மார்ச் 3 2019 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 8ம் ஞாயிறு
Sirach 27:4-7
Ps 92:2-3,13-16
1 Corinthians 15:54-58
Luke 6:39-45
Ps 92:2-3,13-16
1 Corinthians 15:54-58
Luke 6:39-45
லூக்கா நற்செய்தி
தீர்ப்பிடுதல்
(மத் 7:1-5)
(மத் 7:1-5)
37“பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்குள்ளாக மாட்டீர்கள். மற்றவர்களைக் கண்டனம் செய்யாதீர்கள்; அப்போதுதான் நீங்களும் கண்டனத்துக்கு ஆளாக மாட்டீர்கள். மன்னியுங்கள்; மன்னிப்புப் பெறுவீர்கள்.
38கொடுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்.”
39மேலும் இயேசு அவர்களுக்கு உவமையாகக் கூறியது:
“பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவருக்கு வழிகாட்ட இயலுமா? இருவரும் குழியில் விழுவரல்லவா?
✠
40சீடர் குருவைவிட மேலானவர் அல்ல. ஆனால் தேர்ச்சி பெற்ற எவரும் தம் குருவைப் போலிருப்பர்.✠
41“நீங்கள் உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பைக் கூர்ந்து கவனிப்பதேன்?
42உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையையே நீங்கள் பார்க்காமல் இருந்து கொண்டு உங்கள் சகோதரர் அல்லது சகோதரியிடம், ‘உம் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்கட்டுமா?’ என்று எப்படிக் கேட்க முடியும்? வெளி வேடக்காரரே, முதலில் உங்கள் கண்ணில் இருக்கும் மரக் கட்டையை எடுத்து எறியுங்கள். அதன்பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய்க் கண் தெரியும்.
மரமும் கனியும்
(மத் 7:17-20; 12:34-35)
(மத் 7:17-20; 12:34-35)
43“கெட்ட கனி தரும் நல்ல மரமுமில்லை; நல்ல கனி தரும் கெட்ட மரமுமில்லை.
44ஒவ்வொரு மரமும் அதனதன் கனியாலே அறியப்படும். ஏனென்றால் முட்செடிகளில் அத்திப் பழங்களைப் பறிப்பாருமில்லை; முட்புதர்களில் திராட்சைக் குலைகளை அறுத்துச் சேர்ப்பாருமில்லை.
45நல்லவர் தம் உள்ளமாகிய நல்ல கருவூலத்திலிருந்து நல்லவற்றை எடுத்துக் கொடுப்பர். தீயவரோ தீயதினின்று தீயவற்றை எடுத்துக் கொடுப்பர். உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்.
(thanks
to www.arulvakku.com)
நமது வாழ்வை குழைக்கும்
பொய்கள்
இன்றைய நற்செய்தியில்
இயேசு சொல்லும் உவமை:
"“பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவருக்கு வழிகாட்ட இயலுமா? இருவரும் குழியில் விழுவரல்லவா?"
"“பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவருக்கு வழிகாட்ட இயலுமா? இருவரும் குழியில் விழுவரல்லவா?"
இந்த உவமை மூலம் இயேசு
சொல்ல வருவது, உண்மையின் ஒளியில் யாராலும் பார்க்க முடியவில்லை என்றால், அவர்கள்
பாவத்தினால் மற்றும், உண்மையை அவர்கள் தவிர்த்திருக்கலாம். இது மாதிரியான நிலைமை
மிகவும் ஆபத்தானது, பல விசயங்களை கடவுள் பார்ப்பது போல நாமும் பார்க்காத போது, நாம்
தவறான முடிவுகள் பல எடுக்கிறோம். நாம் பல தவறுகளை செய்கிறோம். அதனால் நமக்கும்
மற்றும் பலருக்கும் பல துன்பங்கள் நேருகிறது. நமது சோதனை நிகழ்வுகளில் நாம் கடவுளை
விட்டு விலகி நிற்கும் போது, நாம் பாதுகாப்பாக உணர்கிறோம்.
ஒவ்வொருவரும் தன்னுடைய
ஆன்மீக குருட்டு தனத்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள நான்கு பொய்கள் தான் நம்மை
வாழ்வில் நிலை குழைய செய்கிறது.
1. உங்கள் மகிழ்ச்சி தான்
உங்கள் வாழ்க்கையின் முக்கியமான இலக்கு: அதனை பெற
2. எப்பொழுதும் உங்களை
முன்னிறுத்துங்கள்
3. உங்கள் உணர்வுகளை
நம்புங்கள்
4. நீங்கள்
கனவு கண்டால், உங்களுக்கு அது கிடைக்கும்
இந்த வழி எப்போதும் சரி
பட்டு வராது. மகிழ்ச்சி என்பது ஒரு மாயை. மேலும் குறுகிய காலத்தை உடையது. அதனால்
மக்கள் மகிழ்ச்சிக்காக இன்னும் அதிகமாக நேரத்தை செலவழிக்கிறார்கள். அதனால் இந்த
பொய்களில் மாட்டி கொண்டு கஷ்டபடுகிறார்கள். மேலும் முயற்சி செய்கிறார்கள்,
அப்படியும் கிடைக்காவிட்டால், இன்னும் கோபம் ஏற்படுகிறது. அந்த கோபம் மற்றவர்கள்
மேலும், அவர்களை பற்றி குறை சொல்கிறார்கள். இந்த கோபம் இன்னும் மோசமாகிறது.
வன்முறை வந்து, இன்னும் நம் ஆண்மிக வாழ்வை குழைக்கிறது.
இயேசு வெளிப்படுத்தி
சொன்ன சரியான வழி
1. மகிழ்ச்சி
வெளியிலிருந்து வருவது, அதனை நம்மால் கட்டுபடுத்த முடியாது. ஆனால் சந்தோசம் என்பது
நம்மிலிருந்து உள்ளுள் எழுவது, மேலும் கடவுள்
நம்மை அன்பு செய்கிறார் , நமக்காக தன மகனையே இந்த உலகிற்கு அனுப்பி சாத்தானை
வெற்றி கொள்ள செய்து நம்மை மோட்சத்திற்கு அழைத்து செல்கிறார் என்று நாம் நம்பினால்
இந்த சந்தோசம் பான் மடங்கு அதிகமாகும்.
2. உங்கள்
வாழ்க்கையை மற்றவர்களுக்காக விட்டு கொடுக்கும் போது, சந்தோசத்தை முழுமையாக அனுபவிப்பீர்கள்,
இது தான் மிக பெரிய சந்தோசம், இதன் மூலம் நாம் கிறிஸ்துவோடு இணைந்து, நம்மை
மோட்சத்திற்கு அழைத்து செல்கிறது.
3. நாம்
இயற்கையாகவே மனிதனாக பாவம் செய்ய ஆசைபடுகிறோம். மேலும் நமது மூளை ஒரு
வட்டத்திற்குள் தான் சிந்திக்கும். அதனால் நாம் பல விசயங்களை தவறாக புரிந்து
கொள்கிறோம். உங்கள் புரிதலை மட்டுமே நம்பிவிடாதீர்கள். நமது எண்ணங்கள் அடிக்கடி மாறும்.
பரிசுத்த ஆவியின் ஆசிரை பெற்று கடவுளின் உதவியோடு ஒவ்வொரு விசயத்தையும் புரிந்து
கொள்ளுங்கள். கடவுளை மட்டும் நம்புங்கள்.
4.கடவுள்
உங்களை பற்றிய என்ன திட்டம் வைத்திருக்கிறார் என்று நீங்கள் அறிய, பயிற்சி
எடுத்தல் வேண்டும். எந்த மாதிரியான திறமைகள், அறிவு, அனுபவம் தேவை என அறிந்து
கடவுளின் திட்டத்தை அறிய முயற்சி செய்தல் வேண்டும். உங்களை படைக்கும் போது, எந்த
திட்டத்திற்காக படைத்தார் என்று அறிந்து கொள்வோம். அந்த திட்டம் நிறைவேற நாம்
கடுமையாக உழைக்கும் பொழுது, அதற்கு எதிரே வரும் தடைகளை உடைத்து, தொந்தரவுகளை
களைந்து, அந்த கடுமையான உழைப்பில் , அதனால் நமக்கு கிடைக்கும் வாழ்வில் நாம்
கடவுளை காண்போம்.
© 2019 by Terry A. Modica
No comments:
Post a Comment