ஜுன் 2 2019 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டவரின்
வின்னேற்ற பெருவிழா
Acts 1:1-11
Ps 47:2-3, 6-9
Ephesians 1:17-23
Luke 24:46-53
Ps 47:2-3, 6-9
Ephesians 1:17-23
Luke 24:46-53
லூக்கா நற்செய்தி
46அவர் அவர்களிடம்,
“மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்றும்,
47‘பாவமன்னிப்புப் பெற மனம் மாறுங்கள்’ என எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்படவேண்டும் என்றும் எழுதியுள்ளது.
48இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்.
49
இதோ, என் தந்தை வாக்களித்த வல்லமையை நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்கள் உன்னதத்திலிருந்து வரும் அவ்வல்லமையால் ஆட்கொள்ளப்படும்வரை இந்நகரத்திலேயே இருங்கள்”
என்றார்.✠
இயேசு விண்ணேற்றம் அடைதல்
(மாற் 16:19-20; திப 1:9-11)
(மாற் 16:19-20; திப 1:9-11)
50பின்பு இயேசு பெத்தானியா வரை அவர்களை அழைத்துச் சென்று தம் கைகளை உயர்த்தி அவர்களுக்கு ஆசி வழங்கினார்.
51அவர்களுக்கு ஆசி வழங்கிக்கொண்டிருந்தபோதே அவர் அவர்களிடமிருந்து பிரிந்து விண்ணேற்றம் அடைந்தார்.
52அவர்கள் அவரை வணங்கிவிட்டுப் பெரு மகிழ்ச்சியோடு எருசலேம் திரும்பிச் சென்றார்கள்.
53அவர்கள் கோவிலில் எப்போதும் கடவுளைப் போற்றியவாறு இருந்தார்கள்.
(thanks to www.arulvakku.com)
இயேசு ஏன் விண்ணேற்றம்
அடைந்தார்?
இயேசு
உயிர்த்தேழுந்ததும், அவர் மீண்டும் வந்து, அவர் இறைபணியை தொடர்ந்தால், எத்தனை பேர்
மனம் திருந்தி இருப்பார்கள் என கற்பனை செய்து பாருங்கள். அவர் மரணத்தை நேராக
பார்த்த பரிசேயர்கள் கூட இயேசுவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு
இருப்பார்கள்.
எனினும், இந்த உலகை மீட்க
கடவுளின் திட்டம் இன்னும் மிக பெரியதாக இருந்தது, இயேசு இந்த உலகில் இருந்த
பொழுது, அவர் மனிதனாகவே இருந்தார், தன்னை திவ்ய நற்கருணையில் சீடர்களுக்கு கொடுத்த
பின்பு, இந்த அன்பளிப்பை உண்மையாக ஏற்று கொண்ட சீடர்கள் அனைவரும் மனித இயேசுவாக
மாறுகிறார்கள்.அவரோடு நாம் அனைவரும் இணைகிறோம்.அவரின் இறைபணியில் இணைகிறோம்.
இன்றைய நற்செய்தியில்
பார்க்கிறோம், இயேசு விண்ணகத்திற்கு செல்லும் முன்பு, இயேசு சீடர்கள் அனைவரையும்
ஆசிர்வதித்தார் - உங்களையும் சேர்த்து தான் -- இறைபணியை தொடர நீங்கள் அனைவரும்
அழைக்கபடுகிறீர்கள். இந்த அதிகாரம்
வழங்குதல், ஒவ்வொரு திருப்பலியில் இறுதியாக நிறைவேற்றபடுகிறது. இயேசு குருவானவர்
மூலமாக, அனைவரும் அன்பு செய்து, இந்த உலகத்தில் மாறுதலை கொண்டு வர நமது கடவுள்
தந்தை கொடுக்கிறார்.
மனிதர்களாக, இந்த உலகை
மாற்ற நாம் முழு தகுதியில்லாமல் இருக்கிறோம். அதனால், இயேசு நமக்கு பரிசுத்த ஆவியை
நமக்கு கொடுக்கிறார். நமது ஆவியை பரிசுத்த ஆவியோடு இணைத்து, கடவுள் மேல் நம்பிக்கை
கொண்டு, ஒவ்வொரு செயலையும் செய்ய வேண்டும். நமக்கு தகுதி இருக்கிறதா இல்லையா
என்பதே ஒரு கேள்வியாக இருக்க கூடாது, நாம் எவ்வளவு விருப்பத்தோடு இறை பணி செய்ய
ஆயத்தமாக இருக்கிறோம் என்பது தான் முக்கியம். நமது நேரத்தை ஒதுக்கி , முயற்சி
செய்து, நாம் கிறிஸ்துவின் கைகள் ஆகவும், கால்கள் ஆகவும், அவரின் குரலாக இந்த
உலகில் இருப்பிர்களா?
இயேசு விண்ணகம் சென்று
விட்டதால், நாம் அவரின் கைகளாக இருக்க வேண்டும், அவரின் குரலாக இந்த உலகில் இருக்க
வேண்டும்.
இந்த உலகத்தில் சாத்தான்
இருப்பதால், நீங்கள் சந்தோசமாக இல்லையா? கடவுள் இது மாதிரியான சூழ்நிலைகளுக்கு மிக
பெரிய திட்டம் வைத்திருக்கிறார்.
உங்களுக்கு எதிரான
அநிதியை நினைத்து வருந்துகிறிர்களா? தொலைகாட்சியில் நடைபெறும் ஒழுக்க கேட்டை
நினைத்து வருந்துகிறீர்களா உங்கள் வேலையிடத்தில் அநீதியை நினைத்து வருத்தபடுகிறீர்களா?
அல்லது உங்கள் பங்கில் உள்ள பிரிவுகளை
நினைத்தோ, உங்கள் தலைவர்களின் கீழ் தரமான நடவடிக்கைகள், உங்களை வருந்த செய்கிறதா?
உங்களை விட இந்த சாத்தானின் செயல்களை கண்டு இயேசு அதிகம் வருந்துகிறார்.
அதற்கெல்லாம் திட்டம் வைத்திருக்கிறார். அவரோடு இணைந்து, அதற்கெல்லாம் என்ன திட்டம் நீங்கள்
செய்ய விரும்புகிறீர்கள். உங்கள் மூலம் அவர் என்ன செய்ய முடியும்?
இயேசு விண்ணகம் சென்றதை
அடுத்து, பரிசுத்த ஆவியை நமக்கு அனுப்பினார், கடவுள் இந்த உலகை நம் மூலம் இறைபணி
செய்ய பணிக்கிறார். முதலில் நம் வீட்டில், மேலும் அதே அன்பை, நம் பங்கிற்கும்,
இந்த உலகிற்கும் கடவுளின் அன்பை நாம் எடுத்து செல்ல வேண்டும்.
© 2019
by Terry A. Modica