Saturday, April 7, 2007

ஈஸ்டர் ஞாயிறு : யேசுவின் வெற்றி

Easter Sunday, The Resurrection of the Lord
Scriptures for the Mass of Easter Morning:
Acts 10:34a, 37-43
Ps 118:1-2, 16-17, 22-23
Col 3:1-4 or 1 Cor 5:6b-8
John 20:1-9
http://www.usccb.org/nab/040807.shtml


மறையுரை:

மிகவும் மகிமையுள்ள, யேசுவின் உயிர்த்தெழுந்த நாள், யேசுவோடு சேர்ந்து , இந்த புனித வாரத்தில், நாம் பயணம் செய்யாவிடில், இது நிறைவானதான ஒரு நாளாக இருக்காது. மோட்சத்தின் நுழைவாயில் சிலுவை தான். யேசுவோடு சேர்ந்து, முதலில், வேதனைகளையும், தியாகமும் செய்யாவிடில், நாம் சந்தோசத்தையும், மகிமையையும் அனுபவிக்க முடியாது.

ஈஸ்டர் சந்தோசம், மகிழ்ச்சி யேசுவின் சிலுவையை ஏற்றுக் கொள்வதால் மட்டும் வருவது அல்ல, அந்த பயனத்தை தொடரவேண்டும். நீங்கள், உண்மையாக யேசுவை பின் தொடர விரும்பினால், நாமும் அவர் செய்ததையெல்லாம் செய்து, பிறருக்கு உதவி செய்து, அவர்கள் நித்திய வாழ்வை அடைய யேசுவின் சேவையோடு இனைந்து செய்திடல் வேண்டும். இச்சேவையில், நாம் மீண்டும் மீண்டும் சிலுவையை சந்திப்போம். இத்தகய தியாக அன்பின் வலியில்லாமல், நாம் மோட்சத்தை அடைய முடியாது.


ஒருவர் நம்மிடம் மிக கோபமாக திட்டும்போது, நாமும் அவர்களை திட்ட வேண்டும் என தோன்றும்.ஆனால், நாம் மென்மையான, மிகவும் கருணையுடன் பேசுவது, நமது சிலுவையாகும். ஒருவரி தொந்தரவில் இருக்கும்போது, நமக்கு வசதியின்றி, நாம் ஈடுபட வேண்டாம் என நினைக்கும் அள்விற்கு வரும்போது, நமது இரு கைகளாலும், அவர்களுக்கு தேற்றுதல் கூறும் போது, நமக்கு சிலுவையாகும். நம்மை அநியாயமாக நடத்துபவர்களுக்கு, நம்மை பழி வாங்குபவர்களுக்கு நல்ல செயல் செய்வது ஒரு சிலுவையாகும். இறைவனின் விண்ணக அரசுக்காக, நாம் நமது வாழ்க்கையை வேறுபடுத்தி வாழும்போது, நமக்கு மீட்பின் சந்தோசம் கிடைக்கிறது.


கடினமான நேரத்தில் கொடுக்கும் அன்பு, வேதனையின் அன்பு, ஆழமான அன்பு, இது மற்றவர்களின் நித்திய வாழ்விற்கு உதவியாக இருக்கும். நம் தியாகம், முடிவில்லா மதிப்பை தரும். இது நமக்கு நாமே செய்து கொள்ளும் வாழ்வினை விட மிக சிறந்த வாழ்க்கையாகும். நித்திய வாழ்விற்கும் மிக சிறந்தாகும். ஈஸ்டர் ஞாயிறன்று, யேசுவின் உயிர்ப்பில் நாம் கலந்துகொள்ளும் திருப்பலி, சாத்தான் மீது பெற்ற வெற்றியாகும்.

சுய சிந்தனைக்கான கேள்வி: எந்த மாதிரியான தியாகங்களால், நீ இப்போது வேதனை படுகிறாய்? யேசுவிற்கு ஒரு அன்பு கடிதம் எழுது. அக்கடிதத்தில், உனது வலியையும், அவரது வலியையும் இனைத்து அவரோடு அமைதியாக அவர் கல்லறையில் அவரோடு சேர்ந்து இரு, நீ எப்போது தயாராக இருக்கிறாயோ? அப்போது, எழுந்து யேசு, உன் செயல்களை பாராட்டுகிறார் என்று அறிந்து அப்போது கொண்டாடு. இது தான் உனது மீட்பு.


http://www.gnm.org

No comments: