Friday, May 17, 2019

மே 19 2019 ஞாயிறு நற்செய்தி மறையுரை


மே  19 2019 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஈஸ்டர் காலத்தின் 5ம் ஞாயிறு
Ps 145:8-13
Revelation 21:1-5a
John 13:31-35
யோவான் நற்செய்தி

புதிய கட்டளை
31அவன் வெளியே போனபின் இயேசு
இப்போது மானிடமகன் மாட்சி பெற்றுள்ளார். அவர் வழியாகக் கடவுளும் மாட்சிபெற்றுள்ளார்.

32கடவுள் அவர் வழியாக மாட்சி பெற்றாரானால் கடவுளும் தம் வழியாய் அவரை மாட்சிப்படுத்துவார்; அதையும் உடனே செய்வார்.

33பிள்ளைகளே, இன்னும் சிறிது காலமே உங்களோடு இருப்பேன். நீங்கள் என்னைத் தேடுவீர்கள். ஆனால் நான் போகும் இடத்திற்கு உங்களால் வர இயலாது. இதையே யூதர்களுக்குச் சொன்னேன்; இப்போது உங்களுக்கும் சொல்கிறேன்.

34ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்.

35
நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்
 என்றார்.

மாட்சிமை மிக்க இறைபணி
நீங்கள் இறக்க போகும் தருணத்தை நீங்கள் தெரிந்து கொண்டால்,உங்கள் குடும்பத்தினருக்கு என்ன ஞானத்தை கொடுப்பீர்கள்? அவர்களுக்கு மிகவும் முக்கிய தேவையானது எது ?
இன்றைய ஞாயிறு நற்செய்தியில், இயேசுவிற்கு அவரின் நேரம் குறைவானது என தெரியும். முதல் வார்த்தை அந்த சீடர்களிடம் தந்தை கடவுளை புகழ்ந்து பேசுகிறார். அதே நேரத்தில், தானும் தந்தையே ஒன்று எனவும் சொல்கிறார். மேலும் அவர் தந்தையை போல "பிள்ளைகளே" என சொல்கிறார். இதன் மூலம் அவர் தந்தையுள்ளும், தந்தை இவருள்ளும் இருக்கிறார் என்பதை நமக்கு சொல்கிறார். மொத்தமாக இந்த வார்த்தைகள் நமக்கு குழப்பத்தை கொடுப்பது போல இருக்கிறது. மேலும் இதனை பணிவுடன் இயேசு செய்தார். அவர் இப்படி கூட சொல்லியிருக்கலாம். "எல்லோரும் கவனமாக கேட்டு கொள்ளுங்கள், நான் தெய்வம். கடவுள். என்னை ஆராதியுங்கள்" என்றும் சொல்லலாம். ஆனால், அவர் கடவுளின் மாட்சிமையை பெரிது படுத்தினார்.
கடவுளின் பிரசன்னத்தை, ஒளிரும் வெளிச்சம் பரவும் , எப்படி, அவரின் அன்பு, அவரின் மகிழ்ச்சி, அவரின் பரிசுத்தம், அவரின் அமைதி, அவரின் ஞானம், அவரின் புத்திசாலித்தனம், மேலும் இன்னும் பலவும், அவரின் மாட்சியில் குளிக்க விரும்பும் அனைவருக்கும் கொடுபார். நாம் கடவுளை மாட்சிபடுத்த, அவரின் மாட்சிமை நம் மூலம் வெளிப்பட்டு மீண்டும் கடவுளுக்கே திரும்பும். இதில் எத்தனை அருள் உங்கள் வாழ்வில் ஒளிர்கிறது?
தந்தை கடவுள் மற்றும் மகனிடையே உள்ள உறவை பற்றி பேசிய பின்பு, இயேசு இந்த உலகத்திற்கே தேவையான, மிகவும் முக்கியமான, விஷயத்தை நமக்கு சொல்கிறார். இயேசுவையும், கடவுளின் மாட்சிமையை நெருங்கி இணைய நாம் ஒருவருக்கு ஒருவர் அன்பு செய்ய வேண்டும் என்று சொல்கிறார்.
தன்னலமின்றி, எப்பொழுது அன்பு மற்றவருக்கு கொடுக்கபடுகிறதோ, அப்பொழுது தான் அது உண்மையான அன்பாக இருக்கும். இயேசு தன சுய நலமின்றி, தன்னையே மரணத்திற்கு முழுமையாக கொடுத்தார். குருக்களோ, அல்லது, சீடர்களோ, அல்லது இயேசுவை பின் செல்பவர்கள், அனைவரும், முழுமையாக அன்புடன் அவரவர் இறைபணி செய்ய முடியும். அன்பில்லையெனில் அது முழுமையாகாது.
கடவுளின் மாட்சிமை என்பது, முழுமையான அன்பை, அதுவும், தன்னலமின்றி கொடுப்பது ஆகும். திருவெளிப்பாடு வாசகத்தில், "இதோ! நான் அனைத்தையும் புதியது ஆக்குகிறேன்" என்று இயேசுவின் ஈஸ்டர் காலத்தை பற்றிய வாசகமாக இருக்கிறது, ஆனால், நற்செய்தி வாசகமோ கிறிஸ்துவின் பாடுகளை பற்றி பேசுகிறது. ஈஸ்டர் காலத்தில் நாம் இருக்கும் பொழுது ஏன் இந்த நற்செய்தி வாசகம். ஏனெனில் இயேசு இன்னும் பாடுகளுக்கும், ஏமாற்றத்திற்கும், மரணத்திற்கும் தயாராகி கொண்டிருக்கிறார். ஏன்?
இன்றைய நற்செய்தியில், இயேசு அதே இறைபணியை கடவுளின் மாட்சிமையை எல்லோருக்கும் பகிர நம்மை அழைக்கிறார். இயேசு ஆரம்பித்த இறைபணியை, நாம் தொடர்ந்து செய்திட விரும்புகிறார். தியாகத்தோடு, ஒருவரை ஒருவர் அன்பு செய்து, இயேசு தான் உண்மையானவர் , அவர் உண்மையாகவே உயிர்த்தெழுந்து , நம்மோடு இன்னும் வாழ்கிறார் என்று எடுத்துரைப்போம்.
© 2019 by Terry A. Modica


No comments: