Saturday, July 28, 2007

ஜூலை 29 2007, நற்செய்தி மறையுரை:

ஜூலை 29 2007, நற்செய்தி & மறையுரை:


லூக்கா நற்செய்தி

அதிகாரம் 11

1 இயேசு ஓரிடத்தில் இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார். அது முடிந்ததும் அவருடைய சீடர்களுள் ஒருவர் அவரை நோக்கி, ' ஆண்டவரே, யோவான் தம் சீடருக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக் கொடுத்ததுபோல் எங்களுக்கும் கற்றுக்கொடும் ' என்றார். 2 அவர் அவர்களிடம், ' நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது இவ்வாறு சொல்லுங்கள்; தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக! 3 எங்கள் அன்றாட உணவை நாள்தோறும் எங்களுக்குத் தாரும். 4 எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோர் அனைவரையும் நாங்கள் மன்னிப்பதால் எங்கள் பாவங்களையும் மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். (தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும் ' ) என்று கற்பித்தார். 5 மேலும் அவர் அவர்களை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: ' உங்களுள் ஒருவர் தம் நண்பரிடம் நள்ளிரவில் சென்று, ' நண்பா, மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகக் கொடு. 6 என்னுடைய நண்பர் ஒருவர் பயணம் செய்யும் வழியில் என்னிடம் வந்திருக்கிறார். அவருக்குக் கொடுக்க என்னிடம் ஒன்றுமில்லை ' என்று சொல்வதாக வைத்துக் கொள்வோம். 7 உள்ளே இருப்பவர், ' எனக்குத் தொல்லை கொடுக்காதே; ஏற்கெனவே கதவு பூட்டியாயிற்று; என் பிள்ளைகளும் என்னோடு படுத்திருக்கிறார்கள். நான் எழுந்திருந்து உனக்குத் தர முடியாது ' என்பார். 8 எனினும் அவர் விடாப்பிடியாய்க் கதவைத் தட்டிக் கொண்டேயிருந்தால் அவர் தம் நண்பர் என்பதற்காக எழுந்து கொடுக்காவிட்டாலும், அவரது தொல்லையின் பொருட்டாவது எழுந்து அவருக்குத் தேவையானதைக் கொடுப்பார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். 9 ' மேலும் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும். 10 ஏனெனில் கேட்போர் எல்லாரும் பெற்றுக்கொள்கின்றனர்; தேடுவோர் கண்டடைகின்றனர்; தட்டுவோருக்குத் திறக்கப்படும். 11 பிள்ளை மீனைக் கேட்டால் உங்களுள் எந்தத் தந்தையாவது மீனுக்குப் பதிலாகப் பாம்பைக் கொடுப்பாரா? 12 முட்டையைக் கேட்டால் அவர் தேளைக் கொடுப்பாரா? 13 தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பது எத்துணை உறுதி! '

http://www.arulvakku.com


இன்றைய நற்செய்தியில், எப்படி விசுவாசத்தோடு, வேண்டுவது என்று யேசு நமக்கு சொல்லி கொடுக்கிறார். அவர் கூறும் நீதி கதையில், நாம் கேட்பதெல்லாம் நமக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவேண்டாம் என்று குறிப்பிடபடுகிறது. எல்லாமே நமக்கு நன்மை தராது. 'உணவு' என்று இந்த நற்செய்தியில் குறிப்பிடபடுவதன் அர்த்தம் 'புனித வாழ்வு' ஆகும். -- "வாழ்வின் உணவு" யேசுவே. புனித வாழ்வு தான், பரிசுத்த ஆவியின் அன்பளிப்பு ஆகும். அவர் தான் நமக்கு வாழ்க்கை கொடுப்பவர்.

இந்த நீதிகதையின் வரும் அன்பர் கடவுளின் நண்பர் ஆவார். அவர் புதியவர் அல்ல. அவர் தனது நண்பரோடு உணவை பகிர்ந்து கொள்ள விரும்பினார். இது ஞானஸ்தானம் பெற்ற கிறிஸ்தவர்கள், கடவுளின் நட்பை ( "மூன்று ப்ரெட் - திரித்துவம்" ) மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதை குறிக்கிறது. ஆனால், நானோ, நீயோ இந்த செயலை/ கடமையை செய்ய போதுமான தகுதி இல்லை.

நாம் நம்முடைய தகுதியின்மைக்காக, அதனை நிறைவு செய்ய வேண்டி கடவுளின் இதயத்தை தட்டும்போது அவர் பரிசுத்த ஆவியை தருகிறார்.பரிசுத்த ஆவி முழுமையானவர். அவரிடமிருந்து எல்லாமே நமக்கு கிடைப்பதில்லை. நாம் இறைவனிடம் வேண்டும் போதெல்லாம், நாம் யேசுவின் பரிசுத்த ஆவ்யின் மூலம் கடவுளோடு சேர்கிரோம். அதனால், ஒவ்வொரு ஜெபத்திலும், நாம் இறைவனோடு அருகில் சேருகிறோம், மேலும், நமது புனிதம் அதிகமாகிறது.ஆனால், புனிதம் அவ்வளவு சீக்கிரத்திலோ அல்லது சுலபமாக வந்துவிடாது. நாம் நமது வாழ்வில் இடைவிடாது ஜெபிக்க வேண்டும். நமக்கு தவறு செய்ய தூண்டப்படும் நேரங்களில், தொடர்ந்து கடவுளிடம் சென்று அவரிடம் ஜெபிக்க வேண்டும்.


நாம் எதை கடவுளிடம் கேட்டாலும், நமக்கு தேவையான பொருட்களை கேட்டாலும், அந்த வேண்டுதல், நமது ஆண்மாவை வளர்க்க உதவியாக இருக்க வேண்டும். இதனை தான், நாம் ஜெபத்தில், அவரிடம் கேட்கிறோம் , "எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்" அது ஆண்ம உணவு. இடைவிடாது ஜெபியுங்கள், இந்த உணவு ஒரே இரவில் கிடைப்பதில்லை. (நாம் மிகவும் மெதுவாக கற்று கொள்பவர்கள்)

சாத்தான் தான், நீங்கள் கேட்பதெல்லாம் விரைவில் கிடைக்கும் என்று கூறுகிறது. இன்றைய நாகரிகமும், புதிய மந்திர முறைகளும், விரைவு உணவு தெய்வீகமாகும். அது தவறான நம்பிக்கையும், தேவையில்லாத கொழுப்பையும் கொடுக்கும். இவைகளால், பரிசுத்த ஆவ்யின் மூலம் கிடைக்கும், நமது புனித வாழ்வின் வளர்ச்சி தடைபடுகிறது. நிறைய பேர், தொடர்ந்து புனித வாழ்வின் பாதையில் செல்ல விரும்புவதை விட, மந்திர , ஜாதக முறையை தான் நோக்கி செல்கின்றனர்.

பரிசுத்த ஆவ்யின் மூலம் கிடைக்கும் நிறைவான தகுதிகள், நாம் கேட்க கூடியதுதான். ஏனெனில், நம்முடைய ஞானஸ்நானத்தில் நமக்கு பரிசுத்த ஆவியின் கொடைகள் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இருந்தும், கடவுளின் முழு தெய்வீக ஆற்றலில் வாழ்வதற்கு, நாம் இடைவிடாது ஜெபித்து , தொடர்ந்து நமது பாவங்களை கண்டறிந்து, மனம் திருந்தி, நம் சுய ஆசைகளை தூக்கிபோட்டு விட்டு, பரிசுத்த ஆவியின் புனித வாழ்விற்கு தாழ்மையுடன் மனம் திறந்து அவரை ஏற்று கொள்ளுங்கள்.

சுய பரிசோதனைக்கான கேள்வி:

எந்த அளவிற்கு தினமும் பரிசுத்த ஆவியை சார்ந்து இருக்கிறீர்கள். எத்தனை முறை கடவுளிடம் தாழ்மையுடன் வேண்டி, அதிக புனிதத்திற்காக ஜெபம் செய்கிறீர்கள்.
© 2007 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Saturday, July 21, 2007

ஜூலை 22 மறையுரை & நற்செய்தி

ஜூலை 22 2007


லூக்கா நற்செய்தி

அதிகாரம் 10

38 அவர்கள் தொடர்ந்து சென்று கொண்டிருந்தார்கள். அப்போது இயேசு ஓர் ஊரை அடைந்தார். அங்கே பெண் ஒருவர் அவரைத் தம் வீட்டில் வரவேற்றார். அவர் பெயர் மார்த்தா. 39 அவருக்கு மரியா என்னும் சகோதரி ஒருவர் இருந்தார். மரியா ஆண்டவருடைய காலடி அருகில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார். 40 ஆனால் மார்த்தா பற்பல பணிகள் புரிவதில் பரபரப்பாகி இயேசுவிடம் வந்து, ' ஆண்டவரே, நான் பணிவிடை செய்ய என் சகோதரி என்னைத் தனியே விட்டு விட்டாளே, உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவி புரியும்படி அவளிடம் சொல்லும் ' என்றார். 41 ஆண்டவர் அவரைப் பார்த்து, ' மார்த்தா, மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். 42 ஆனால் தேவையானது ஒன்றே. மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக்கொண்டாள்; அது அவளிடமிருந்து எடுக்கப்படாது ' என்றார்.

(http://www.arulvakku.com)
மறையுரை

இன்றைய நற்செய்தியில், யேசு நம் மன கவலைகளையும், மற்றும் வேதனைகளையும் பற்றி பேசுகிறார். இதனால், நாம் தடுமாறுவோம். கவனத்தை திசை திருப்பும். அந்த கவலைகள் உங்களை பாதிக்கும், ஏனெனில், அந்த கவலைகள் எல்லாம், நாம் கடவுள் மேல் எப்போதுமே வைக்க வேண்டிய கண்களை, அவரையே சார்ந்திருக்கும் நமது வாழ்வை திசை திருப்பி, நம் கவலைகளால் ஏதாவது தவறாகிவிடுமோ, நமது நிலை இன்னும் கீழ் நிலைக்கு தள்ளப்படுமோ? என்கிற எண்ணமே நம்மில் இருக்கும். அண்ணை மரியாள், "நல்ல விசயத்தை/முடிவை" தெரிவு செய்தாள். அவளுடை வாழ்வின் மிக முக்கியமான விசயம் என்னவென்றால், அவள் எப்போதுமே யேசுவிடமிருந்து கற்றுகொண்டிருந்தாள். நாம் நம்முடைய சுறுசுறுப்பான வாழ்க்கையை ஒருபக்கம் ஒதுக்கி வைத்துவிட்டு, யேசுவிடமிருந்து கற்றுகொள்வோம். நாம் நம் கவலைகள் நிஜமாகவே கவலைக்குறியது அல்ல என்று யேசுவிடம் கற்றுகொள்வோம். நாம் யேசுவின் காலடியில் அமைதியாக உட்கார்ந்து அவரிடம் கேட்டால் தான், நாம் நம்பிக்கை பெறுவோம். அந்த நம்பிக்கை மன சஞ்சலத்தை போக்கும், மன கவலைகளை போக்கிவிடும். யேசுவின் மூலம் பெறும் ஞானத்தால், இந்த சோதனைகளிலிருந்து மீண்டு வருவோம். மார்த்தாள் படும் கவலை போல், மிக சிறிய கவலைகூட, நம் கண்களை யேசுவிடமிருந்து எடுத்து சென்று விடும். இது மாதிரி சிறு கவலை கூட பாவமாகும். யேசுவிடமிருந்து நம்மை திசை திருப்பும் எதுவும் பாவமாகும்.

நாம் ஏசுவை கவனித்து, அவரிடமிருந்து எப்படி பரிசுத்தத்துடன் இருப்பது என்று கற்றுகொண்டால்தான், நாம் பரிசத்துடனும், புனிதத்துடனும் வளர முடியும். அவர் அன்பு செய்வது போல் நம்மால் அன்பு செய்ய முடியாது. நாம் மற்ற்வர்களிடமிருந்து அன்பை பெற முடியாது. நாம் அமைதியான முறையில் யேசுவோடு அமர்ந்து, அவரோடு அரவணைப்பில் சிறிது நேரம் செலவிட்டால் தான் நாம் அவரை போல் அன்பு செய்ய முடியும், யேசுவை போல வாழ முடியும். கார் ஓட்டும் போது, அல்லது மர்றவர்களிடம் பேசும்போதும் ஜெபம் செய்வதும், அல்லது ஞாயிறு அன்று பிரசங்கம் கேட்பதும் போதுமானது அல்ல.

மனக்கவலைகள், குழப்பங்கள் எல்லாம் பயத்திலிருந்து வருபவை. பயம்தான் நம்மை யேசுவை நம் காட்சியிலிருந்து தொந்தரவு செய்கிறது. நாம் பயத்தை புரிந்து கொண்டு, அது மாதிரி நேரங்களில், யேசுவிடம் சென்று, அவரோடு அமர்ந்து, உங்கள் ப்ரச்னையை யேசுவிடம் பேசுங்கள். அவரிடம் அதற்கு பதில் இருக்கும். அவரிடமிருந்து உஙக்கு தேவையான உற்சாகமும், உறுதியும் கிடைக்கும்.

சுய பரிசோதனிக்கான கேள்வி:

உங்களிடம் எந்த கவலை அதிகம் கவலை கொள்ள செய்கிறது. எது உன்னை அதிகம் ஆர்வத்தை, எந்த ப்ரச்னை உன்னை பயமுறுத்துகிறது. அதையெல்லாம், ஒரு காகிதத்தில் எழுதுங்கள். அதனை யேசுவிடம் எடுத்து செல்லுங்கள். பரிசுத்த ஆவியிடம் வேண்டுங்கள். யேசு உனக்கு கற்று கொடுக்கும் பாடத்தை கற்றுகொள்ள பரிசுத்த ஆவி உங்களுக்கு உதவுவார். பைபிளை தேடுங்கள், உங்க்ளுக்கு உற்சாகமான செய்தி கிடைக்கும்.


© 2007 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

Saturday, July 14, 2007

july 15th sunday - நற்செய்தி & மறையுரை

லூக்கா நற்செய்தி

அதிகாரம் 10

25 திருச்சட்ட அறிஞர் ஒருவர் எழுந்து அவரைச் சோதிக்கும் நோக்குடன், ' போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்? ' என்று கேட்டார். 26 அதற்கு இயேசு, ' திருச்சட்ட நூலில் என்ன எழுதியிருக்கிறது? அதில் நீர் என்ன வாசிக்கிறீர்? ' என்று அவரிடம் கேட்டார். 27 அவர் மறுமொழியாக, ' உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக. உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக ' என்று எழுதியுள்ளது ' என்றார். 28 இயேசு, ' சரியாய்ச் சொன்னீர்; அப்படியே செய்யும்; அப்பொழுது வாழ்வீர் ' என்றார். 29 அவர், தம்மை நேர்மையாளர் எனக் காட்ட விரும்பி, ' எனக்கு அடுத்திருப்பவர் யார்? ' என்று இயேசுவிடம் கேட்டார். 30 அதற்கு அவர் மறுமொழியாகக் கூறிய உவமை: ' ஒருவர் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகும்போது கள்வர் கையில் அகப்பட்டார். அவருடைய ஆடைகளை அவர்கள் உரிந்து கொண்டு, அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுப் போனார்கள். 31 குரு ஒருவர் தற்செயலாய் அவ்வழியே வந்தார். அவர் அவரைக் கண்டதும் மறு பக்கம் விலகிச் சென்றார். 32 அவ்வாறே லேவியர் ஒருவரும் அவ்விடத்துக்கு வந்து அவரைக் கண்டதும் மறுபக்கமாய் விலகிச் சென்றார். 33 ஆனால் அவ்வழியே பயணம் செய்துகொண்டிருந்த சமாரியர் ஒருவர் அருகில் வந்து அவரைக் கண்டபோது அவர்மீது பரிவு கொண்டார். 34 அவர் அவரை அணுகி, காயங்களில் திராட்சை மதுவும் எண்ணெயும் வார்த்து, அவற்றைக் கட்டி, தாம் பயணம் செய்த விலங்கின் மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டுபோய் அவரைக் கவனித்துக் கொண்டார். 35 மறுநாள் இருதெனாரியத்தை எடுத்து, சாவடிப் பொறுப்பாளரிடம் கொடுத்து, ' இவரைக் கவனித்துக் கொள்ளும்; இதற்கு மேல் செலவானால் நான் திரும்பி வரும்போது உமக்குத் தருவேன் ' என்றார். 36 ' கள்வர் கையில் அகப்பட்டவருக்கு இம்மூவருள் எவர் அடுத்திருப்பவர் என உமக்குத் தோன்றுகிறது? ' என்று இயேசு கேட்டார். 37 அதற்கு திருச்சட்ட அறிஞர், ' அவருக்கு இரக்கம் காட்டியவரே ' என்றார். இயேசு, ' நீரும் போய் அப்படியே செய்யும் ' என்று கூறினார்.

(http://www.arulvakku.com)


மறையுரை:

அன்பின் எதிர்பதம் வெறுப்பு அல்ல, "அக்கறையின்மை": ஒரு தேவையான விசயத்தை ஒதுக்கி தள்ளுதல், ஒரு துன்பத்திலிருந்து விடுபட, நாம் ஏதாவது செய்ய வேண்டிய நேரத்தில், ஒன்றும் செய்யாமல் சும்மா இருப்பது, அக்கறையோடு இல்லாமல் இருப்பது தான் அன்பின் எதிர் செயல்கள் ஆகும். இன்றைய நற்செய்தியில், நல்ல சமாரியனின் கதையை விளக்குகிறார். நாம் கடவுளை நமது முழு உள்ளத்தோடும், நமது முழு சக்தியோடும் அன்பு செய்தோமானால், தாமாகவே மற்றவர்கள் மேல் அக்கறை கொள்வோம். அவர்கள் புதியவர்கள் ஆக இருந்தாலும், அல்லது நாம் நமக்கு பிடிக்க தேவையில்லை என்று இருந்தாலும், அவர்கள் மேல் அக்கறை கொள்ள வேண்டும்.

இன்றைய உலகில் உள்ள ப்ரச்னைகள், மேலும் தொடர்ந்து கொண்டே இருப்பதற்கு காரணம், நாம் கிறிஸ்தவர்கள், எதிலும் ஈடுபடாமல் இருப்பதுதான். கிறிஸ்துவின் மூலம், நம்மால் இந்த உலகை மாற்ற முடிந்தாலும், நாம் அதை செய்வதில்லை. நாம் நம் நேரங்களை, நம்முடைய சுய விருப்பங்களை தியாகம் செய்து, மற்ற விசயங்களில் ஈடுபடுவதில்லை. பல பிரச்னைகள், நம் குடும்பத்தில் அல்லது அலுவலகங்களில், நம் பங்கில் தொடர்ந்து கொண்டிருப்பத்தற்கு, நாம் மற்றவர்கள் மேல் அக்கறையின்றி இருப்பதே காரனம். நாம் முழுமையாக கடவுளை நேசித்து, இது மாதிரியான பிரச்னைகளில் நுழைந்து, அவர்கள் மேல் அக்கறை காட்டினால், எல்லாம் நல்லபடியாக முடியும்.

எந்த அளவிற்கு, நீ கடவுளை அன்பு செய்கிறாய்.இதற்கு பதில், நீ எவ்வளவு மற்றவர்களுக்காக உன்னையே தியாகம் செய்கிறாய் என்பதை பொறுத்து இருக்கிறது. இதுதான் அன்பின் இலக்கனம், இதை தான் யேசு இன்றைய நர்செய்தில் இந்த உவமானம் மூலம் விளக்குகிறார். நாம் யாருமே கடவுளை மிக சரியாக அன்பு செய்வதில்லை. உத்தரிக்கிற ஆன்ம ஸ்தலத்தில் தான், நாம் முழுமையாக அன்பு செய்யாததற்கு, நாம் மனம் வருந்துவோம். அதன் மூலம், கடவுளின் முழு அன்பில் திளைத்து மோட்சத்தில் நுழைவோம். அது வரை, நமக்கு நம் வாழ்வை வலியில்லாமல் சுத்தமாக்குவதற்கு நமக்கு வாய்ப்புகள் உண்டு. நமக்கு , நாம் எவ்வளவு அன்பு செஇய்கிறோம் என்பதற்கு, நமக்கு சோதனைகல் கிடைக்கும். அதன் மூலம் மற்றவர்களை அன்பு செய்வதை முன்னேற்றி கொள்ள வேண்டும். பரிசுத்த ஆவியிடம் கேள், அவர் தான் உனது ஆசிரியர், உனது அரசர், உனது புனிததின் வேர், அவரிடம் நீ கிறிஸ்துவை போல மாற உதவி கேள். யேசு மற்றவர்களை அன்பு செய்வது போல, நீயும் அன்பு செய்ய உதவுமாறு, பரிசுத்த ஆவியிடம் கேள். இந்த ஆவியின் பயிற்சி, நாட்களாக, வாரங்களாக தொடர, நீ கடவுளை மேலும் அன்பு செய்கிறோம், என்பதை அறிவாய். மேலும் அவரின் அன்பை முழுமையாக உள்ளுனர்வோடு அனுபவிப்பாய்.

சுய பரிசோதனைக்கான கேள்வி:
நீ யாரையாவது, அவர்கள் வலியோடு இருக்கும்போது ஒதுங்கி சென்றிறுக்கிறாயா? யாராவது உன்னிடமிருந்து விலகி சென்று இருக்கிறார்களா? உங்களின் தற்பெருமயால், மன்னிக்காமல் இருப்பதால், தவறான் எண்ணத்தால், விலகியிருக்கிறார்களா?. நீ இதனால், அக்கறையில்லாமல், இருக்காதீர்கள். உன்னுடைய குற்றத்தை ஒத்துக்கொள். அதனை நற்கருணை ஆண்டவரிடம் எடுத்து சென்று, பாவ மன்னிப்பு கேள், அதன் மூலம் கடவுளின் முழு அன்பினை பெற்று, மர்றவர்களை மேலும் முழுமையாக அன்பு செய்.
(http://gnm.org)

Friday, July 6, 2007

july 8th sunday : நற்செய்தி
Isaiah 66:10-14c
Ps 66:1-7, 16, 20
Gal 6:14-18
Luke 10:1-12, 17-20

லூக்கா நற்செய்தி

அதிகாரம் 10

1 இதற்குப்பின்பு ஆண்டவர் வேறு எழுபத்திரண்டு பேரை நியமித்து, அவர்களைத் தாம் போகவிருந்த எல்லா ஊர்களுக்கும் இடங்களுக்கும் தமக்கு முன்னே இருவர் இருவராக அனுப்பினார். 2 அப்போது அவர் அவர்களை நோக்கிக் கூறியது: ' அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள். 3 புறப்பட்டுப் போங்கள்; ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன். 4 பணப்பையோ வேறு பையோ மிதியடிகளோ எதுவும் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டாம்; வழியில் எவருக்கும் வணக்கம் செலுத்த வேண்டாம். 5 நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், ' இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக! ' என முதலில் கூறுங்கள். 6 அமைதியை விரும்புபவர் அங்கு இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும்; இல்லாவிட்டால் அது உங்களிடமே திரும்பிவிடும். 7 அவர்களிடம் உள்ளதை நீங்கள் உண்டு குடித்து அந்த வீட்டிலேயே தங்கியிருங்கள். ஏனெனில் வேலையாளர் தம் கூலிக்கு உரிமை உடையவரே; வீடுவீடாய்ச் செல்ல வேண்டாம். 8 நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக்கொண்டால் உங்களுக்குப் பரிமாறுவதை உண்ணுங்கள். 9 அங்கு உடல் நலம் குன்றியோரைக் குணமாக்கி, இறையாட்சி அவர்களை நெருங்கி வந்துவிட்டது எனச் சொல்லுங்கள். 10 நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக் கொள்ளாவிட்டால் அதன் வீதிகளில் சென்று, 11 ' எங்கள் கால்களில் ஒட்டியுள்ள உங்கள் ஊர்த் தூசியையும் உதறிவிடுகிறோம். ஆயினும் இறையாட்சி நெருங்கி வந்து விட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள் ' எனச் சொல்லுங்கள். 12 அந்த நாளில் அவ்வ+ர் பெறும் தண்டனை சோதோம் நகரினர் பெறும் தண்டனையை விட கடினமாகவே இருக்கும் என உங்களுக்குச் சொல்கிறேன்.
17 பின்னர் எழுபத்திரண்டு பேரும் மகிழ்வுடன் திரும்பிவந்து, ' ஆண்டவரே, உமது பெயரைச் சொன்னால் பேய்கள் கூட எங்களுக்கு அடிபணிகின்றன ' என்றனர். 18 அதற்கு அவர், ' வானத்திலிருந்து சாத்தான் மின்னலைப் போல விழக் கண்டேன். 19 பாம்புகளையும் தேள்களையும் மிதிக்கவும், பகைவரின் வல்லமை அனைத்தையும் வெல்லவும் உங்களுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறேன். உங்களுக்கு எதுவுமே தீங்கு விளைவிக்காது. 20 ஆயினும் தீய ஆவிகள் உங்களுக்கு அடிபணிகின்றன என்பதுபற்றி மகிழவேண்டாம். மாறாக, உங்கள் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்பது பற்றியே மகிழுங்கள் ' என்றார்.


http://www.arulvakku.com

மறையுரை:

இன்றைய நற்செய்தியில், "அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்." கடவுளிடம் வேண்டும் படி யேசு தனது சீடர்களிடம் கூறுகிறார். அடுத்த வார்த்தையாக "நீங்களெல்லாம், வேலையாட்கள், புறப்பட்டு போங்கள்" என்று கூறுகிறார்.

நீங்கள் கடவுளிடம் அதிக அருட்பணிக்கு அதிகம் பேரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வேண்டுவதுன்டா? அதுதான் யேசு உங்களிடம் கேட்கிறார். யேசு உங்களை "புறப்பட்டு செல்லுங்கள்" என்று கூறுகிறார். "உங்கள் அன்பளிப்புகள், திறமைகள், ஆற்றல்கள் அனைத்தையும் உபயோகியுங்கள்" என்று கூறி, ஆண்டவரின் அறுவடைக்கு உதவுங்கள் என்று சொல்கிறார்.

யேசு எப்போதுமே ஒன்றிணைந்து சேவை செய்பவர். இறைசேவக்கு தேவையான் ஆட்கள், நாம் எல்லாம், திருச்சபை குருக்கள், கன்னியாஸ்திரிகள் ஆகியோரோடு சேர்ந்து தான் , எல்லாருடைய திறமை, ஆற்றல், ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து, இறைசேவையை தொடர வேண்டும்.

இறைசேவைக்கு போதுமான ஆட்கள் இருக்கிறார்கள், என்ற நிலை வர, "வேறு பலர் இதனை செய்வார்கள்" என்ற நிணைப்பை விட்டு விட வேன்டும். நம்மில் சிலர் 'எல்லாவற்றையும் மிக சரியாக செய்ய வேண்டும்' என்ற நினைப்பை விட்டு விலக்க வேண்டும். மேலும், 'நான் என்னை பார்த்து கொள்வேன்' என்று நினைத்தால், மற்றவர்கள் உமக்கு சேவை செய்ய கிடைக்க வேண்டிய சந்தர்பம் இல்லாமல் போய்விடும்.

மற்றும் சிலர், தனது சுய கட்டுபாடு இழந்து விடுவோமோ ? என்ற பயத்தை போக்க வேண்டும். "நான் தான் மற்றவர்களுக்கு என்ன வேலை செய்ய வேண்டும் என்று சொல்வேன்" என்று சொல்பவர்கள், திறமையான பல சேவையாளர்களை விரட்டி விடுவர். யேசு சொல்கிறார்"நீங்கள் எந்த பொருளும் எடுத்து செல்ல வேண்டாம், நமக்கு என்ன கொடுக்கபடுகிறதோ, அதையே பெற்றுக்க்கொள்ள வேண்டும்"

இறைசேவைக்கு நிறைய ஆட்கள் அதிகரிக்க, நாம் இறைவனிடம் வேண்டுவது, நம்முடைய ஒன்ரினைந்த சேவையிலிருந்து கிடைக்கிறது. திருச்சபைக்கு பல முன்மாதிரியான ஆட்கள் இருந்து மற்றவர்களை ஈர்க்க வேண்டும். ஆனால், இல்லறத்தாரும், நாம் எப்படி எதிர்பார்க்கிறோமோ , அதே எதிர் பார்ப்போடு இறைவனுக்கு சேவை செய்ய வேன்டும்,
அதே பரிசுத்தத்துடன் தொடர்ந்து செய்ய வேன்டும்.

http://gnm.org