Friday, July 12, 2019

ஜூலை 14 2019 ஞாயிறு நற்செய்தி மறையுரை


ஜூலை 14 2019 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 15ம் ஞாயிறு
Deuteronomy 30:10-14
Ps 69:14,17,30-31,33-34,36-37 or Ps 19:8-11
Colossians 1:15-20
Luke 10:25-37
லூக்கா நற்செய்தி
நல்ல சமாரியர்
25திருச்சட்ட அறிஞர் ஒருவர் எழுந்து அவரைச் சோதிக்கும் நோக்குடன், “போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.

26அதற்கு இயேசு
திருச்சட்ட நூலில் என்ன எழுதியிருக்கிறது? அதில் நீர் என்ன வாசிக்கிறீர்?”
 என்று அவரிடம் கேட்டார்.

27அவர் மறுமொழியாக,
உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக. உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக
என்று எழுதியுள்ளதுஎன்றார்.

28இயேசு
சரியாய்ச் சொன்னீர்; அப்படியே செய்யும்; அப்பொழுது வாழ்வீர்
 என்றார்.
29அவர், தம்மை நேர்மையாளர் எனக் காட்ட விரும்பி, “எனக்கு அடுத்திருப்பவர் யார்?” என்று இயேசுவிடம் கேட்டார்.

30அதற்கு அவர் மறுமொழியாகக் கூறிய உவமை: 
ஒருவர் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகும்போது கள்வர் கையில் அகப்பட்டார். அவருடைய ஆடைகளை அவர்கள் உரிந்து கொண்டு, அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுப் போனார்கள்.

31குரு ஒருவர் தற்செயலாய் அவ்வழியே வந்தார். அவர் அவரைக் கண்டதும் மறு பக்கமாக விலகிச் சென்றார்.

32அவ்வாறே லேவியர் ஒருவரும் அவ்விடத்துக்கு வந்து அவரைக் கண்டதும் மறுபக்கமாய் விலகிச் சென்றார்.

33ஆனால் அவ்வழியே பயணம் செய்துகொண்டிருந்த சமாரியர் ஒருவர் அருகில் வந்து அவரைக் கண்டபோது அவர்மீது பரிவு கொண்டார்.

34அவர் அவரை அணுகி, காயங்களில் திராட்சை மதுவும் எண்ணெயும் வார்த்து, அவற்றைக் கட்டி, தாம் பயணம் செய்த விலங்கின் மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டுபோய் அவரைக் கவனித்துக் கொண்டார்.

35மறுநாள் இருதெனாரியத்தை எடுத்து, சாவடிப் பொறுப்பாளரிடம் கொடுத்து, ‘இவரைக் கவனித்துக் கொள்ளும்; இதற்கு மேல் செலவானால் நான் திரும்பி வரும்போது உமக்குத் தருவேன்என்றார்.
36
கள்வர் கையில் அகப்பட்டவருக்கு இம்மூவருள் எவர் அடுத்திருப்பவர் என உமக்குத் தோன்றுகிறது?”
 என்று இயேசு கேட்டார்.

37அதற்கு திருச்சட்ட அறிஞர், “அவருக்கு இரக்கம் காட்டியவரேஎன்றார். இயேசு
நீரும் போய் அப்படியே செய்யும்
என்று கூறினார்.
(thanks to www.arulvakku.com)

இன்றைய  நற்செய்தி: நாம் கடவுளை அன்பு  செய்தோமானால்,  இயற்கையாகவே   மற்றவர்கள் மேல் நாம் கொள்வோம் , அதனால் நமக்கு சில இழப்புகள்   ஏற்பட்டாலும்,நாம் அவர்கள் மேல் அக்கறை கொள்வோம் .

இந்த உலக கவலையை போக்க போதுமான அன்பு உள்ளது

அன்பிற்கு  எதிர்பதம் வெறுப்பு அல்ல. அது அக்கறையின்மை:  பிறரின் தேவையை நிராகரிப்பது,  அக்கறையற்று  இருப்பது, ஒருவரின் வேதனையை அறிந்தும், அதனை போக்க நம்மால் முடிந்தாலும், எதுவும் செய்யாமல் இருப்பது. இன்றைய ஞாயிறின் நற்செய்தியில், நல்ல சமாரியனின் உவமையை இயேசு நமக்கு தருகிறார். அதன் மூலம் முழு மனதுடன் நாம் கடவுளை அன்பு செய்ய வேண்டும் என்றும், முழு சக்தியுடனும், முழு உள்ளத்தோடும், கடவுளை அன்பு செய்யும் போது , கண்டிப்பாக மற்றவர்கள் மேல் அக்கறை கொள்வோம்.புதியவர்களுக்கு, நமக்கு தெரியாதவர்களுக்கும், யாருக்கு உதவக்கூடாதோ அவர்களுக்கும், நம் உதவியால், நமக்கு சில இழப்புகள் ஏற்பட்டாலும்,கண்டிப்பாக உதவி செய்வோம். அவர்கள் மேல் அக்கறை கொள்வோம்.
கிறிஸ்துவின் மூலம் நம்மால், இந்த உலகை மாற்ற முடிந்தாலும், பெரும்பாலான கிறிஸ்தவர்களாகிய நாம்  எந்த தியாகம் செய்யாமலும், மற்றவர்கள் மேல் அக்கறை கொள்ளாமல் இருப்பதாலும் தான், இந்த உலகில் அதிக பிரசினைகள் இங்கே இருந்து கொண்டு இருக்கிறது. நம் வேலை செய்யும் இடத்திலும்,  குடும்பத்திலும் ஏற்படும் பல பிரச்சினைகள் அகலாமல் இருக்க காரணமே நம் அருகில் உள்ள கிறிஸ்தவர்கள் யாரும் முழுமையான அன்பை கடவுள் மேல் கொள்ளாமல் ,மற்றவர்கள் மேல் அக்கறை கொள்வதில்லை. நாம் அனைவருமே முழு அக்கறை எப்போதும் கொள்வதில்லை.
நீங்கள் எந்த அளவிற்கு கடவுள் மேல் அன்பு வைத்துள்ளீர்கள்? நீங்கள் மற்றவர்களுக்காக எந்த அளவிற்கு தியாகம் செய்ய  தயாராய் இருப்பது தான் இதற்கான பதில் உள்ளது. இன்றைய உவமையின் மூலம் இயேசு கற்பித்த உண்மையான அன்பின் இலக்கணம் எது? இயேசுவின் வாழ்வும் , அவர் கூறிய இந்த உவமையும் தான் அன்பின் அடையாளம்.
நாம்  யாருமே  கடவுளை முழுமையாக  அன்பு செய்வதில்லை. உத்தரிக்கிற ஸ்தலத்தில் தான் நாம் முழு அன்பு  செய்யவில்லை  என்று உணர்ந்து , அதற்காக வருந்தி, பல துன்பங்கள் அடைந்து,  இன்னும் நம்மை ஆழ்ந்த அன்பில் ஆழ்த்தி முழுமையான அன்போடு கடவுளின் பரலோகத்தில் செல்வோம். அது வரை ஒவ்வொரு நாளும், நம் வாழ்வை மெருகேற்றி கொள்ள பல வாய்ப்புகள் வரும். (சிறு வலியோடு நாம் ஏற்று கொள்வோம்). ஒவ்வொரு நாளும் நாம் மற்றவர்களை அன்பு செய்ய நமக்கு பல சோதனை நிகழ்வுகள் நடைபெறும்.
தினமும் பரிசுத்த ஆவியிடம், (உங்கள் போதகர், உங்களுக்கு ஆற்றல் கொடுப்பவர், உங்கள் பரிசுத்தத்தின் உற்று ) நீங்களும் கிறிஸ்துவை போல மாற்ற வேண்டிக்கொள்ளுங்கள். கிறிஸ்து மற்றவர்களை எப்படி அன்பு செய்கிறாரோ அதே போல நீங்களும் அன்பு செய்யவேண்டும் என்று பரிசுத்த ஆவியிடம் வேண்டி கொள்ளுங்கள்.
இந்த ஆன்மிக பயிற்சியை தினமும் நாம்  செய்யும்பொழுது,நீங்கள்  புதிய சந்தோசத்தை பெறுவீர்கள், மேலும் மற்றவர்களை எப்படி அணுக வேண்டும், எப்படி  நடத்த வேண்டும் என்றும் நாம் அதிகம் அனுபவம் பெறுவோம். மேலும், கடவுள் மேல் இன்னும் அன்பு செலுத்துவோம். அதன் மூலம் இன்னும் கடவுளோடு நெருங்குவோம்.
© 2019 by Terry A. Modica



No comments: