Friday, May 10, 2019

மே 12 2019 ஞாயிறு நற்செய்தி மறையுரை


மே 12 2019 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஈஸ்டர் காலத்தின் 4ம் ஞாயிறு
Acts 13:14, 43-52
Ps 100:1-3, 5
Revelation 7:9, 14b-17
John 10:27-30

யோவான் நற்செய்தி

27என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன.28நான் அவற்றிற்கு நிலைவாழ்வை அளிக்கிறேன். அவை என்றுமே அழியா. அவற்றை எனது கையிலிருந்து யாரும் பறித்துக் கொள்ளமாட்டார்.
29அவற்றை எனக்கு அளித்த என் தந்தை அனைவரையும்விடப் பெரியவர். அவற்றை என் தந்தையின் கையிலிருந்து யாரும் பறித்துக்கொள்ள இயலாது.⁕✠30 நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்
 என்றார்.
(thanks to www.arulvakku.com)
கண் மூடி கொண்டு இயேசுவை நம்புங்கள்
இன்றைய ஞாயிறின் நற்செய்தி மிகவும் சிறியது, மேலும், ஒரே குறிப்பை நமக்கு உணர்த்துகிறது. இயேசு தான் நம் ஒரே நல்ல மேய்ப்பர், அவர் ஒருவரை தான் நாம் பின்பற்ற வேண்டும், அந்த ஒருவரை தான், கண் மூடிகொண்டு நம்பவேண்டும்.
நம் வாழ்வில் நம் மேல் அக்கறை கொண்டவர்கள், நல்லாயனாக இருக்கலாம். ஆனால் அவர்களை அப்படியே நாம் நம்ப வேண்டியதில்லை. அவர்களில் மிக சிறந்த ஒருவரை கூட அப்படியே நாம் நம்ப வேண்டியதில்லை. ஆயர்கள், பங்கு குருக்கள், கம்பெனி முதலாளிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், இன்னும் பலர்,  இருக்கலாம், அவர்கள் மேல் நாம் மரியாதை கொண்டுள்ளோம். ஆனால், எல்லோருமே பாவம் செய்கிறவர்கள் தான், அவர்கள் பொறுப்பில் இருக்கும் வேளைகளில் பல நேரங்களில் சரியான புரிதல் இல்லாமல் இருக்கிறார்கள். நாம் பரிசுத்த ஆவியின் துனையை வேண்டி, ஒவ்வொரு விசயத்திலும் நாம் முடிவெடுக்க வேண்டும். ஆட்டு மந்தையை போல தந்தை கடவுள் வருத்தப்படும்படி நாம் எந்த முடிவும் எடுக்க கூடாது.
இயேசுவை மட்டும் தான் , நாம் கண்மூடி தனமாக நம்பலாம். இயேசு மட்டுமே எல்லாவற்றிலும் முழுமையானவர். அவருக்கு எல்லாம் தெரியும். அனைத்தையும் புரிந்து கொள்பவர். மேலும், பாவம் ஏதும் செய்யாதவர். இயேசுவால் மட்டுமே சரியான முடிவை எடுக்க முடியும். எல்லா நேரங்களிலும், எல்லா சூழ் நிலைகளிலும் எடுப்பவர். இயேசு மட்டுமே எலோருக்கும் பயன் தர கூடிய நல்ல முடிவெடுப்பவர். இயேசுவால் மட்டுமே, நம்மை பாவ குழியிலிருந்து மோட்சத்திற்கு அழைத்து செல்பவர்,
நம் தவறுகளை பார்த்து சிரித்து கொண்டே இயேசு, அவரின் வழியில் நாம் விலகி செல்வதை பார்க்கிறார். ஏனெனில் நாம் அவர் மேல் உண்மையாகவே அன்பு வைத்திருக்கிறோம். மேலும், எது சரியோ அதை செய்ய நாம் விருப்பத்தில் இருக்கிறோம். என்பதையும் அவருக்கு தெரியும். மேலும், இயேசுவிற்கு புதிய திட்டத்தை நமக்கு கொடுக்க முடியும், அதன் மூலம், நம்மை நல் வழியில் அழைத்து செல்ல முடியும். கிறிஸ்து அவரின் பேரிரக்கத்தால், நம் கைகளை பிடித்து கொண்டிருக்கிறார், அதன் மூலம், கடவுளின் கைகள் விட்டு நாம் நழுவ விடாமல் பார்த்து கொள்கிறார்.
நாம் ஒருவர் மேல் , அவ நம்பிக்கை கொண்டால் -- நம் மேலும் கூட -- அப்படி அவநம்பிக்கை இருந்தாலும், இயேசு நம்மோடு இருக்கிறார் என்ற நம்பிக்கையில் இருப்போம். கண்டிப்பாக அவர்  நம்மை நல் வழியில் அழைத்து செல்வார். ஏனெனில், நாம் அவரை முழுமையாக அன்பு செய்கிறோம். எது சரியோ அதனை செய்ய தயாராய் இருக்கிறோம். நமது பாதுகாப்பை இயேசு உறுதி செய்கிறார், நம் குறைகளிலிருந்து நம்மை காப்பாற்றி , தவறுகளிலிருந்து நல்லதை கொண்டு வருபவர். நாம் நம் பாவங்களுக்காக மனம் வருந்தும் போது, நம்மை மோட்சத்திற்கு கண்டிப்பாக அழைத்து செல்லும், வழியை காட்டுபவர்.
நல்ல ஆடாக இருக்க, அவரின் வழிகாட்டுதலுக்கு செவி சாய்ப்போம்!
© 2019 by Terry A. Modica


No comments: