Tuesday, April 10, 2007

மறையுரை april 11th 2007

Today's Readings:
Acts 3:1-10
Ps 105:1-4, 6-9
Luke 24:13-35
http://www.usccb.org/nab/041107.shtml

லூக்கா நற்செய்தி

அதிகாரம் 24

13 அதே நாளில் சீடர்களுள் இருவர் எருசலேமிலிருந்து ஏறத்தாழ பதினொரு கிலோ மீட்டர் தொலையிலுள்ள ஓர் ஊருக்குச் சென்று கொண்டிருந்தனர். அவ்வ+ரின் பெயர் எம்மாவு. 14 அவர்கள் இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் குறித்து ஒருவரோடு ஒருவர் உரையாடிக் கொண்டே சென்றார்கள். 15 இப்படி அவர்கள் உரையாடிக் கொண்டும் வினவிக்கொண்டும் சென்றபோது, இயேசு நெருங்கி வந்து அவர்களோடு நடந்து சென்றார். 16 ஆனால் அவர் யார் என்று அறிந்து உணர முடியாதவாறு அவர்கள் கண்கள் மறைக்கப்பட்டிருந்தன. 17 அவர் அவர்களை நோக்கி, ' வழிநெடுகிலும் நீங்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருப்பது என்ன? ' என்று கேட்டார். அவர்கள் முகவாட்டத்தோடு நின்றார்கள். 18 அவர்களுள் கிளயோப்பா என்னும் பெயருடைய ஒருவர் அவரிடம் மறுமொழியாக, ' எருசலேமில் தங்கியிருப்பவர்களுள் உமக்குமட்டும்தான் இந்நாள்களில் நிகழ்ந்தவை தெரியாதோ! ' என்றார். 19 அதற்கு அவர் அவர்களிடம், ' என்ன நிகழ்ந்தது? ' என்று கேட்டார். அவர்கள் அவரிடம், ' நாசரேத்து இயேசுவைப் பற்றியே தான் பேசுகின்றோம். அவர் கடவுளுக்கும் மக்கள் எல்லாருக்கும் முன்பாகச் சொல்லிலும் செயலிலும் வல்ல இறைவாக்கினராகத் திகழ்ந்தார். 20 அவர் இஸ்ரயேலை மீட்கப் போகிறார் என்று நாங்கள் எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் தலைமைக் குருக்களும் ஆட்சியாளர்களும் அவருக்கு மரணதண்டனை விதித்துச் சிலுவையில் அறைந்தார்கள். 21 இவையெல்லாம் நிகழ்ந்து இன்றோடு மூன்று நாள்கள் ஆகின்றன. 22 ஆனால் இன்று எங்களைச் சேர்ந்த பெண்களுள் சிலர் எங்களை மலைப்புக்குள்ளாக்கினர்; அவர்கள் விடியற்காலையில் கல்லறைக்குச் சென்றார்கள்; 23 அவருடைய உடலைக் காணாது திரும்பி வந்து, வானதூதர்களைக் கண்டதாகவும் இயேசு உயிரோடியிருக்கிறார் என்று அவர்கள் கூறியதாகவும் சொன்னார்கள். 24 எங்களோடு இருந்தவர்களுள் சிலரும் கல்லறைக்குச் சென்று, அப்பெண்கள் சொன்னவாறே இருக்கக் கண்டனர். ஆனால் அவர்கள் இயேசுவைக் காணவில்லை ' என்றார்கள். 25 இயேசு அவர்களை நோக்கி, ' அறிவிலிகளே! இறைவாக்கினர்கள் உரைத்த எல்லாவற்றையும் நம்ப இயலாத மந்த உள்ளத்தினரே! 26 மெசியா தாம் மாட்சி அடைவதற்குமுன் இத்துன்பங்களைப் பட வேண்டுமல்லவா! ' என்றார். 27 மேலும் மோசேமுதல் இறைவாக்கினர்வரை அனைவரின் நூல்களிலும் தம்மைக் குறித்து எழுதப்பட்ட யாவற்றையும் அவர் அவர்களுக்கு விளக்கினார். 28 அவர்கள் தாங்கள் போக வேண்டிய ஊரை நெருங்கி வந்தார்கள். அவரோ அதற்கு அப்பால் போகிறவர் போலக் காட்டிக் கொண்டார். 29 அவர்கள் அவரிடம், ' எங்களோடு தங்கும்; ஏனெனில் மாலை நேரம் ஆயிற்று; பொழுதும் போயிற்று ' என்று கூறிக் கட்டாயப்படுத்தி அவரை இணங்கவைத்தார்கள். அவர் அங்குத் தங்குமாறு அவர்களோடு சென்றார். 30 அவர்களோடு அவர் பந்தியில் அமர்ந்திருந்தபோது அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி, பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார். 31 அப்போது அவர்கள் கண்கள் திறந்தன. அவர்களும் அவரை அடையாளம் கண்டுகொண்டார்கள். உடனே அவர் அவர்களிடமிருந்து மறைந்துபோனார். 32 அப்போது, அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி, ' வழியிலே அவர் நம்மோடு பேசி, மறைநூலை விளக்கும்போது நம் உள்ளம் பற்றி எரியவில்லையா? ' என்று பேசிக் கொண்டார்கள். 33 அந்நேரமே அவர்கள் புறப்பட்டு எருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள். அங்கே பதினொருவரும் அவர்களோடு இருந்தவர்களும் குழுமியிருக்கக் கண்டார்கள். 34 அங்கிருந்தவர்கள், ' ஆண்டவர் உண்மையாகவே உயிருடன் எழுப்பப்பட்டார். அவர் சீமோனுக்குத் தோற்றம் அளித்துள்ளார் ' என்று சொன்னார்கள். 35 அவர்கள் வழியில் நிகழ்ந்தவற்றையும் அவர் அப்பத்தைப் பிட்டுக் கொடுக்கும்போது அவரைக் கண்டுணர்ந்துகொண்டதையும் அங்கிருந்தவர்களுக்கு எடுத்துரைத்தார்கள்.



மறையுரை :
அற்புதமான் வாழ்விற்கு அடியெடுத்து வை:

இன்றைய முதல் வாசகத்தில், பீட்டரும், அருளப்பரும் நமக்கு ஒரு எடுத்து காட்டு ஒன்று சொல்கிறார்கள். பரிசுத்த ஆவியின் முழு ஆதிக்கத்துடன் கிறிஸ்துவை எப்படி பின்பற்றுவது என்று. இதனை சுருக்கமாக சொன்னால், "என்னிடம் தங்கமோ அல்லது வெள்ளியோ இல்லை, ஆனால் என்னிடமிருந்ததை உங்களிடம் கொடுக்கிறேன்... "

நாம் யேசுவை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள அழைக்கப்படுகிறோம். அவர் என்ன செய்தாரோ அப்படியே நாமும் செய்து, அவர் இன்று என்ன செய்ய சொல்கிறாரோ, அதை நிறைவேற்றுகிறோம். இப்போது நாம் பூமியில் தங்கியிருக்கும் கிறிஸ்துவின் உடல். கிறிஸ்து கடைசி இரா உணவின் போது என்ன சொன்னார் என்பதை இப்போது நிணைவுகொள்வோம். "நான் உங்களுக்கு என்ன செய்த் கொண்டிருக்கிறேனோ அதையே மற்றவர்களுக்கும் செய்யுங்கள் "

அவர் செய்தது போல , நாமும் செய்ய முடியாது போல தோன்றும் வேளையில், நாம் நம்மிடம் இல்லாத ஒரு திறமைக்காகவோ, நாம் நமது நற்செயல்களை நிறுத்தி விட கூடாது. இந்த செயல்களில் என்னால் ஈடுபட முடியாது ஏனெனில் என்னிடம் அதற்கு போதுமான் ஆதார வசதிகள் இல்லை அல்லது எப்படி உதவு பன்னுவது என தெரியவில்லை என்று சொல்வதற்கு பதிலாக "என்னிடம் எது இருக்கிறதோ அதனை கொடுக்கிறேன்" என்று கூறவேண்டும்.

எடுத்துகாட்டாக, உங்கள் பங்கில், அதிக பணம் தேவைபடுகிறது. (நிறைய பேர், குறைவான நிதியே தருகிறார்கள், ஏனெனில், அவர்கள் கோவிலுக்கு கொடுக்கும் பண விசயத்தில், தாராளமக இருக்க இன்னும் புரிந்து கொள்ளவில்லை). உங்களிடத்தில், அதிக வருவாய் இல்லை என்றாலும் கூட, வேறு வழிகளில் நீங்கள் கோவிலுக்கு உதவி செய்யலாம். எப்படி என்றால், உங்கள் பங்கின் அடுத்த முக்கிய நிகழ்ச்சிக்கு, ஏதாவது ஒரு நிறுவனத்திடம் பேசி, அவர்களை சாப்பாட்டிற்கு உதவ செய்ய அல்லது ஏதாவது தேவையான பொருள்களை கொடுக்க சொல்லாம். இது ஒன்றும் கஷ்டமான விசயமில்லை. ஏனெனில் பல நிறுவனங்கள் இது மாதிரியான உதவி செய்வதற்கு தயாராய் இருக்கிறார்கள்.

உன்னால் என்ன பிறருக்கு அவர்கள் தேவையின் போது என்ன கொடுக்க முடியும்?
நீங்கள் வேலை செய்யும் இடத்தில், ஒருவர் அவர் பிரச்னையோடு வரும்போது, உங்களால் தீர்த்து வைக்கமுடியாவிட்டாலும், கருணையோடு செவிமடுத்து அவர் சொல்வதை கேட்பீர்களா? இறைவனுக்கு சேவை செய்வதில், இது ஒர் அருமையான் வழி.
உங்களுக்கு வீட்டு ரிப்பேர் வேலை செய்ய தெரியுமா? உங்கள் ப்ங்கின் மூலம், தனியாக உள்ள பெண்களையும் அல்லது வயதானவர்களையும் கூப்பிட்டு, அவர்களை உபயோகித்து அதன் மூலம் அவர்கள் வருவாயை பெருக்கலாம். இது மிகவும் தேவையான, அற்புதமான் சேவை.

யாராவது ஒருவர் உங்களிடம் அவர்களுக்காக வேண்டி கொள்ள சொன்னால், நீங்கள் எந்த வேலை செய்தாலும், அதனை ஒதுக்கி வைத்து விட்டு, அப்போதே அவர்களுடன் சேர்ந்து வேண்டுங்கள்,அதன் மூலம் அவர்கள் மீது நாம் அக்கறை கொள்கிறோம் என்பதனை உறுதி செய்கிறோம். யார் வேண்டுமானாலும், ஜெப குழுக்களை ஆரம்பித்து நடத்த முடியும். அதன் முடிவு கடவுளை பொருத்தது. சில நேரங்களில், கடவுள் உங்கள் மூலம் சில அதிசயத்தை நடத்தலாம். யேன் உங்களை, ஏனெனில் நீங்கள் யேசுவை போல செய்கிறீர்கள். அவரே பீட்டர் மூலமும், அருளப்பர் மூலமும் பல அதிசயங்களை நிகழ்த்தியவர்.

நீ இறைவனின் விண்ணரசில் முக்கியமானவன். கடவுள் உன்னை உருவாக்கியபோது, உனக்கு ஒரு முக்கியமான வேலையை கொடுத்தார், அவருடைய கிறிஸ்துவின் உடலோடு ஒன்றாக்கப்பட்ட திட்டத்தில் , உனக்கு ஒரு சேவையை ஒதுக்கினார். நீ நிறைய கொடுக்க வேண்டும், அது இந்த தூதர் சேவைக்கு முக்கியமானது.
© 2007 by Terry A. Modica
Did today's reflection bless you? Please bless me! Be my Good News Partner.

For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

No comments: