Sunday, April 1, 2007

மறையுரை , april 2nd 2007

© 2007 by Terry A. ModicaDid today's reflection bless you? Please bless me! Be my Good News Partner.For PERMISSION to copy this reflection, go to:http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm


இறை ஏசு கிறிஸ்துவின் காலண்டரில், இன்றைய நற்செய்தியில் நடக்கும் விஜயம், அவரின் வாழ்க்கையின் நடகக விருக்கும் கடினமான தியாக உயிர்பலிக்கு ஒரு வாரம் முன் நடந்தது. அவருக்கு அடுத்து என்ன நடக்கபோகிறது என்று தெரியும். அதனை அவர் அவருடைய சீடர்களுக்கு நுட்பமான முறையிலோ அல்லது மறைமுகமாகவோ குறிப்பிட்டு கொண்டிருக்க வில்லை. இருந்தும் அவர் எப்படி அவ்வளவு அமைதியாக அந்த இரவு உணவில் கலந்து கொள்ள முடிந்தது.?
புனிதர்களின் வாழ்க்கை வரலாறை நாம் படிக்கும்போது, அவர்கள் வேத சாட்சிகளாக மரிக்கும் போது, ஒரே மாதிரியான விசயம் நடப்பதை காண்கிறோம். அவர்கள் மரணத்தை அமைதியாகவும் , சந்தோசமாகவும் ஏற்றுக்கொள்கிறார்கள். எல்லோரும் இதை எப்படி செய்கிறார்கள்.?
நான் இதனை, விசேசமான தெய்வ கிருபை என நினைக்கிறேன். பரிசுத்த ஆவி அவர்களுக்கு தெய்வீக சந்தோச பரிசை அளித்து, அந்த வேதனையை தாங்கிகொள்ள உதவுகிறார். யேசு கிறிஸ்துவே இதற்கு மிகச் சரியான உதாரணம். பெரிய வெள்ளியை பற்றி கவலை படாமல், அவருடைய நண்பர்களோடு அந்த தருணத்தை மகிழ்ச்சியுடன் அனுபவித்தார். இந்த மக்கள் யாவரும், தந்தையின் கைகள், யேசுவை கட்டியணைத்து, அவருக்கு தேவையானதைஊட்டி, அவருக்கு மீண்டும் உறுதிபடுத்தி, தைலம் பூசுவது போல் , தந்தையின் மிக ஆழ்ந்த அன்பை கொடுக்கும் கைகளாயிறுந்தது.
கிற்ஸ்துவும், தந்தையின் கருணையையும், ஊக்கத்தையும், வேதாகமத்தின் மூலம் அனுபவித்திருக்கிறார். இன்றைய முதல் வாசகத்திலும், அதன் பதிலுரையிலும், யேசு எவ்வாறு இந்த் அனுபவத்தை பெற்றார் என்பதனை படித்து பார்க்கவும்.
நீ செய்யும் எந்த தியாகத்திற்கு, இறைவனின் உறுதிப்பாடு தேவை? கடவுளுக்காக உனக்கு பிரியமன எந்த விசயத்தை விட்டு கொடுத்திருக்கிறாய்? கடவுளுக்கு உன்னையே அர்ப்பனித்து, உனது வாழ்க்கையை கடவுளரசுக்கு கொடுத்து, இந்த உலகத்தில் நீ எவ்வாறு வேறு பட போகிறாய்? தந்தை உன்னல் சந்தோசப்படுகிறார், உன்னை ஊக்குவிக்கிறார், உன்னை தேற்றுகிறார்.
மதலேன் மரியவிற்கு யேசுவின் மேல் உள்ள அன்பு அவ்வளவு ஆழமானது, அந்த அளவற்ற ஆழமான அன்பினால் யேசுவிற்கு மிக விலை உயர்ந்த வாசதனை தைலத்தை பூசி விடுகிறாள். அவள் மற்றவர்களின் ஏளனத்தை பொருட் படுத்தாமல், தனது பெருமையை விட்டு கொடுத்து யேசுவிற்கு இந்த அன்பளிப்பை தருகிறாள். அவள் அவளுடைய கூந்தலால், யேசுவின் காலை துடைப்பது மடத்தனமாக தெரியலாம். (எல்லார் வீட்டிலும் துடைக்கும் துண்டு கண்டிப்பாக இருக்கும்). ஆனால், அவள் அதனை பொருட்படுத்தவில்லை. சிலர் அவளுடைய அன்பை புரிந்து கொண்டார்கள், சிலருக்கு அது தெரியவில்லை. அதனால் என்ன, அவளுக்கு யேசுவின் மீது உள்ள அன்புதான் முக்கியாமாக பட்டது. அதற்கு பிரதி பலனாக, யேசு அவளை பாராட்டினார்.
நாமும் யேசுவை அந்த அளவிற்கு அன்பு செய்கிறாமோ? மற்றவர்களுக்காக நீயும் எம்மாதிரியான தியாகங்கள் செய்து அவர்களுக்கு எந்த பரிசு பொருளை கொடுக்கலாம் என நினைத்து பார். மற்றவர்களுக்காக எதையெல்லாம் செய்கிறோமோ? அது கிறிஸ்துவுக்கே செய்கிறோம். நாம் யேசுவின் காலுக்கு வாசனை தைலத்தை தடவ முடியாது, ஆனால், நாம் பார்க்கும் ஒவ்வொரு மனிதன் மூலமாக நம்மை வந்து சந்திக்கிறார். எவ்வாறு உங்கள் அன்பு அவர்கள் வாழ்க்கையை வாசனைபடுத்துகிறது.
தூய அன்பினில் அடியெடுத்து வைப்போம்: நீ செய்யும் தியாகங்களில், கடவுள் எதெற்கெல்லம், தனது உறுதிபாட்டையும், பாராட்டுதலையும் கொடுக்கிறார் என்பதனை கண்டுபிடிப்போம். தந்தையே உனக்கு நன்றிக் கடிதம் எழுதுவது போல் ஓர் கடிதம் எழுது. அவரது அன்பின் ஞாபகார்த்தமாக யாராவது ஒருவருக்கு உம்முடைய தியாக அன்பை கொடு, இது யேசுவிக்கு நீ கொடுக்கும் மிகப்பெரிய அன்பளிப்பகும். சில நேரங்களில், நம்முடைய அறிவிற்கு உட்படாமல், யாரை நாம் ஆசிர்வதிக்கிறோமோ? உன்மையான பெரிய வெள்ளியை அனுவிப்பார்கள்.




http://www.arulvakku.com/
யோவான் (அருளப்பர்) நற்செய்தி
அதிகாரம் 12
1 பாஸ்கா விழாவுக்கு ஆறு நாள்களுக்கு முன்பு இயேசு பெத்தானியாவுக்குச் சென்றார். அங்குதான் இயேசு இலாசரை உயிர்த்தெழச் செய்தார். 2 அங்கு அவருக்கு விருந்து அளிக்கப்பட்டது. மார்த்தா உணவு பரிமாறினார். இயேசுவோடு பந்தியில் அமர்ந்திருந்தவர்களுடன் இலாசரும் இருந்தார். 3 மரியா இலாமிச்சை என்னும் கலப்பற்ற விலையுயர்ந்த நறுமணத்தைலம் ஏறக்குறைய முந்நூற்று இருபது கிராம் கொண்டுவந்து இயேசுவின் காலடிகளில் பூசி, அதனைத் தமது கூந்தலால் துடைத்தார். தைலத்தின் நறுமணம் வீடெங்கும் கமழ்ந்தது. 4 இயேசுவின் சீடருள் ஒருவனும் அவரைக் காட்டிக்கொடுக்க இருந்தவனுமான யூதாசு இஸ்காரியோத்து, 5 ' இந்தத் தைலத்தை முந்நூறு தெனாரியத்துக்கு விற்று, அப்பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்திருக்கக் கூடாதா? ' என்று கேட்டான். 6 ஏழைகள்பால் கொண்டிருந்த அக்கறையினால் அல்ல மாறாக அவன் ஒரு திருடனாய் இருந்ததால்தான் இப்படிக் கேட்டான். பணப்பை அவனிடம் இருந்தது. அதில் போடப்பட்ட பணத்திலிருந்து அவன் எடுத்துக் கொள்வதுண்டு. 7 அப்போது இயேசு, ' மரியாவைத் தடுக்காதீர்கள். என் அடக்க நாளை முன்னிட்டு அவர் இதைச் செய்யட்டும். 8 ஏழைகள் உங்களோடு என்றும் இருக்கிறார்கள். ஆனால் நான் உங்களோடு என்றும் இருக்கப்போவதில்லை ' என்றார். 9 இயேசு அங்கு இருப்பதை அறிந்த யூதர்கள் பெருந்திரளாய் வந்தார்கள். அவர்கள் இயேசுவை முன்னிட்டு மட்டும் அல்ல, அவர் உயிர்த்தெழச் செய்திருந்த இலாசரைக் காண்பதற்காகவும் வந்தார்கள். 10 ஆதலால் தலைமைக் குருக்கள் இலாசரையும் கொன்றுவிடத் திட்டமிட்டார்கள். 11 ஏனெனில் இலாசரின் காரணமாக யூதர்களிடமிருந்து பலர் விலகி இயேசுவிடம் நம்பிக்கை கொண்டனர்.

No comments: