Saturday, March 23, 2019

மார்ச் 24 2019 ஞாயிறு நற்செய்தி மறையுரை



தவக்காலத்தின் 3ம் ஞாயிறு
Exodus 3:1-8a, 13-15
Ps 103: 1-4, 6-8, 11
1 Corinthians 10:1-6, 10-12
Luke 13:1-9
லூக்கா நற்செய்தி

மனம் மாறாவிடில் அழிவு
1அவ்வேளையில் சிலர் இயேசுவிடம் வந்து, பலி செலுத்திக் கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றான் என்ற செய்தியை அறிவித்தனர்.

2அவர் அவர்களிடம் மறுமொழியாக
இக்கலிலேயருக்கு இவ்வாறு நிகழ்ந்ததால் இவர்கள் மற்றெல்லாக் கலிலேயரையும் விடப் பாவிகள் என நினைக்கிறீர்களா?

3அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அவ்வாறே அழிவீர்கள்.

4சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேரைக் கொன்றதே. அவர்கள் எருசலேமில் குடியிருந்த மற்ற எல்லாரையும்விடக் குற்றவாளிகள் என நினைக்கிறீர்களா?

5
அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அப்படியே அழிவீர்கள்
 என்றார்.
காய்க்காத அத்திமரம்
6மேலும், இயேசு இந்த உவமையைக் கூறினார்: 
ஒருவர் தம் திராட்சைத் தோட்டத்தில் அத்திமரம் ஒன்றை நட்டு வைத்திருந்தார். அவர் வந்து அதில் கனியைத் தேடியபோது எதையும் காணவில்லை.

7எனவே அவர் தோட்டத் தொழிலாளரிடம், ‘பாரும், மூன்று ஆண்டுகளாக இந்த அத்தி மரத்தில் கனியைத் தேடி வருகிறேன்; எதையும் காணவில்லை. ஆகவே இதை வெட்டிவிடும். இடத்தை ஏன் அடைத்துக்கொண்டிருக்க வேண்டும்?’ என்றார்.

8தொழிலாளர் மறுமொழியாக, ‘ஐயா, இந்த ஆண்டும் இதை விட்டுவையும்; நான் இதைச் சுற்றிலும் கொத்தி எருபோடுவேன்.

9அடுத்த ஆண்டு கனி கொடுத்தால் சரி; இல்லையானால் இதை வெட்டிவிடலாம்என்று அவரிடம் கூறினார்.
உடல் ஊனமுற்ற பெண் ஓய்வுநாளில் குணமடைதல்
10ஓய்வுநாளில் இயேசு தொழுகைக்கூடம் ஒன்றில் கற்பித்துக்கொண்டிருந்தார்.

11பதினெட்டு ஆண்டுகளாகத் தீய ஆவி பிடித்து உடல்நலம் குன்றிய பெண் ஒருவர் அங்கு இருந்தார். அவர் சிறிதும் நிமிர முடியாதவாறு கூன் விழுந்த நிலையில் இருந்தார்.

12இயேசு அவரைக் கண்டு அருகே கூப்பிட்டு
அம்மா, உமது நோயிலிருந்து நீர் விடுவிக்கப்பட்டுள்ளீர்
 என்று கூறி,

13தம் கைகளை அவர் மீது வைத்தார். உடனே அவர் நிமிர்ந்து கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்.
(Thanks to www.arulvakku.com)
இரக்கம்: தவறுகளில் ஈடுபடுபவர்களிடம் இறக்கம் எப்படி உதவி செய்கிறது

மற்றவர்களுக்கு வேதனை அளிப்பவர்கள், அவர்கள் மேல் வன்மம் கொண்டவர்கள், எப்பொழுது அநிதியுடன் இருப்பவர்களுக்கு, மிக பெரிய ஒரு அடி விழுந்து அவர்கள் துன்புறும் பொழுது நீங்கள் எப்படி நினைப்பீர்கள்? இயற்கையாகவே நீங்கள் சந்தோசபடலாம், ஏனெனில், நீதி அங்கே நிலை நாட்டப்பட்டுள்ளது என்று நாம் நினைக்கலாம்.
இயேசு இன்றைய நற்செய்தியில், "எல்லாவரையும் விட இவர்கள் பாவிகள்" என்று நாம் சொல்ல முடியாது என்று சொல்கிறார். இதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்கிறார். அவர்கள் மிக பெரிய பாவங்களை செய்தாலும் கூட. கிறிஸ்துவிற்கு பிடிக்காத செயல்கள் செய்தால் கூட, மற்றவர்களை விட பெரிய பாவங்கள் செய்தால் கூட நாம் அவர்களை பெரிய பாவி என்று சொல்லிவிட முடியாது.
மனிதன் கடவுளின் உருவத்தோடு ஒத்து படைக்கபட்டாலும், மிகவும் மோசமானவர்கள் கூட இறைவனின் உருவத்தை போல படைக்கபட்டிருக்கிறார்கள்.  யாரெல்லாம் இதற்கு எதிரான உருவத்தை காட்டுகிறார்களோ இயேசு கூட அவர்களிடம் அன்பு செலுத்துவதில்லை. அவர்களுக்காகவும் சேர்த்து தான் இயேசு மரணமடைந்து தியாகம் செய்தார். கடவுள் எப்படி அவர்களை படைத்தாரோ அதே உருவத்தோடு அவர்கள் நடந்து கொள்ளாதது மிக பெரிய சோகம் ஆகும். ஏனெனில் இது மற்றவர்களை பாதிக்கிறது. யாராவது அவர்களை மீண்டும் கிறிஸ்துவின் பின் செல்ல அழைக்கவில்லை என்றால், அவர்கள் வாழ்வு இன்னும் மிக பெரிய அழிவை கொண்டு செல்லும், அவர்களையும் கிறிஸ்து அன்பு செய்கிறார் என்று நாம் அறிவோம்.

யாருமே தவறான மனிதர்கள் கிடையாது. சாத்தானின் செயல்கள் செய்பவர்கள், கடவுளின் குழந்தைகளாக இருந்தும், அவர்களின் உண்மையான  அடையாளத்தை அவர்கள் நிராகரித்து விட்டார்கள். அவர்கள் சாத்தானின் செயலுக்கு அடிபணிந்துள்ளார்கள், ஏனெனில், அவர்களுக்கு இன்னும் நல்ல  வாழ்வை வாழலாம் என்று சாதத்தான் ஓதுகிறது.  சாத்தான் அவர்களை மயக்கி வைத்திருக்கிறது, பாவமில்லா இயேசு அவர்களை தன மீட்பில் மூலம் அவர்களை காத்துள்ளார் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. நாம் அவர்களின் நிலைக்காக மனம் வருந்த வேண்டும். இது தான் இரக்கத்தின் அன்பளிப்பு -- இயேசுவோடு நாமும் சேர்ந்து அவர்களுக்காக கவலை படுவோம். அவர்களின் ஆன்மாக்களுக்காக வருந்துவோம். -- இது தான் மிக பெரிய இரக்கத்தின் அன்பளிப்பாகும்.
ஒருவர் அவரின் உள்ளே , ஆன்மாவை வீணாகி கொண்டிருக்கும்போது, அவர்கள் மேல் நாம் இரக்கம் கொள்ளாமல் இருந்தால், நாம் பாவம் செய்கிறோம். இயேசு அவர்களுக்காக சிலுவையில் என்ன செய்தார் என்பதை நாம் நிராகரிக்கிறோம். அதனால், நம் ஆன்மாவையும் நாம் பாதிக்கிறோம்.
உங்களுக்கு எதிரான பாவம் செய்பவர்கள், இயேசு இன்றைய உவமையில் சொல்வது போல அத்தி மரத்தை போன்றவர்கள். அவர்களை உங்களால் மாற்ற முடியும் என்றால், அதனை செய்ய வேண்டும், இயேசு விரும்புகிறார். அன்பினாலும், நற்செய்தியின் உண்மையை அவர்களுக்கு எடுத்து சொல்லி , நம் வாழ்க்கை முறையிலும் காட்டும் பொழுது அவர்கள் இயேசுவிடம் திரும்ப வாய்ப்பிருக்கிறது. இயேசு மேலும், உங்கள் மூலம் அவர்களுக்கு அழைப்பை விடுத்து, சரியான பாதைக்கு செல்ல சொல்கிறார்.
மேலும் கவனமாக கொள்ளுங்கள், இயேசு அந்த மரகிளைகளை, நோயுற்றவர்களை, அப்புரபடுத்துங்கள். மேலும், நன்றாக நினைவில் கொள்ளுங்கள், நாம் செய்ய வேண்டிய அனைத்தும் செய்த பின்பு தான் , அந்த மரத்தை வெட்டி எறிய வேண்டும். சாத்தானின் வேலை செய்பவர்கள், மாற விரும்பவில்லை என்றால், நாம் அந்த தோட்டத்தை காக்க அந்த மரத்தை வெட்ட வேண்டியது தான்,   அதன் அர்த்தம் என்ன என்றால், அவர்களை விட்டு வெளியே வரவேண்டும். அவர்கள் பாவத்தினால், அவர்கள் அடைய வேண்டிய தண்டைனையை பெறட்டும் என்றும் விட்டு விட்டு நாம் விலகி செல்வது. இதுவும், அன்பினால் தான், வருகிறது., அந்த மரம் கீழே விழுந்து, மண்ணை உரமாக்கி புதிய வளர்ச்சிக்காக உதவி புரிகிறது.

© 2019 by Terry A. Modica


No comments: