Saturday, June 8, 2019

ஜூன் 9 2019 ஞாயிறு நச்செய்தி மறையுரை


ஜூன்  9 2019 ஞாயிறு நச்செய்தி மறையுரை
பரிசுத்த ஆவி ஞாயிறு
Acts 2:1-11
Ps 104:1, 24, 29-31, 34
1 Cor 12:3b-7, 12-13 (or Rom 8:8-17)
John 20:19-23 (or John 14:15-16, 23b-26)
யோவான் நற்செய்தி

இயேசு சீடர்களுக்குத் தோன்றுதல்
(மத் 28:16-20; மாற் 16:14-18; லூக் 24:36-49)
19அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, 
“உங்களுக்கு அமைதி உரித்தாகுக!”
என்று வாழ்த்தினார்.
20இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள்.
21இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, 
“உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன்”
 என்றார்.✠

22இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, 
“தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

23
எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா”
 என்றார்.✠
(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியில் இயேசு, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக" என்று சீடர்களை நோக்கி கூறினார். முதலில் அவர்களுக்கு அமைதியை அன்பளிப்பாக கொடுத்தார், அதனால், அவர்கள் கவலையை விட்டு , இயேசுவின் மேல் அவர்கள் பார்வை திரும்பும் என்றும், இயேசுவை அவர்கள் உண்மையாக கண்டு கொள்ள வேண்டும் என்றும் அவர்களின் கருத்ததொற்றுமையை நோக்கத்தை இயேசுவின் பக்கம் திருப்பினார்.
அதன் பிறகு,  தந்தை அனுப்பிய அவரின் இறைப்பணியை தொடருங்கள்  என்று கூறினார். இந்த முறை, "அமைதி உங்களோடு இருப்பதாக" என்பதன் அர்த்தம் , பரிசு ஆவியின் துனையுடன், கடவுளின் இறைப்பணியை நாம் இந்த உலகில்  தொடர்ந்து செய்து வருவதின் பலனாக இருக்கும்.
இயேசு நம்மோடு இருக்கிறார் என்பதே நமக்கு அமைதியை கொடுக்கும்.  இயேசுவை பற்றி நாம் மற்றவர்களுக்கு சொல்லும்போது ஒரு சவால் தான், ஆனால், நமக்கு போதிய தகுதி இல்லை என்றும், அதிகமாக, நம்மை யாராவது, கேலி செய்வார்கள் என்றும், நம்மை நிராகரிப்பார்கள் என்றும் நாம் நினைக்கிறோம். அதனால் தான், இயேசு நமக்கு பரிசுத்த ஆவி கொடுத்தார்.
தந்தை கடவுள் நமக்கு என்ன இறைபணி செய்ய சொன்னாரோ, அதனை செய்ய தேவையானதை பரிசுத்த ஆவி நமக்கு தருகிறார். அதனால், நாம் எல்லா தகுயுடன் தான் இறைபணி செய்கிறோம், மேலும், நம்மை யாராவது நிராகரிக்கும் போது கடவுள் நம்மை தேற்றுவார்.

இயேசுவோடு இணைந்து, பரிசுத்த ஆவியின் துணையோடு நாம் பெரும் பரிசு, நமது உள்ளத்தின் அமைதி,  என்ன நடந்தாலும், அது நமது உள்  அமைதியை பாதிக்காது. நாம் பகிர்ந்து கொள்ளும் நற்செய்தியை அவர்கள் நிராகரித்தால், நம் உள் அமைதி ஒன்றும் மாறாது . பரிசுத்த ஆவி நம்மில் இருந்தால், நம் உள்ளம் என்றும் அமைதியாக இருக்கும்.  அமைதி பரிசுத்த ஆவியின் செயல்.
நற்செய்தியின் முடிவில், இயேசு அப்போஸ்தலர்களுக்கு (முதல் கத்தோலிக்க பாதிரியார்கள்) , பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் கொடுத்தார். அப்போஸ்தலர்கள், குருவானவர்கள்,  இயேசுவின் தெவீக ப்ரசன்னத்துடன் குருவானவர் பாவங்களை மன்னிக்கலாம்.  இயேசு, நமக்கு பாவ சங்கீர்த்தன திருச்சடங்கை நமக்கு கொடுத்து,  அந்த சடங்கின் மூலம் , இயேசு குருவின் உள்ளே பிரசன்னமாக இருக்கிறார்.
அதே மன்னிக்கும் பரிசுத்த ஆவியின் ஆற்றல், நமது பாவ வாழ்வில் நமக்கு அமைதியை கொடுக்கிறது. மன்னிப்பது மிகவும் கடினமான காரியமாக இருந்தால் கூட,  கிறிஸ்துவின் ஆவியோடு இணைந்து நம்மால் முடியும்.நம்மை கழ்டபடுத்தியவர்களை  கூட நாம் மன்னிக்க முடியும்.  அவர்கள் மனம் திரும்பினாலும், திரும்பாவிட்டாலும், நம்மில் அமைதி ஏற்படும்.
© 2019 by Terry A. Modica

No comments: