Thursday, April 19, 2007

April 20th 2007 bible and reflection

Good News Reflection
Friday of the Second Week of Easter
April 20, 2007

Today's Readings:
Acts 5:34-42
Ps 27:1, 4, 13-14
John 6:1-15

யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 6

1 இயேசு கலிலேயக் கடலை கடந்து மறுகரைக்குச் சென்றார். அதற்குத் திபேரியக் கடல் என்றும் பெயர் உண்டு. 2 உடல் நலம் அற்றோருக்கு அவர் செய்துவந்த அரும் அடையாளங்களைக் கண்டு மக்கள் பெருந்திரளாய் அவரைப் பின் தொடர்ந்தனர். 3 இயேசு மலைமேல் ஏறித் தம் சீடரோடு அமர்ந்தார். 4 யூதருடைய பாஸ்கா விழா அண்மையில் நிகழவிருந்தது. 5 இயேசு நிமிர்ந்து பார்த்து மக்கள் பெருந்திரளாய் அவரிடம் வருவதைக் கண்டு, ' இவர்கள் உண்பதற்கு நாம் எங்கிருந்து அப்பம் வாங்கலாம்? ' என்று பிலிப்பிடம் கேட்டார். 6 தாம் செய்யப்போவதை அறிந்திருந்தும் அவரைச் சோதிப்பதற்காகவே இக்கேள்வியைக் கேட்டார். 7 பிலிப்பு மறுமொழியாக, ' இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கினாலும் ஆளுக்கு ஒரு சிறு துண்டும் கிடைக்காதே ' என்றார். 8 அவருடைய சீடருள் ஒருவரும் சீமோன் பேதுருவின் சகோதரருமான அந்திரேயா, 9 ' இங்கே சிறுவன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன. ஆனால் இத்தனை பேருக்கு இவை எப்படிப் போதும்? ' என்றார். 10 இயேசு, ' மக்களை அமரச் செய்யுங்கள் ' என்றார். அப்பகுதி முழுவதும் புல்தரையாய் இருந்தது. அமர்ந்திருந்த ஆண்களின் எண்ணிக்கை ஏறக்குறைய ஐயாயிரம். 11 இயேசு அப்பங்களை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அமர்ந்திருந்தோருக்குக் கொடுத்தார். அவ்வாறே மீன்களையும் பகிர்ந்தளித்தார். அவர்களுக்கு வேண்டிய மட்டும் கிடைத்தது. 12 அவர்கள் வயிறார உண்டபின், ' ஒன்றும் வீணாகாதபடி, எஞ்சிய துண்டுகளைச் சேர்த்து வையுங்கள் ' என்று தம் சீடரிடம் கூறினார். 13 மக்கள் உண்டபின் ஐந்து வாற்கோதுமை அப்பங்களிலிருந்து எஞ்சிய துண்டுகளைச் சேர்த்துச் சீடர்கள் பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினார்கள். 14 இயேசு செய்த இந்த அரும் அடையாளத்தைக் கண்ட மக்கள், ' உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே ' என்றார்கள். 15 அவர்கள் வந்து தம்மைப் பிடித்துக் கொண்டுபோய் அரசராக்கப் போகிறார்கள் என்பதை உணர்ந்து இயேசு மீண்டும் தனியாய் மலைக்குச் சென்றார்.

http://www.arulvaaku.com



சோதனைகளிடையே இன்பம்.

இன்றைய முதல் வாசகத்தில், ஒரு வரி அர்த்தம் இல்லாமல் இருக்கிறது: அவர்கள் அவமரியாதைக்குரியவர்கள், அதனால், கஷ்டபடுகிறோம், என்று நினைத்து அதனால் சந்தோசப்படுகிறார்கள். எப்படி, ஒருவர், தனக்கு இழைக்கப்படும், தீங்கு கிறிஸ்துவுக்காக ஏற்று கொண்டு சந்தோசமடைகின்றனர்.


எனக்கு மற்றவர்களால், சோதனை அனுவவம் ஏற்படும் போது, அவர்களுடைய விமர்சனங்களால், மரியாதை குறைவாக பேசும்போது, என்னை தவறாக புரிந்து கொள்ளும்போது, அல்லது என்னை நிராகரிக்கும்போது, எனது புகழ், தாக்குதலுக்கு உள்ளாகிறது. இதனை பற்றி, முனுமுனுக்க தோன்றுகிறது. குறைந்தது ஏதாவது சொல்ல தோன்றுகிறது. என்னை யாராவது, எனக்கு மேல் உள்ளவர்கள், இந்த மறையுரையை தொடர வேண்டாம் என்று கூறும்போது,ஏனென்றால், அவருக்கு இந்த மறயுறரையில் உள்ள உண்மை பிடிக்கவில்லை. அதனால், நான் சந்தோசமடைய போவதில்லை.

உண்மையான நிலை என்னவென்றால், நாம் எங்கு வாழ்கிறோம் என்ற அர்த்ததைவிட, நாம் எல்லோரும், நமது விசுவாசத்தின் சோதனைக்கு ஒவ்வொரு நாளும் ஆட்படுகிறோம். என்னுடைய மறையுரையின் சில வாசகர்கள், அவர்கள் கிறிஸ்தவர்கள் என்பதால் அவமானப்படுத்தபடும், நாடுகளில் வாழ்கின்றனர். அவர்கள் இந்த மறையுறையை வாசிக்கின்றனர் என்றாலே, மிக பெரிய ஆபத்தை எதிர் நோக்கி இருக்கின்றனர். எனினும், அவர்கள், விசுவாசத்திற்காக, சோதனைக்கு உட்படவில்லை. அவர்களுடைய விசுவாசம், அதனுடைய உண்மையான் நிலை வெளியே தெரிவதில்லை.

நாம் வார்த்தைகளால், அடிக்கப்படுகிறோம். இருந்தாலும், மக்களின் மனதில், நாம் இழுக்கப்படுகிறோம். நாம் அநீதியாக தீர்ப்பளிக்கப்படுகிறோம். அதனால் கேவலப்படுத்தப்படுகிறோம். நாம் கிறிஸ்துவை பற்றி பேசாமல் இருக்க தன்டனை அளிக்கப்படுகிறோம். இது , நாம் அபார்சன் ஆக இருக்கும் குழந்தைகளை பற்றி பேசு முற்படும்போது ஏற்படுகிறது. இது, ஓரின சேர்க்கை உடையவர்களுடன், நாம் கட்டிபிடித்து , தூய்மான வாழ்க்கைக்கு செக்ஸ் வாழ்க்கையில்லாமல் வாழலாம் என்று, நாம் தூண்டும்போது, ஏற்படுகிறது. நமக்கு உள்ள கல்வியறிவு, ஆற்றலை, நாம் கடவுளுக்காக உபயோகிக்கும் போது, மற்றவர்கள், நாம் அந்த அளவிற்க்கு தகுதியானவர்கள் இல்லை என்று நினைக்கும் போது, நமக்கு இழிவு ஏற்படுகிறது.

உன்னுடைய நேரத்தில், வேறு யாராவது, கடவுளுக்கு நீ செய்ய வேண்டும் என்று நினைக்கிற நேரத்தில், எடுத்து கொள்ளும் நேரத்தை நினைத்து கொள். நீ முழுமையாக சந்தோசப்படுகிறாயா? அல்லது கோபமாக பயனற்று போகிறாயா? அப்ப முதல் அப்போஸ்தலர்கள், எப்படி சந்தோசமடைந்தார்கள்.?

இழிவுபடுத்தலில் இருந்து வரும் சந்தோசம், கடவுளிடம் நாம் கொண்டுள்ள அன்பிலிருந்து வருகிறது. நாம் நமது புகழின் மேல் உள்ள அன்போடு அதிகம் நேச்முடன் இருக்கும்போது, மற்றவர்கள், நம்மை அங்கீகரிக்காமல் போகும்போது, நாம் மிகவும் கவலைக்கு உள்ளாகிறோம். நமது சந்தோசம், நாம் கடவுளிடம் நோக்கி இருக்கும்போது வருகிறது, (நாம், நமக்கு என்ன நடக்கிறது என்று பார்க்காமல் இருக்க வேண்டும்). மற்றும், நாம் நமது பார்வையை யேசுவை நோக்கி நிறுத்த வேன்டும். நமது சிலுவைகள் நம்மை மீட்படைய செய்யும் என்று நாம் நிணைவு கூறவேண்டும். மேலும், நமக்கு நிராகரிக்கப்பட்ட சுதந்திரம், நமக்கு கடவுளோடு இணையும் ஒரு வாய்ப்பாக கருத வேண்டும். ஏனென்றால், கடவுளின் திரூவுளத்தை யாரும் நிறுத்த முடியாது, அல்லது நிறைய நாள் , நீடித்து தள்ள முடியாது. இதுவே நமக்கு மிக பெரிய சந்தோசத்தை கொடுக்கும் எண்ணம் ஆகும்.

நாம் கடவுள் மேல் கொண்ட ஈர்ப்பை தொடருவது என்பது மிகவுல் எளிதல்ல. இது மிக பெரிய முயற்சியையும் , மேலும், முழுமையான முடிவையும் எடுக்க வேண்டியுள்ளது. எவ்வளவு அதிகமாக் நாம் வேலை அல்ல்து ஈடுபடுகிறோமோ, அந்த அளவிற்கு, நமது கடவுளின் நம்பிக்கை அதிகப்படுகிறபோது, நமது அற்புதமான சந்தோசத்தை , நாம் அனுவவிக்கிறோம். பரிசுத்த ஆவியானவரின் உதவியோடு, எல்லாமே நமக்கு சாத்தியமாகிறது. நாம், யேசுவிடம், இந்த சந்தோசத்தை பெருக செய்ய சொல்லாம், அவர் அதனை கண்டிப்பாக செய்வார். நாம், மிகவும் சிறிய சந்தோசம் அடைந்தாலும், எப்படி அவர் சிறிய துண்டு ரொட்டி துண்டையும், சில மீண்க்ளையும், பல மடங்காக்கினாரோ? அதே போல், உனது சந்தோச்த்தை, அவர் அதனை பலுகி பெருக செய்வார்.

No comments: