Monday, April 16, 2007

April 17th tuesday

Good News Reflection
Tuesday of the Second Week of Easter
April 17, 2007
Today's Readings:
Acts 4:32-37
Ps 93:1-2, 5
John 3:7b-15
http://www.usccb.org/nab/041707.shtml

யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 3

7 நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும் என்று நான் உமக்குக் கூறியது பற்றி நீர் வியப்படைய வேண்டாம். 8 காற்று விரும்பிய திசையில் வீசுகிறது. அதன் ஓசை உமக்குக் கேட்கிறது. ஆனால் அது எங்கிருந்து வருகிறது என்றும் எங்குச் செல்கிறது என்றும் உமக்குத் தெரியாது. தூய ஆவியால் பிறந்த அனைவருக்கும் இது பொருந்தும் ' என்றார். 9 நிக்கதேம் அவரைப் பார்த்தது, ' இது எப்படி நிகழ முடியும்? ' என்று கேட்டார். 10 அதற்கு இயேசு கூறியது: ' நீர் இஸ்ரயேல் மக்களிடையே போதகராய் இருந்தும் உமக்கு இது தெரிவில்லையே! 11 எங்களுக்குத் தெரிந்ததைப் பற்றியே பேசுகிறோம்; நாங்கள் கண்டதைப் பற்றியே சான்று பகர்கிறோம். எனினும் எங்கள் சான்றை நீங்கள் ஏற்றுக்கொள்வதில்லை என உறுதியாக உமக்குச் சொல்கிறேன். 12 மண்ணுலகு சார்ந்தவை பற்றி நான் உங்களுக்குச் சொன்னதை நீங்கள் நம்பவில்லை என்றால் விண்ணுலகு சார்ந்தவை பற்றிச் சொல்லும் போது எப்படி நம்பப்போகிறீர்கள்? ' 13 ' விண்ணகத்திலிருந்து இறங்கி வந்துள்ள மானிட மகனைத் தவிர வேறு எவரும் விண்ணகத்திற்கு ஏறிச் சென்றதில்லை. 14 பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும். 15 அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர்.

http://www.aruvakku.com

மறையுரை:

ஆவியுடன் சமூக இணைப்பில் ஒன்றிப்பை அனுபவிப்பது:

இன்றைய முதல் வாசகத்தில், உண்மையான கிறிஸ்துவின் சமூக ஒன்றிப்பு என்ன என்பதை காட்டுகிறது. நாம் ஏன், அந்த தாராள அன்பினை இன்றைய திருச்சபையில் அனுபவிப்பதில்லை.

நம் விசுவாசத்தில் நாம் தனிபட்டு நிற்கிறோம். வரலாற்றில் பார்த்தோமானால், லத்தின் மொழிகளில், திருப்பல் நிறைவேற்றப்படும்போது, அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. என்ன நடந்தது என்றால், அவர்கள் தனியாக ஜெபமாலை சொல்லிகொண்டிருப்பார்கள், குருவானவர் ஒருபக்கம் திருப்பலி நிறைவேற்றிக்கொண்டிருப்பார். இன்னும் பெரிய கோவில்களில், ஒவ்வொரு பக்கமும், ஒரு குருவானவர் திருப்பலி நிறைவேற்றுவர். எல்லாரும், கடவுளை வணங்க ஒன்றாக வந்தாலும், ஒருவர் மற்றவரோடு ஒன்றாக இணைந்து இருப்பதாக யாரும் அறிந்து கொள்வதில்லை.

சமூக இணைப்பும், தாரளமாக இருப்பது, கருணையோடு நடந்து கொள்வதும், ஒன்றோடொன்று பிணைந்தது. பழைய கிறிஸ்துவர்களுக்கு இருந்த தாராள் குணத்தால், மற்றவர்களுக்கு என்ன தேவை என அறிந்து, அவர்கள் மேல் அக்கறை கொள்வதும் பழக்கத்தில் இருந்தது. அவர்கள் இதனை செய்தது ஒன்றும், ஆச்சரியமாக இல்லை, மேலும் அவர்கள், தங்களது உடைமைகளை விற்று மற்றவர்களுக்கு உதவி செய்தார்கள். அவர்கள் வீடு இல்லாதவர்களாக மாறவில்லை, அவர்களிடம் இருந்ததை, தேவையானது போக மீதியை பகிர்ந்து கொடுத்தார்கள். இன்று, அதனை நம் குடும்ப உறுப்பினர்களுக்கு செய்யலாம். ஆனால், நமது பங்கில் உள்ளவர்களுக்கு என்ன தேவை என்பதை கூட நாம் தெரிந்து கொள்வதில்லை. கண்டிப்பாக அவர்களோடு இணைந்து, அவர்களுக்காக நாம் தியாகம் செய்வதாக எண்ணம் நம்மிடம் இல்லை.

அன்பினிலுருந்து தான், தாராளமாக இருப்பது, கருணையோடு இருப்பது நமக்கு வருகிறது. எவ்வளவு அதிகமாக ஒருவரை அன்பு செய்கிறோமோ? அவ்வளவு அதிகமாக அவரிடம் தாராளமாக நடந்து கொள்கிறோம். மீண்டும், முந்தைய கிறிஸ்தவர்கள், ஒருவர் ஒருவரோடு, எப்படி இணைந்து இருந்தார்கள, என்று பார்ப்போம். "ஒரே உள்ளமும் ஒரே எண்ணமும்" ஆக இருந்தார்கள். இதனால் எல்லாவற்றிலும், உடன்பாடாய் இருந்தார்கள், அப்ப்டியில்லை. அவர்கள் நட்பு, ஒருவரை ஒருவர் ஆறுதலோடு பாதுகாப்பதில் இருந்தது. அந்த பொறுப்பு, திரு ப்பலியில் ஆரம்பித்து, அதனை விட்டு வெளியில் வந்து, அதன் மூலம் ஏற்படும் ஈடுபாட்டில் தொடர்கிறது.

இன்றைய நற்செய்தியில், ஏசு கிறிஸ்து, மோட்சத்தில் உள்ள விசயங்களை புருந்து கொள்ள சொல்கிறார். நாம் "பரிச்த்த ஆவியானவராக இருக்க வேண்டும்". இதன் மூலம் யேசுவை, நாம் தனிபட்ட முறையில் தெரிந்து கொள்ளலாம். ஆனால், கடவுள், நம்மிடம் மேலும் அதிகமாக தெரியவேணும் என்று கூற்கிறார். ஏனெனில், மோட்சத்தில் அதிகமான விசயங்கள் அதிகமாக இருக்கிறது. பெந்தகோஸ்து அன்று பரிசுத்த ஆவியானவர், ஒரு குழுவின் மீது தான் இறங்கி வந்தார். அந்த குழுவில் உள்ள அனைவரும் ஒருவரோடு ஒருவர் இணைந்து இருந்தனர்.

தாராளமாக இருத்தல், ஒரு குழுவின் ஆரோக்கியமான, முழு சக்தியுடன் இருப்பதற்கான அறிகுறி. மோட்சத்தில் அன்பு எல்லா இடத்திலும் இருக்கிறது. இதனை தான், நாம் புனிதர்களின் இணைப்பு அல்லது ஒன்றினைப்பு என்று கூறுகிறோம். இருந்தும், நண்மை வாங்குவதை தான், நாம், "ஒருங்கிணைப்பு" என்று நினைக்கிறோம். அது சரியல்ல. அது என்ன்வென்றால், நண்மை வாங்க செல்லும்போது தனியாக செல்கிறோம் (இறைவா நான் தகுதியாற்றவன்.. )ஆனால் நண்மை திரும்பி வரும்போது , ஒரு குழுமத்தின் ஒன்ற்னைப்பாக வருகிறோம். அது தான், புனிதர்களின் ஒன்றினைப்பு.

மோட்சத்தில், மற்றவர்களை நாம் சமமாக நடத்துவோம், நம்மை எல்லோரும் முழுமையாக அன்பு செய்வார்கள். இந்த பூமியில், நாம் இது மாதிரி ஒர் அன்பை பெற முடியாது. அல்லது பரிசுத்த ஆவியின் துணையுடனோ, ஒன்றினைந்த குழுவின் துணையோடு தான் இந்த முழு அன்பை பெறமுடியும்.

http://gnm.org

No comments: