார்.

11பதினெட்டு ஆண்டுகளாகத் தீய ஆவி பிடித்து உடல்நலம் குன்றிய பெண் ஒருவர் அங்கு இருந்தார். அவர் சிறிதும் நிமிர முடியாதவாறு கூன் விழுந்த நிலையில் இருந்தார்.

12இயேசு அவரைக் கண்டு அருகே கூப்பிட்டு
அம்மா, உமது நோயிலிருந்து நீர் விடுவிக்கப்பட்டுள்ளீர்
 என்று கூறி,

13தம் கைகளை அவர் மீது வைத்தார். உடனே அவர் நிமிர்ந்து கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்.
(Thanks to www.arulvakku.com)
இரக்கம்: தவறுகளில் ஈடுபடுபவர்களிடம் இறக்கம் எப்படி உதவி செய்கிறது

மற்றவர்களுக்கு வேதனை அளிப்பவர்கள், அவர்கள் மேல் வன்மம் கொண்டவர்கள், எப்பொழுது அநிதியுடன் இருப்பவர்களுக்கு, மிக பெரிய ஒரு அடி விழுந்து அவர்கள் துன்புறும் பொழுது நீங்கள் எப்படி நினைப்பீர்கள்? இயற்கையாகவே நீங்கள் சந்தோசபடலாம், ஏனெனில், நீதி அங்கே நிலை நாட்டப்பட்டுள்ளது என்று நாம் நினைக்கலாம்.
இயேசு இன்றைய நற்செய்தியில், "எல்லாவரையும் விட இவர்கள் பாவிகள்" என்று நாம் சொல்ல முடியாது என்று சொல்கிறார். இதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்கிறார். அவர்கள் மிக பெரிய பாவங்களை செய்தாலும் கூட. கிறிஸ்துவிற்கு பிடிக்காத செயல்கள் செய்தால் கூட, மற்றவர்களை விட பெரிய பாவங்கள் செய்தால் கூட நாம் அவர்களை பெரிய பாவி என்று சொல்லிவிட முடியாது.
மனிதன் கடவுளின் உருவத்தோடு ஒத்து படைக்கபட்டாலும், மிகவும் மோசமானவர்கள் கூட இறைவனின் உருவத்தை போல படைக்கபட்டிருக்கிறார்கள்.  யாரெல்லாம் இதற்கு எதிரான உருவத்தை காட்டுகிறார்களோ இயேசு கூட அவர்களிடம் அன்பு செலுத்துவதில்லை. அவர்களுக்காகவும் சேர்த்து தான் இயேசு மரணமடைந்து தியாகம் செய்தார். கடவுள் எப்படி அவர்களை படைத்தாரோ அதே உருவத்தோடு அவர்கள் நடந்து கொள்ளாதது மிக பெரிய சோகம் ஆகும். ஏனெனில் இது மற்றவர்களை பாதிக்கிறது. யாராவது அவர்களை மீண்டும் கிறிஸ்துவின் பின் செல்ல அழைக்கவில்லை என்றால், அவர்கள் வாழ்வு இன்னும் மிக பெரிய அழிவை கொண்டு செல்லும், அவர்களையும் கிறிஸ்து அன்பு செய்கிறார் என்று நாம் அறிவோம்.

யாருமே தவறான மனிதர்கள் கிடையாது. சாத்தானின் செயல்கள் செய்பவர்கள், கடவுளின் குழந்தைகளாக இருந்தும், அவர்களின் உண்மையான  அடையாளத்தை அவர்கள் நிராகரித்து விட்டார்கள். அவர்கள் சாத்தானின் செயலுக்கு அடிபணிந்துள்ளார்கள், ஏனெனில், அவர்களுக்கு இன்னும் நல்ல  வாழ்வை வாழலாம் என்று சாதத்தான் ஓதுகிறது.  சாத்தான் அவர்களை மயக்கி வைத்திருக்கிறது, பாவமில்லா இயேசு அவர்களை தன மீட்பில் மூலம் அவர்களை காத்துள்ளார் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. நாம் அவர்களின் நிலைக்காக மனம் வருந்த வேண்டும். இது தான் இரக்கத்தின் அன்பளிப்பு -- இயேசுவோடு நாமும் சேர்ந்து அவர்களுக்காக கவலை படுவோம். அவர்களின் ஆன்மாக்களுக்காக வருந்துவோம். -- இது தான் மிக பெரிய இரக்கத்தின் அன்பளிப்பாகும்.
ஒருவர் அவரின் உள்ளே , ஆன்மாவை வீணாகி கொண்டிருக்கும்போது, அவர்கள் மேல் நாம் இரக்கம் கொள்ளாமல் இருந்தால், நாம் பாவம் செய்கிறோம். இயேசு அவர்களுக்காக சிலுவையில் என்ன செய்தார் என்பதை நாம் நிராகரிக்கிறோம். அதனால், நம் ஆன்மாவையும் நாம் பாதிக்கிறோம்.
உங்களுக்கு எதிரான பாவம் செய்பவர்கள், இயேசு இன்றைய உவமையில் சொல்வது போல அத்தி மரத்தை போன்றவர்கள். அவர்களை உங்களால் மாற்ற முடியும் என்றால், அதனை செய்ய வேண்டும், இயேசு விரும்புகிறார். அன்பினாலும், நற்செய்தியின் உண்மையை அவர்களுக்கு எடுத்து சொல்லி , நம் வாழ்க்கை முறையிலும் காட்டும் பொழுது அவர்கள் இயேசுவிடம் திரும்ப வாய்ப்பிருக்கிறது. இயேசு மேலும், உங்கள் மூலம் அவர்களுக்கு அழைப்பை விடுத்து, சரியான பாதைக்கு செல்ல சொல்கிறார்.
மேலும் கவனமாக கொள்ளுங்கள், இயேசு அந்த மரகிளைகளை, நோயுற்றவர்களை, அப்புரபடுத்துங்கள். மேலும், நன்றாக நினைவில் கொள்ளுங்கள், நாம் செய்ய வேண்டிய அனைத்தும் செய்த பின்பு தான் , அந்த மரத்தை வெட்டி எறிய வேண்டும். சாத்தானின் வேலை செய்பவர்கள், மாற விரும்பவில்லை என்றால், நாம் அந்த தோட்டத்தை காக்க அந்த மரத்தை வெட்ட வேண்டியது தான்,   அதன் அர்த்தம் என்ன என்றால், அவர்களை விட்டு வெளியே வரவேண்டும். அவர்கள் பாவத்தினால், அவர்கள் அடைய வேண்டிய தண்டைனையை பெறட்டும் என்றும் விட்டு விட்டு நாம் விலகி செல்வது. இதுவும், அன்பினால் தான், வருகிறது., அந்த மரம் கீழே விழுந்து, மண்ணை உரமாக்கி புதிய வளர்ச்சிக்காக உதவி புரிகிறது.

© 2019 by Terry A. Modica


Friday, March 15, 2019

மார்ச் 17 2019 ஞாயிறு நற்செய்தி மறையுரை


மார்ச் 17 2019  ஞாயிறு நற்செய்தி மறையுரை
தவக்காலத்தின்  3ம் ஞாயிறு

Genesis 15:5-12, 17-18
Ps 27:1, 7-9, 13-14
Philippians 3:17--4:1
Luke 9:28b-36

லூக்கா நற்செய்தி
இயேசு தோற்றம் மாறுதல்
(மத் 17:1-8; மாற் 9:2-8)
28இவற்றையெல்லாம் சொல்லி ஏறக்குறைய எட்டுநாள்கள் ஆனபிறகு இயேசு பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் கூட்டிக்கொண்டு இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலைமீது ஏறினார். 29அவர் வேண்டிக்கொண்டிருந்தபோது அவரது முகத்தோற்றம் மாறியது; அவருடைய ஆடையும் வெண்மையாய் மின்னியது. 30மோசே, எலியா என்னும் இருவர் அவரோடு பேசிக் கொண்டிருந்தனர். 31மாட்சியுடன் தோன்றிய அவர்கள் எருசலேமில் நிறைவேறவிருந்த அவருடைய இறப்பைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
32பேதுருவும் அவரோடு இருந்தவர்களும் தூக்கக் கலக்கமாய் இருந்தார்கள். அவர்கள் விழித்தபோது மாட்சியோடு இலங்கிய அவரையும் அவரோடு நின்ற இருவரையும் கண்டார்கள். 33அவ்விருவரும் அவரை விட்டுப் பிரிந்து சென்றபோது, பேதுரு இயேசுவை நோக்கி, “ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம்என்று தாம் சொல்வது இன்னதென்று தெரியாமலே சொன்னார்.
34இவற்றை அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போது ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட்டது. அம்மேகம் அவர்களைக் சூழ்ந்தபோது அவர்கள் அஞ்சினார்கள். 35அந்த மேகத்தினின்று, “இவரே என் மைந்தர்; நான் தேர்ந்து கொண்டவர் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள்என்று ஒரு குரல் ஒலித்தது.
36அந்தக் குரல் கேட்டபொழுது இயேசு மட்டும் இருந்தார். தாங்கள் கண்டவற்றில் எதையும் அவர்கள் அந்நாள்களில் யாருக்கும் சொல்லாமல் அமைதி காத்தார்கள்.
(thanks  to  www.arulvakku.com)

இருளை அகற்றும் ஒளி

http://www.gnm-media.org/luke-9-light-in-our-darkness/
இன்றைய நற்செய்தியில் இயேசு புதிய ஒளி வீசும் வெண்மையுடன் வெளிபடுத்தியதை பார்க்கறோம், அது தான் அவரின் உண்மையான தோற்றம். மேலும், தந்தை கடவுள் , “இவரே என் மைந்தர்; நான் தேர்ந்து கொண்டவர் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள், சொல்வதை பார்க்கிறோம். நாம் ஒவ்வொரு முறையும் இயேசுவை அவரின் வார்த்தைகளை கேட்கும் பொழுதும்,  மேலும் பரிசுத்த ஆவியின் ஆற்றலை பெற்று  நாம் கிறிஸ்துவை முழுதுமாய் அனுபவிப்போம்.
இயேசுவின் வார்த்தைகளை கேட்கும் போது, இதுவரை யாருமே பார்க்காத, புதிதாக உருவாக்கப்பட்ட அந்த வெளிச்சத்தை, நாம் பெற்று  , நம்மில் இன்னும் கொஞ்சம் இருக்கும் இருளும் ஓடி போய் விடும். அதன் பிறகு, நம்மை சுற்றி உள்ளவர்களும் அந்த ஒளியை பெறுவார்கள். நம் செயல்கள் மூலம், நமது இறக்கம் மூலம் , மன்னிப்பின் மூலம் அவர்கள் நம்மிடமிருந்து அந்த வெளிச்சத்தை பெறுவார்கள். இது தான் நம் மூலம் மனம் மாற்றுதல்!
தவக்காலத்தில் தான் கிறிஸ்து நமக்கு தேவை என அதிகமாக ஒருமுகபடுத்தி, நம் இருளில் அவரின் ஒளி பட வாய்ப்பு கொடுக்கும் காலம். நம் மனந்திருந்தி அவரின் ஒளியில் நம்மை நுழைத்து கொண்டால், நாம் கிறிஸ்துவின் ஒளி மாற்றத்தை நம்மில் பரவ அனுமதித்தால், (நம் மனமாற்றம் மூலம்), மன்னிப்பை தேடி பெறுதல், பரிசுத்த ஆவியை நாடி நம் மனமாற்றம் பெற சக்தியை கொடுக்க வேண்டுவோம். அதன் மூலம் நாமும் கிறிஸ்துவை போல மாறுவோம், அவரோடு இணைந்து இன்னும் பிரகாசமாக ஒளிர்வோம். மேலும், அவரின் இறைபணியில் இந்த உலகை மீட்க நாமும் இணைகிறோம். இந்த இறைபணியில் சில கஷ்டங்கள் இருந்தாலும், பெரிய வெள்ளியின் வலிக்கு பிறகு, ஈஸ்டர் எப்பொழுதுமே இருக்கும்.
சோதனையிலும் தியாகத்திலும் -- நமது சிலுவைகள் -- நமது பரிசுத்தம் இந்த உலகை மாற்றுகிறது. இயேசுவை கல்வாரி வரை பின் தொடர தைரியமாக இருகிறீர்களா? நமக்கு ஏற்படும் சோதனைகள் , அவரின் இரத்தம் மீண்டும் இங்கே சிந்துகிறது. நமது வலிகள் இயேசுவின் வலிகள். நாம் ஏற்கனவே இயேசுவோடு சிலுவையில் இருக்கிறோம்.! பின் ஏன் நம்மை ஏமாத்தியவர்களையும், காலை வாரியவர்களையும் மன்னித்து, அவர்களின் நலனுக்காக, இயேசுவோடு நெருக்கமாக இருக்க முடியாது?
நம்மிடம் அன்பு பாராட்டாதவர்களிடம் அன்பு கொள்வோம், நம்மை அவமதிப்பவர்களை மன்னிப்போம் மேலும், சாத்தானை விரட்டி இறையரசை இங்கே தொடர செய்வோம். கிறிஸ்துவின் ஒளியை , இங்கே இருளில் இருப்பவர்களுக்கு வெளிப்படுத்துவோம்.
© 2019 by Terry A. Modica


Friday, March 1, 2019

மார்ச் 3 2019 ஞாயிறு நற்செய்தி மறையுரை


மார்ச்  3 2019 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 8ம் ஞாயிறு
Sirach 27:4-7
Ps 92:2-3,13-16
1 Corinthians 15:54-58
Luke 6:39-45
லூக்கா நற்செய்தி

தீர்ப்பிடுதல்
(
மத் 7:1-5)
37“பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்குள்ளாக மாட்டீர்கள். மற்றவர்களைக் கண்டனம் செய்யாதீர்கள்; அப்போதுதான் நீங்களும் கண்டனத்துக்கு ஆளாக மாட்டீர்கள். மன்னியுங்கள்; மன்னிப்புப் பெறுவீர்கள்.

38கொடுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்.
39மேலும் இயேசு அவர்களுக்கு உவமையாகக் கூறியது: 
பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவருக்கு வழிகாட்ட இயலுமா? இருவரும் குழியில் விழுவரல்லவா?

40சீடர் குருவைவிட மேலானவர் அல்ல. ஆனால் தேர்ச்சி பெற்ற எவரும் தம் குருவைப் போலிருப்பர்.
41“நீங்கள் உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பைக் கூர்ந்து கவனிப்பதேன்?

42உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையையே நீங்கள் பார்க்காமல் இருந்து கொண்டு உங்கள் சகோதரர் அல்லது சகோதரியிடம், ‘உம் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்கட்டுமா?’ என்று எப்படிக் கேட்க முடியும்? வெளி வேடக்காரரே, முதலில் உங்கள் கண்ணில் இருக்கும் மரக் கட்டையை எடுத்து எறியுங்கள். அதன்பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய்க் கண் தெரியும்.
மரமும் கனியும்
(
மத் 7:17-20; 12:34-35)
43“கெட்ட கனி தரும் நல்ல மரமுமில்லை; நல்ல கனி தரும் கெட்ட மரமுமில்லை.

44ஒவ்வொரு மரமும் அதனதன் கனியாலே அறியப்படும். ஏனென்றால் முட்செடிகளில் அத்திப் பழங்களைப் பறிப்பாருமில்லை; முட்புதர்களில் திராட்சைக் குலைகளை அறுத்துச் சேர்ப்பாருமில்லை.

45நல்லவர் தம் உள்ளமாகிய நல்ல கருவூலத்திலிருந்து நல்லவற்றை எடுத்துக் கொடுப்பர். தீயவரோ தீயதினின்று தீயவற்றை எடுத்துக் கொடுப்பர். உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்.
(thanks to www.arulvakku.com)
நமது வாழ்வை குழைக்கும் பொய்கள்
இன்றைய நற்செய்தியில் இயேசு சொல்லும் உவமை:
"
பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவருக்கு வழிகாட்ட இயலுமா? இருவரும் குழியில் விழுவரல்லவா?"
 இந்த உவமை மூலம் இயேசு சொல்ல வருவது, உண்மையின் ஒளியில் யாராலும் பார்க்க முடியவில்லை என்றால், அவர்கள் பாவத்தினால் மற்றும், உண்மையை அவர்கள் தவிர்த்திருக்கலாம். இது மாதிரியான நிலைமை மிகவும் ஆபத்தானது, பல விசயங்களை கடவுள் பார்ப்பது போல நாமும் பார்க்காத போது, நாம் தவறான முடிவுகள் பல எடுக்கிறோம். நாம் பல தவறுகளை செய்கிறோம். அதனால் நமக்கும் மற்றும் பலருக்கும் பல துன்பங்கள் நேருகிறது. நமது சோதனை நிகழ்வுகளில் நாம் கடவுளை விட்டு விலகி நிற்கும் போது, நாம் பாதுகாப்பாக உணர்கிறோம்.
ஒவ்வொருவரும் தன்னுடைய ஆன்மீக குருட்டு தனத்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள நான்கு பொய்கள் தான் நம்மை வாழ்வில் நிலை குழைய செய்கிறது.
1. உங்கள் மகிழ்ச்சி தான் உங்கள் வாழ்க்கையின் முக்கியமான இலக்கு: அதனை பெற
2. எப்பொழுதும் உங்களை முன்னிறுத்துங்கள்
3. உங்கள் உணர்வுகளை நம்புங்கள்
4. நீங்கள் கனவு கண்டால், உங்களுக்கு அது கிடைக்கும்
இந்த வழி எப்போதும் சரி பட்டு வராது. மகிழ்ச்சி என்பது ஒரு மாயை. மேலும் குறுகிய காலத்தை உடையது. அதனால் மக்கள் மகிழ்ச்சிக்காக இன்னும் அதிகமாக நேரத்தை செலவழிக்கிறார்கள். அதனால் இந்த பொய்களில் மாட்டி கொண்டு கஷ்டபடுகிறார்கள். மேலும் முயற்சி செய்கிறார்கள், அப்படியும் கிடைக்காவிட்டால், இன்னும் கோபம் ஏற்படுகிறது. அந்த கோபம் மற்றவர்கள் மேலும், அவர்களை பற்றி குறை சொல்கிறார்கள். இந்த கோபம் இன்னும் மோசமாகிறது. வன்முறை வந்து, இன்னும் நம் ஆண்மிக வாழ்வை குழைக்கிறது.
இயேசு வெளிப்படுத்தி சொன்ன சரியான வழி
1. மகிழ்ச்சி வெளியிலிருந்து வருவது, அதனை நம்மால் கட்டுபடுத்த முடியாது. ஆனால் சந்தோசம் என்பது  நம்மிலிருந்து உள்ளுள் எழுவது, மேலும் கடவுள் நம்மை அன்பு செய்கிறார் , நமக்காக தன மகனையே இந்த உலகிற்கு அனுப்பி சாத்தானை வெற்றி கொள்ள செய்து நம்மை மோட்சத்திற்கு அழைத்து செல்கிறார் என்று நாம் நம்பினால் இந்த சந்தோசம் பான் மடங்கு அதிகமாகும்.
2. உங்கள் வாழ்க்கையை மற்றவர்களுக்காக விட்டு கொடுக்கும் போது, சந்தோசத்தை முழுமையாக அனுபவிப்பீர்கள், இது தான் மிக பெரிய சந்தோசம், இதன் மூலம் நாம் கிறிஸ்துவோடு இணைந்து, நம்மை மோட்சத்திற்கு அழைத்து செல்கிறது.
3. நாம் இயற்கையாகவே மனிதனாக பாவம் செய்ய ஆசைபடுகிறோம். மேலும் நமது மூளை ஒரு வட்டத்திற்குள் தான் சிந்திக்கும். அதனால் நாம் பல விசயங்களை தவறாக புரிந்து கொள்கிறோம். உங்கள் புரிதலை மட்டுமே நம்பிவிடாதீர்கள். நமது எண்ணங்கள் அடிக்கடி மாறும். பரிசுத்த ஆவியின் ஆசிரை பெற்று கடவுளின் உதவியோடு ஒவ்வொரு விசயத்தையும் புரிந்து கொள்ளுங்கள். கடவுளை மட்டும் நம்புங்கள்.
4.கடவுள் உங்களை பற்றிய என்ன திட்டம் வைத்திருக்கிறார் என்று நீங்கள் அறிய, பயிற்சி எடுத்தல் வேண்டும். எந்த மாதிரியான திறமைகள், அறிவு, அனுபவம் தேவை என அறிந்து கடவுளின் திட்டத்தை அறிய முயற்சி செய்தல் வேண்டும். உங்களை படைக்கும் போது, எந்த திட்டத்திற்காக படைத்தார் என்று அறிந்து கொள்வோம். அந்த திட்டம் நிறைவேற நாம் கடுமையாக உழைக்கும் பொழுது, அதற்கு எதிரே வரும் தடைகளை உடைத்து, தொந்தரவுகளை களைந்து, அந்த கடுமையான உழைப்பில் , அதனால் நமக்கு கிடைக்கும் வாழ்வில் நாம் கடவுளை காண்போம்.
© 2019 by Terry A. Modica