Sunday, April 15, 2007

APRIL 16th II week of Easter

Good News Reflection
Monday of the Second Week of Easter
April 16, 2007
Today's Readings:
Acts 4:23-31
Ps 2:1-9 (with 11d)
John 3:1-8
http://www.usccb.org/nab/041607.shtml

யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 3

1 பரிசேயர் ஒருவர் இருந்தார்; அவர் பெயர் நிக்கதேம். அவர் யூதத் தலைவர்களுள் ஒருவர். 2 அவர் ஓர் இரவில் இயேசுவிடம் வந்து, ' ரபி, நீர் கடவுளிடமிருந்து வந்த போதகர் என்பதை நாங்கள் அறிவோம். கடவுள் தம்மோடு இருந்தாலன்றி, நீர் செய்யும் இவ்வரும் அடையாளங்களை யாரும் செய்ய இயலாது ' என்றார். 3 இயேசு அவரைப் பார்த்து, ' மறுபடியும் பிறந்தாலன்றி எவரும் இறையாட்சியைக் காண இயலாது என மிக உறுதியாக உமக்குச் சொல்லுகிறேன் ' என்றார். 4 நிக்கதேம் அவரை நோக்கி, ' வயதானபின் ஒருவர் எப்படிப் பிறக்க முடியும்? அவர் மீண்டும் தாயின் வயிற்றில் புகுந்து பிறக்க முடியுமா? ' என்று கேட்டார். 5 இயேசு அவரைப் பார்த்து, ' ஒருவர் தண்ணீராலும் தூய ஆவியாலும் பிறந்தாலன்றி இறையாட்சிக்கு உட்பட இயலாது என்று மிக உறுதியாக உமக்குச் சொல்கிறேன். 6 மனிதரால் பிறப்பவர் மனித இயல்பை உடையவர். தூய ஆவியால் பிறப்பவர் தூய ஆவியின் இயல்பை உடையவர். 7 நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும் என்று நான் உமக்குக் கூறியது பற்றி நீர் வியப்படைய வேண்டாம். 8 காற்று விரும்பிய திசையில் வீசுகிறது. அதன் ஓசை உமக்குக் கேட்கிறது. ஆனால் அது எங்கிருந்து வருகிறது என்றும் எங்குச் செல்கிறது என்றும் உமக்குத் தெரியாது. தூய ஆவியால் பிறந்த அனைவருக்கும் இது பொருந்தும் ' என்றார்.

http://www.arulvakku.com


பரிசுத்த ஆவி உங்களுடன் இருக்கிறாரா? செயல்படுகிறாரா?

"நீங்கள் மறுபடியும் பிறந்துவிட்டீர்களா? " என்ற கேள்வியை உங்களிடம் யாராவது கேட்டதுண்டா? நேரடியாக மேலே உள்ள கேள்விக்கு செல்வோம்: "பரிசுத்த ஆவி உங்களுடன் இருக்கிறாரா? செயல்படுகிறாரா? " யேசு கிறிஸ்துவாக மாறுவது போதுமானது அல்ல. பரிசுத்த ஆவியுடன் நாம் கொண்டுள்ள உறவு தான் நம்மை பாவ மனிதனாகவும் அல்லது தெய்வீக மனிதனாகவும் வேறுபடுத்துகிறது.

நாம் உயிர்த்த யேசுவை ஈஸ்டரில் கொண்டாடி கொண்டிருக்கும் இந்த வேளையில், "ஈஸ்டருக்கு பிறகு, பெந்தகோஸ்து " என்று நமது திருச்சபை, மீண்டும், மீண்டும் நமக்கு நிணைவு படுத்துகிறது. இன்றைய முதல் வாசகத்தில், சீடர்கள், ஆண்டவரிடம், முழுமையாக வேண்டி, அவர்கள் பரிசுத்த ஆவியை முழுவதும் பெற்றுகொண்டதை நாம் காண்கிறோம்.

பரிசுத்த ஆவி தான், சீடர்களுக்கு, எவ்வித அச்சுறுத்தலும் இல்லாமல், கடவுளின் வார்த்தையை அறிவிக்கும் சக்தியை கொடுத்தது. பரிசுத்த ஆவி இல்லாமல், அவர்கள் பயந்து கொண்டும், திறமையற்றும் இருந்தார்கள். உங்களுடைய விசுவாசம், உங்களை பயமுறுத்தும் விசயங்களிலுருந்து உங்களை விடுவிக்கிறதா? உங்கள் விசுவாசம் உங்களுக்கு தைரியத்தையும், நம்பிக்கையையும் கொடுக்கிறதா?

சீடர்கள், மற்றவர்களால் இம்சை படுத்தப்படும்போது, பரிசுத்த ஆவிதான் அவர்களுக்கு மகிழ்ச்சியூட்டுகிறது. உன்னுடைய கஷ்டமான நேரங்களில் உங்களால் மகிழ்ச்சியாக இருக்க முடிகிறதா? பரிசுத்த ஆவியானவர் தான் அவர்களுக்கு உற்சாகத்தை கொடுத்து , அவர்களின் ஜெபத்தை இன்னும் ஆழப்படுத்தியது. உங்களுடைய ஜெப வாழ்விற்கு உதவி தேவை படுகிறதா? பரிசுத்த ஆவி தான் சீடர்களின் அறையை குலுக்கியது, அது பூமி அதிர்ச்சி அல்ல. உங்கள் விசுவாசம், உங்களின் வாழ்க்கையை குலுக்குகிறதா? நீங்கள், ஜெப சமூகத்துடன் சேர்ந் இருக்கும் போது, உங்களால், கடவுளின் இருப்பை, பிரசன்னத்தை உணர முடிகிறதா?

இன்றைய நற்செய்தியில், யேசு பரிசுத்த ஆவியின் மூலம் நடக்கும் ஞானஸ்தானத்தையும், நீரினால் நடக்கும் ஞானஸ்தானத்தையும் சமமாகவே வைக்கிறார். அவைகள் இரண்டும் ஒன்றாகவே சேர்ந்து ப்ணி செய்கிறது. நீரின் மூலம் பெறும் ஞான்ஸ்தானம், நம் பாவங்களை கழுவுகிறது. பரிசுத்த ஆவியோ, நாம் தெய்வீகத்துடனும், பாவங்களில் விழாமல் இருக்க சக்தியை தருகிறது. உங்கள் விசுவாசம், மீண்டும், மீண்டும் பாவம் செய்ய தூண்டும் விசயங்களில் இருந்து உங்களை மீட்கிறதா? நீரினால், கடவுள், உங்களின் பாவங்களில் விழும் குணத்தினை போகசெய்கிறார். பரிசுத்த ஆவியின் மூலம், கடவுளின் தெய்வீக குணம் உங்களின் இயற்கை குணமாகிறது.

நமது தெய்வீகத்தை, பரிசுத்த ஆவி தான் திறக்கிறது. "தண்ணீராலூம், பரிசுத்த ஆவியாலும் பிறக்காதவர்கள், கடவுளின் விண்ணரசிற்குள் நுழைய முடியாது... ஆவிதான் ஆவியை உண்டாக்குகிறது". பரிசுத்த ஆவி நம்மில் இருந்து நம்மை இயக்கினால் தான், நாம் கிறிஸ்துவாக இருக்க முடியும். பரிசுத்த ஆவி, நமக்கு வழிகாட்டினால் தான், நாம் மோட்சத்தின் பாதையில் இருக்க முடியும். அவர் நம்முடன் இருக்கும் போது, நமக்கு மோட்சம் செல்வதற்கும், மீட்பும் அடைய எதையும் இழக்க வில்லை. நம்முடைய ஞான்ஸ்தானத்தில், நமக்கு பரிசுத்த ஆவி முழுமையாக கொடுக்கப்பட்டது. இது உறுதி பூசுதலில் உறுதி படுத்தபட்டது. கடவுளின் மீட்பின் திட்டத்தில் வெற்றியடைய, நம்முடைய தின நடவடிக்கைகளில், நம் ஆவியை, கிறிஸ்துவின் ஆவ்யுடன் முழுமையாக இணைந்து செயல்பட வேண்டும்.

பரிசுத்த ஆவிக்கான ஜெபம்: http://wordbytes.org/prayers/HolySpirit.htm

No comments: