Saturday, July 6, 2019

ஜூலை 7 2019 ஞாயிறு நற்செய்தி மறையுரை


இன்றைய ஜெபம்: ஒன்றிணைந்த இறப்பணிக்கு நிறைய அர்ச்சிக்கப்பட்ட அழைப்புகள் அதிகப்படவேண்டும் என வேண்டுவோம்.
ஜூலை 7 2019 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 14ம் ஞாயிறு
Isaiah 66:10-14c
Ps 66:1-7, 16, 20
Galatians 6:14-18
Luke 10:1-12, 17-20

லூக்கா நற்செய்தி

எழுபத்திரண்டு சீடர்களை அனுப்புதல்
1இதற்குப்பின்பு ஆண்டவர் வேறு எழுபத்திரண்டு பேரை நியமித்து, அவர்களைத் தாம் போகவிருந்த எல்லா ஊர்களுக்கும் இடங்களுக்கும் தமக்கு முன்னே இருவர் இருவராக அனுப்பினார்.

2அப்போது அவர் அவர்களை நோக்கிக் கூறியது: 
அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்.

3புறப்பட்டுப் போங்கள்; ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன்.

4பணப்பையோ வேறு பையோ மிதியடிகளோ எதுவும் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டாம்; வழியில் எவருக்கும் வணக்கம் செலுத்த வேண்டாம்.

5நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், ‘இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக!என முதலில் கூறுங்கள்.

6அமைதியை விரும்புபவர் அங்கு இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும்; இல்லாவிட்டால் அது உங்களிடமே திரும்பிவிடும்.

7அவர்களிடம் உள்ளதை நீங்கள் உண்டு குடித்து அந்த வீட்டிலேயே தங்கியிருங்கள். ஏனெனில் வேலையாளர் தம் கூலிக்கு உரிமை உடையவரே; வீடுவீடாய்ச் செல்ல வேண்டாம்.

8நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக்கொண்டால் உங்களுக்குப் பரிமாறுவதை உண்ணுங்கள்.

9அங்கு உடல் நலம் குன்றியோரைக் குணமாக்கி, இறையாட்சி அவர்களை நெருங்கி வந்துவிட்டது எனச் சொல்லுங்கள்.

10நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக் கொள்ளாவிட்டால் அதன் வீதிகளில் சென்று,

11‘எங்கள் கால்களில் ஒட்டியுள்ள உங்கள் ஊர்த் தூசியையும் உங்களுக்கு எதிராக உதறிவிடுகிறோம். ஆயினும் இறையாட்சி நெருங்கி வந்து விட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள்எனச் சொல்லுங்கள்.

12அந்த நாளில் அவ்வூர் பெறும் தண்டனை சோதோம் நகரினர் பெறும் தண்டனையை விட கடினமாகவே இருக்கும் என உங்களுக்குச் சொல்கிறேன்.
எழுபத்திரண்டு சீடர்களும் திரும்பிவருதல்
17பின்னர் எழுபத்திரண்டு பேரும் மகிழ்வுடன் திரும்பிவந்து, “ஆண்டவரே, உமது பெயரைச் சொன்னால் பேய்கள் கூட எங்களுக்கு அடிபணிகின்றனஎன்றனர்.

18அதற்கு அவர்
வானத்திலிருந்து சாத்தான் மின்னலைப் போல விழக் கண்டேன்.
19பாம்புகளையும் தேள்களையும் மிதிக்கவும், பகைவரின் வல்லமை அனைத்தையும் வெல்லவும் உங்களுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறேன். உங்களுக்கு எதுவுமே தீங்கு விளைவிக்காது.

20
ஆயினும் தீய ஆவிகள் உங்களுக்கு அடிபணிகின்றன என்பதுபற்றி மகிழவேண்டாம். மாறாக, உங்கள் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்பது பற்றியே மகிழுங்கள்
என்றார்.
(thanks to www.arulvakku.com)

இன்றைய ஞாயிறு நற்செய்தியில் , இயேசு அவருடைய சீடர்களை நோக்கி "
அறுவடை மிகுதி (கிறிஸ்த்துவுக்குள் மனம் மாற்றுதல்) ; வேலையாள்களோ (மனம் மாற்றுபவர்கள்) குறைவு."  ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்." மேலும் "உங்கள் வழியில் செல்லுங்கள்" என்று கூறி வழி அனுப்புகிறார்.

மனம் மாற்றுபவர்கள் என்று கத்தோலிக்க திருசபையில் நீங்கள் யாரை நினைக்கிறீர்கள்?  நம்மில் பலர்,  குருவானவர்களை நினைக்கிறோம். கண்டிப்பாக இன்னும் பல குருக்கள் உருவாக வேண்டும்.  மேலை நாடுகளில் வயதான பல குருக்களுக்கு  பதிலாக புதிய குருக்கள் வருவதில்லை.

இன்னும் நிறைய தேவ அழைப்புகள் நடைபெற, குருக்கள்  அதிகமாக   நீங்கள் தினமும் ஜெபம் செய்கிறீர்களா?  இதுவும் ஒரு இறைபணியாக நாம் செய்ய வேண்டும் என்று இயேசு சொல்கிறார். "உங்கள் வழியில் செல்லுங்கள்" என்று நம்மிடமும் இயேசு சொல்கிறார். உங்கள் திறமைகள், உங்களுக்கான தனி தகுதிகள் அனைத்தையும் அறுவடைக்காக உபயோகிங்கள் என்று இயேசு சொல்கிறார்.

இயேசு எப்பொழுதுமே ஒன்றிணைந்து செயல் ஆற்றிட விரும்புகிறார். நாம் எல்லோரும் இணைந்து இறைபணி செய்ய ஆரம்பிக்கும் பொழுது தான் திருசபைக்கு தேவையான வேலையாட்கள் கிடைப்பார்கள். -- குருவானவர்கள் ,   பொதுவானவர் - அனைவரும் இணைந்து, அவரவரின் திறமைகளை, தகுதிகளை இறைபனிக்காக தாழ்மையோடு கொடுக்கும் போது  ஒரே அணியின் உறுப்பினர்களாக நாம் செயல்படுவோம்.

போதுமான வேலையாட்கள் உண்டு என்ற நிலைக்கு வர,  "வேறு யாரவது பார்த்து கொள்வார்கள் " என்கிற மனப்பான்மையை விட்டு நாம் வெளியே வரவேண்டும். மேலும், எல்லாமே சரியாக செய்ய வேண்டும் என்கிற மனப்பாண்மையை விட்டு வெளியே வர வேண்டும். இதனை நான் செய்திருந்தால் இன்னும் நன்றாக செய்திருப்பேன் என்று சொல்வதும் கூட,  மற்றவர்களுக்கு உண்டான வாய்ப்பை தடுக்கிறோம்.

நம்மில் பலர் இன்னும் பலருக்கு "எப்படி செய்ய வேண்டும் " என நான் சொல்லி கொடுக்க வேண்டும் என நினைப்போம். அந்த மனப்பான்மையிலிருந்து நாம் வெளியே வரவேண்டும். இதனால், பல திறமையானவர்களை நாம் வெளியே தள்ளுகிறோம். இயேசு மேலும் சொல்கிறார். இறைபணியின் போது  நாம் வேறு எந்த பொருளையும் எடுத்து செல்ல கூடாது  என்று சொல்கிறார். அங்கே என்ன கொடுக்கப்படுகிறதோ  அதனை நாம்  ஏற்று கொள்ளவேண்டும் என்றும் சொல்கிறார்.

அர்ச்சிக்கபட்ட தேவ அழைப்பிற்க்கு நாம் வேண்டி மன்றாடும் போது ,  நாம் ஒன்றுபட்டு இணையும் இறைபணி தான் பதிலாகும். குருவானவர்களும், திருச்சபையில் உள்ளவர்களும்   நமக்கு முன்மாதிரியாக இருப்பவர்கள். அதன் மூலம் பலரை தேவ அழைத்தலுக்கு அழைக்கலாம். ஆனால், பொது நிலையினர் , குருக்களிடம் என்ன எதிர்பார்க்கிறோமோ   (பரிசுத்தமும், இறைபணியின் ஆர்வமும் ), நாமும் செய்ய வேண்டும். ஏன்  அப்படி நாம் எதிர்பார்க்கிறோம். ஏனெனில் அவர்கள், தன்னுடைய குடும்பத்தை விட்டு அவர்கள் இறைபனி செய்ய வந்துள்ளார்கள்.
© 2019 by Terry A. Modica


No comments: