Saturday, June 22, 2019

கடவுளின் திரு உடல் திரு இரத்தம் பெருவிழா


கடவுளின் திரு உடல் திரு இரத்தம் பெருவிழா
ஜூன் 23 2019
Genesis 14:18-20
Ps 110:1-4
1 Corinthians 11:23-26
Luke 9:11b-17
லூக்கா நற்செய்தி
11அதை அறிந்து திரளான மக்கள் அவரைப் பின் தொடர்ந்தனர். அவர்களை அவர் வரவேற்று இறையாட்சியைப் பற்றி அவர்களோடு பேசி, குணமாக வேண்டியவர்களைக் குணப்படுத்தினார்.
12பொழுது சாயத் தொடங்கவே பன்னிருவரும் அவரிடம் வந்து, “இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே; சுற்றிலுமுள்ள ஊர்களுக்கும் பட்டிகளுக்கும் சென்று தங்கவும் உணவு வாங்கிக்கொள்ளவும் மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடும்என்றனர்.

13இயேசு அவர்களிடம்
நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்
 என்றார். அவர்கள், “எங்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களுமே உள்ளன. நாங்கள் போய் இத்தனை பேருக்கும் உணவு வாங்கி வந்தால்தான் முடியும்என்றார்கள்.
14ஏனெனில் ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்கள் அங்கு இருந்தனர். இயேசு அவருடைய சீடர்களை நோக்கி
இவர்களை ஐம்பது ஐம்பது பேராகப் பந்தியில் அமரச் செய்யுங்கள்
 என்றார்.

15அவர் சொன்னபடியே அனைவரையும் அவர்கள் பந்தியில் அமரச் செய்தார்கள்.

16அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து வானத்தை அண்ணாந்து பார்த்து, அவற்றின் மீது ஆசிகூறி, பிட்டு, மக்களுக்குப் பரிமாறுவதற்காகச் சீடரிடம் கொடுத்தார்.

17அனைவரும் வயிறார உண்டனர். எஞ்சிய துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர்.
ஐந்தாவது ரொட்டி
"அன்பானது ஐந்து ரொட்டி துண்டுகளும் மற்றும் இரண்டு மீன் துண்டுகளுக்கும் சமமானது . நீங்கள் அதனை மற்றவர்களுக்கும் கொடுக்கும் வரை அது சிறியதாகவே காணப்படும்." கலிலேயாவில் உள்ள கடல் அருகே உள்ள கோவிலில் இது எழுதப்பட்டிருக்கிறது. அங்கே தான், இயேசு இந்த சிறிய உணவை பல மடங்காக பெருக்கி அங்கு உள்ள அனைவருக்கும் பசியாற வழங்கினார்.

பலிபீடத்தின் முன்னே பைசைனைட் மொசைக் கல்லால் ரொட்டி துண்டுகளும், மீன்களும் 480 கி பி ஆண்டுகளுக்கு முன்பே செதுக்கப்பட்டு அங்கே இருக்கிறது. அந்த பாறையில் தான் இயேசு அந்த உணவினை ஆசிர்வதித்தார். இருந்தாலும், அந்த மொசைக்கிள் 4 ரொட்டி துண்டுகள் தான் இருக்கும். ஐந்து இல்லை ? ஏன் ? இயேசுவை பாருங்கள்.

அந்த ஐந்தாவது ரொட்டி துண்டு திவ்ய நற்கருணையில் இயேசு இருக்கிறார். ஒவ்வொரு திருப்பலியிலும் நம்மிடம் வருகிறார்.
அந்த திருத்தலத்தின் விளக்கங்கள் இந்த சுட்டியில் உள்ளது. http://gnm-holyland.org/church-of-the-multiplication-mosaic/
திவ்ய நற்கருணை  இயேசுவின் உண்மையான பிரசன்னத்தை விட மேலானது. கிறிஸ்துவின் திரு உடலோடு இணைந்த திருகுழுவுடன் சமுகத்துடன்  மேலானது. பல மடங்காக பெருக்கிய அதிசயத்திற்கு இணையானது. கடவுளிடமிருந்து நாம் ஏதாவது கிடைக்காமல் இருந்தால்,   நமக்கு தேவையான திறமை இல்லாமலிருந்தால், பரிசுத்த  ஆவியின் மூலம் இயேசு திவ்ய நற்கருணையில் நமக்கு கொடுக்கிறார். மேலும் திருப்பலியில் நாம் கலந்து கொள்ளும்பொழுது , நாம் இயேசுவிடம் நமக்கு தேவையானதை கொடுக்க சொல்லி கேட்கலாம்.
இந்த திவ்ய நற்கருணை தான் இந்த உலகில் கடவுளை இணைக்கும் ஒரே கருவியாகும். அதனுடைய முழு அன்பினை நாம் அனுபவிக்காமல் இருப்பதன் அர்த்தம், எப்படி திவ்ய நற்கருணையோடு நம்மை இணைப்பது என்று தெரியாமல் இருக்கிறோம். திவ்ய நற்கருணையை முழுதுமாக நாம் பெற, நாமே முழு திவ்ய நற்கருணையாக மாறவேண்டும். மற்றவர்களுக்காக தியாகம் செய்து வழங்கிய அன்பு தான் திவ்ய நற்கருணை. உங்களுக்கு தேவையான அன்பு கிடைக்கவில்லை என்றால், மற்றவர்களுக்கு உங்கள் அன்பை செலுத்துங்கள், மற்றவர்களுக்கு திவ்ய நற்கருணையாக இருங்கள்.
© 2019 by Terry A. Modica


No comments: